Published:Updated:

நலம் தரும் நவராத்திரி வழிபாடு!

நவராத்திரி வழிபாடு
பிரீமியம் ஸ்டோரி
News
நவராத்திரி வழிபாடு

நவராத்திரி பூஜை செய்வோர் அதற்கான ஏற்பாடுகளை, நவராத்திரி தொடங்குவதற்கு முதல் (அமாவாசை) நாளிலேயே, செய்து கொள்ள வேண்டும்.

சக்தி வழிபாட்டின் மேன்மையை நவராத்திரி என்ற பெயரில் ஞானநூல்கள் விவரிக்கின்றன. கடும் கோடைக்காலமும், மழைக்காலமும் (சித்திரை, வைகாசி - ஐப்பசி, கார்த்திகை) எமனின் கோரைப்பற்கள் என்கிறது தேவி பாகவதம். இந்தக் காலங்களில் தோன்றும் கொடுமையான பற்பல நோய்களில் இருந்து நம்மைக் காப்பவள் அம்பிகை. எனவேதான் இந்தக் காலகட்டங்களில், அம்பிகையை வழிபட்டு அவளின் திருவருளை அடைய வேண்டும் என்ற நோக்கில், நவராத்திரி வழிபாட்டு மகிமைகளையும், பலாபலன்களையும் வேத வியாசரும் சிறப்பாக விவரித்துள்ளார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

நவராத்திரி பூஜை செய்வோர் அதற்கான ஏற்பாடுகளை, நவராத்திரி தொடங்குவதற்கு முதல் (அமாவாசை) நாளிலேயே, செய்து கொள்ள வேண்டும்.

சமதளமான ஓர் இடத்தை பூஜைக்காக தேர்வு செய்து, பசுஞ்சாணத்தால் மெழுகி, நான்கு மூலைகளிலும் தூண்கள் நட்டு, சிறு மண்டபம் அமைக்க வேண்டும். இதனுள் சதுர மேடை அமைத்து கோலமிட்டு, சுற்றிலும் செம்மண் இடவேண்டும். மேடையின் மீது ஆசனம் (பலகை) வைத்து, அதன் மேல் வெண்பட்டை விரித்து வைக்க வேண்டும். வெண்பட்டின் மேல்... சங்கு- சக்கரம், கதை மற்றும் தாமரையுடன் 4 திருக்கரங்களுடனோ அல்லது 18 கரங்கள் கொண்டவளாகவோ அம்பிகையின் திருவடிவை ஸ்தாபிக்க வேண்டும். அம்பிகையை அலங்கரித்து அவளின் முன்பாக புனித கலசத்தை வைத்து அம்பிகை துதிப் பாடல்கள் பாடி, மங்கல வாத்தியங்கள் முழங்க கலச பூஜை செய்ய வேண்டும். தொடர்ந்து, ‘’அம்மா! என் சக்திக்குத் தகுந்தபடி நவராத்திரி விரதம் கடைப்பிடிக்கிறேன். எந்தவொரு இடையூறும் வராமல் அருள வேண்டும்!’’ என்று அம்பிகையிடம் பிரார்த்தனை செய்து, பூஜையைத் தொடர வேண்டும்.

நலம் தரும் நவராத்திரி வழிபாடு!

பூஜை முறை-2

நவராத்திரி பூஜையின், 2-வது வழிமுறையான இதை, சுமேத முனிவர் கூறியதாக வியாசர் குறிப்பிடுகிறார்.

நவராத்திரி முதல் நாளன்று அதிகாலையில் எழுந்து நீராடி, வெண்மையும் தூய்மையும் கொண்ட ஆடை அணிந்து, பசுஞ்சாணத்தால் மெழுகப்பட்ட தூய்மையான இடத்தில், நல்லதோர் ஆசனத்தில் அமர்ந்து... ஆசமனம்- பிராணாயாமம் செய்த பிறகு, அன்றைய நாள்- நட்சத்திரம் முதலானவற்றை சொல்லி சங்கல்பம் செய்ய வேண்டும்.பின்னர், பூஜைக்குரிய பொருட்கள் மீது மந்திர தீர்த்தம் தெளித்து தூய்மை செய்ய வேண்டும். பிறகு அம்பிகைக்கான கலசம், யந்திர தகட்டை வைத்து பூஜிக்க வேண்டும். பூஜை முடிந்ததும் நவாட்சரி மந்திரத்தை தியானித்து ஜபம் செய்ய வேண்டும். பிறகு வேத வல்லுனர் ஒருவருக்கு உணவிட வேண்டும். பிறகு நவராத்திரி நாள்களில் அம்பிகையின் மூன்று சரிதங்களையாவது பாராயணம் செய்து வழிபாட்டை முடிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.