Published:Updated:

திருமகளே வருக!

திருமகளே வருக
பிரீமியம் ஸ்டோரி
திருமகளே வருக

திருமகளே வருக!

திருமகளே வருக!

திருமகளே வருக!

Published:Updated:
திருமகளே வருக
பிரீமியம் ஸ்டோரி
திருமகளே வருக

திருமாங்கல்யம்... லட்சுமி தீபம்!

மாங்கல்யம், திருவாகிய சௌபாக்கிய லட்சுமியின் வடிவமாகும். எனவே, அதை திருமாங்கல்யம் என்பர். தாலியில் மகாலட்சுமியின் உருவம் அமைந்த பொட்டையும் சேர்த்துக்கொள்வது உண்டு. இதற்கு மகாலட்சுமிப் பொட்டு என்று பெயர்.

விளக்கில் வாசம் செய்பவள் மகா லட்சுமி. எனவே, திருவிளக்கை தீபலட்சுமி என்பர். விளக்கேற்றுவது 'திருமகளே வருக' என அலைமகளை நம் இல்லத்துக்கு வரவேற்பதாகும். விளக்கொளி நிறைந்த வீடுகள் திருமகளின் நிரந்தர வசிப்பிடமாகும்.

மகாலட்சுமி
மகாலட்சுமி

காஞ்சியில் அருளும் மகாதேவி!

திருமகளின் அவதாரச் சிறப்பை விளக்கும்படி கேட்ட மைத்ரேய முனிவருக்கு அன்னையின் மகிமையை விவரித்த பராசர மகரிஷி, `பிராட்டியின் திவ்ய கடாட்சம் பெற்றதால்தான் மூவுலகமும் மங்கலம் நிறைந்ததாகின’ என்றும் விளக்கினாராம்.

சுவாமி தேசிகனும் `திரு உரையாய் தாம் பொருளாய் நிற்பார் வந்தார்’ என்றே பெருமாளைச் சிறப்பிக்கிறார். காஞ்சியில் உறையும் பெருந்தேவித் தாயார் இவருக்கு அருள்செய்த விதம் அலாதியானது.

காஞ்சி அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில், கல்யாண கோடி விமானத்தின் கீழ், தனிச் சந்நிதியில் அருள்பாலிக் கிறார், பெருந்தேவி தாயார். கிழக்கு நோக்கி இரு தாமரை மலர்களை ஏந்தி, அபய-வரத கரங்களுடன், பட்டாடை- அணிமணிகளுடன் பொன் மகுடம் தரித்து, அமர்ந்த கோலத்தில் கருணை நாயகியாகக் காட்சி தருகிறார். இவருக்கு `அரித்ரா தேவி’, `மகாதேவி’ ஆகிய பெயர்களும் உண்டு. அருகில் தாயாரின் உற்சவர்.

இந்த ஆலயத்தில் நடைபெறும் பிரம்மோற்சவத்தின்போது பெரு மாள் மட்டுமே திருவீதி உலா வருவார். பெருந்தேவித் தாயாருக்கு திருவீதி புறப்பாடு கிடையாது. எனவே தாயாரை, ‘படி தாண்டாப் பத்தினி’ என்பர். வறியவன் ஒருவனுக்காக, இந்தத் தாயாரிடம் வேண்டி ஸ்ரீதுதி பாடினார் வேதாந்த தேசிகர். அதனால் மகிழ்ந்த தாயார், பொன் மழை பெய்வித்து தேசிகரின் பெருமையை உலகறி யச் செய்தாராம்!

ஐயாறப்பர் ஆலயத்தில்...

சிவாலயங்களில் உட்பிராகாரத்தில் வடமேற்கில் திருமாளிகை பத்ததியில்தான், மகாலட்சுமிக்குச் சந்நிதி அமைந்திருக்கும். ஆனால், திருவையாறு ஐயாறப்பர் ஆலயத்தில் மகாலட்சுமிக்குத் தனி சிற்றாலயமே அமைந்துள்ளது. மூன்று கலசங்கள் கொண்ட சாலஹார விமானத்துடன் அமைந்த இந்தச் சந்நிதியில், பெரிய திருவுருவில் தரிசனம் தருகிறாள் மகாலட்சுமி. அருகிலேயே சரஸ்வ தியும் உண்டு. மேலும், இந்த சிற்றாலயத்தின் முன்மண்டபம் சற்று நீண்டு, துர்கை மண்டபத்துடன் இணைந்துள்ளது. ஆக, முப்பெருந் தேவியரையும் ஒருசேர தரிசிக்கலாம்.

மதியப் பொழுதில் மகாலட்சுமி!

கேரளா-சோட்டாணிக்கரையில், லட்சுமி நாராயண தத்துவத்துடன் எழுந்தருளியிருக்கிறாள் ஆதிபராசக்தி. இங்கே தரிசனம் தரும் சிவப்பு வெட்டுக்கல்-பகவதி அம்மனாகவும், வலப்புறம் உள்ள சிறிய கருங்கல்-மகா விஷ்ணுவாகவும் பூஜிக்கப்படுகின்றன. இங்கே காலையில்- வெண்ணிற ஆடை யுடன் சரஸ்வதிதேவியாகவும், மதியம்- செந்நிற ஆடையுடன் லட்சுமி யாகவும், மாலை வேளையில்- நீல நிற ஆடையுடன் துர்கையாகவும் காட்சி தருகிறாள் அம்மன்.

தொகுப்பு: எஸ்.புவனா, சென்னை-74