Published:Updated:

நவராத்திரி: முதல்படி முதல் கடைசிப்படி வரை... எந்தெந்த பொம்மைகள் வைக்கலாம்? #GoluGuidance

நவராத்திரி
நவராத்திரி

பொதுவாக, ஒவ்வொருபடியிலும் என்னென்ன பொம்மைகள் வைக்க வேண்டும் என்பது குறித்துக் கூறும்போது, உயிர்களின் அறிவின் அடிப்படையில் பொம்மைகளின் வரிசை அமைய வேண்டும் என்று சொல்வதுண்டு.

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி 10 நாள்களுக்குக் கொண்டாடப்படும் பண்டிகையே நவராத்திரியாகும். இதன்படி நாளை சனிக்கிழமை (17.10.2020 முதல் 28.10.2020 வரை) நவராத்திரி கொண்டாட்டம் நடைபெறுகிறது.
நவராத்திரி கொலு பொம்மைகள்
நவராத்திரி கொலு பொம்மைகள்
ரா.ராம்குமார்

படைத்தல், காத்தல், அழித்தல் எனும் மூன்று சக்திகளைக் கொண்ட அன்னையின் அருள் வேண்டி பூஜை செய்வதே நவராத்திரி வழிபாடாகும். நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கன்னிகையர்களை பூஜிக்க வேண்டும்.

நவராத்திரியின் முதல் மூன்று நாள்களும் இச்சா சக்தியின் தோற்றமான துர்கையின் ஆட்சிக்காலம் என்றும், நடுவில் உள்ள மூன்று நாள்களும் ஞானசக்தியின் தோற்றமான லட்சுமியின் ஆட்சிக்காலம் என்றும், இறுதி மூன்று நாள்களும் கிரியா சக்தியின் தோற்றமான சரஸ்வதியின் ஆட்சிக்காலம் என்றும்  சாஸ்த்திரத்தில் வகைபடுத்தியுள்ளனர்.

நவராத்திரியின் சிறப்பே பலவிதமான, மண்ணாலான பொம்மைகளை வைத்து கொலு வைப்பதுதான். அவரவர் வசதிப்படி முப்பெரும் தேவியைக் குறிக்கும் விதமாக மூன்று படிகளாகவோ அல்லது சக்தியின் சக்கரத்தை குறிக்கும் விதமாக ஐந்து படிகளாகவோ, சப்தமாதர்களை குறிக்கும் ஏழு படிகளாகவோ, நவகிரகங்களை குறிக்கும் ஒன்பது படிகளாகவோ வைக்கலாம்.

பொதுவாக கொலுப்படிகளில் பொம்மைகளை அடுக்கும்போது, கடைசி படிக்கு மேல்படியிலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். முதலில் விக்னங்கள் தீர்க்கும் விநாயகரை கொலுப்படியில் வைத்த பிறகே மற்ற பொம்மைகளை வைக்க வேண்டும்.

நவராத்திரி
நவராத்திரி
பொதுவாக, ஒவ்வொருபடியிலும் என்னென்ன பொம்மைகள் வைக்க வேண்டும் என்பது குறித்துக் கூறும்போது, உயிர்களின் அறிவின் அடிப்படையில் பொம்மைகளின் வரிசை அமைய வேண்டும் என்று சொல்வதுண்டு.
  • அதாவது, முதல் படியில் ஓரறிவு உடைய உயிரினமான புல், செடி, கொடி போன்ற தாவரப் பொம்மைகள்.

  • இரண்டாம் படியில் இரண்டறிவு உடைய நத்தை, சங்கு பொம்மைகள்.

  • மூன்றாம் படியில் மூன்றறிவு உடைய கரையான், எறும்பு பொம்மைகள்.

  • நான்காவது படியில் நான்கு அறிவு உடைய நண்டு, வண்டு பொம்மைகள்.

  • ஐந்தாம் படியில் ஐந்து அறிவு கொண்ட நான்கு கால் விலங்குகள், பறவைகளின் பொம்மைகள்.

  • ஆறாம் படியில் ஆறறிவு உடைய மனிதர்களின் பொம்மைகள்.

  • ஏழாம் படியில் சாதாரண மனிதர்களுக்கு மேலான மகரிஷிகளின் பொம்மைகள்.

  • எட்டாம் படியில் தேவர்களின் உருவங்கள், நவகிரக பகவான்கள், பஞ்சபூத தெய்வங்களின் பொம்மைகள்.

மங்களம் அருளும் சகஸ்ர சண்டியாகம்; சிலிர்ப்பூட்டும் சக்தி லீலா... திருவடிசூலத்தில் நவராத்திரி!
  • ஒன்பதாம் படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளையும், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய பெண் தெய்வங்களையும் வைக்க வேண்டும். இதில், சரஸ்வதிக்கும் - லட்சுமிக்கும் நடுவில் அன்னை சக்திதேவி இருக்குமாறு வைக்க வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால் பலருக்கும் அவ்வாறு அமைக்க இயலாது.

  • அதே வேளையில் இதற்குத் தத்வார்த்த விளக்கம் கூறும்போது ஆதி சக்தி உலகின் சகல உயிர்களிலும் அந்தர்யாமியாக இருப்பவள் என்பதனால் சகல அறிவுடைய உயிர்களின் பொம்மைகளையும் வைத்து வணங்க வேண்டும் என்பதுதான் இதன் பொருள் என்று கூறுவர்.

நவராத்திரியில் கொலுவைத்து முப்பெரும் தேவியர்களின் அருள் பெறலாமே!

அடுத்த கட்டுரைக்கு