Published:Updated:

வாழ்வில் பிரச்னையா... கரையேற்று விநாயகரை வழிபடுங்கள்!

அவ்வகையில், பஞ்ச'கா' ஸ்தலங்களில் ஒன்றான, 'திருக்கோடிக்கா' ஸ்தலத்தில், எழுந்தருளியுள்ள, சுயம்பு மூர்த்தியான 'அருள்மிகு கரையேற்றுவிநாயகர்' மிக்க சிறப்புடையவர்.

திருக்கோடிக்கா
திருக்கோடிக்கா

சிறப்புடைய சிவாலயங்களில், அத்தலத்திற்குரியவராக உள்ள விநாயகப் பெருமானை முதலில் வழிபடுவது மரபு.

அவ்வகையில், பஞ்ச'கா' ஸ்தலங்களில் ஒன்றான, 'திருக்கோடிக்கா' ஸ்தலத்தில், எழுந்தருளியுள்ள, சுயம்பு மூர்த்தியான 'ஸ்ரீகரையேற்றுவிநாயகர்' மிக்க சிறப்புடையவர்.

ஸ்ரீ கரையேற்றுவிநாயகர்
ஸ்ரீ கரையேற்றுவிநாயகர்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருக்கோடிக்காவலில் பழைமையும் பெருமையும் வாய்ந்த ஸ்ரீ திருக்கோடீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. ஈசனால் சம்ஹாரம் செய்யப்பட்ட எமனை உயிர்ப்பெறச் செய்வதில் இத்தலத்து விநாயகர் பேருதவி செய்ததனால் ஸ்ரீ கரையேற்று விநாயகர் எனப் பெயர் பெற்றிருக்கிறார்.

திருக்கடையூரில், கால சம்ஹாரம் நடந்த பிறகு, யமதர்மன் தன்னுடைய அனைத்துச் சக்திகளையும் இழந்து, `அனைத்தும் சிவத்திற்குள் அடக்கம்' என்ற நிலையுணர்ந்து, பிரம்புக் காட்டினுள் உறைந்துள்ள திருகோடிக்காவல் ஈசனுக்குள் ஐக்கியமாகி அசைவற்று கிடந்தார்.

காலன் இயக்கமற்று விட்டதால், பூலோகத்தில், `மரணம்' நின்று விட்டது.

இதனால் பூமி தன் பாரம் தாங்காமல், பூமாதேவி செயல்பட முடியாமல் சகல பூலோக காரியங்களும் முரண்பட்டு, நிலை தடுமாறியது.

விபரீதத்தை உணர்ந்த இந்திராதி தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட எண்ணி, திருக்கோடிக்காவல் நோக்கி ஓடி வந்தனர்.

ஸ்ரீகரையேற்றுவிநாயகர்
ஸ்ரீகரையேற்றுவிநாயகர்

அப்போது கங்கைக்குச் சமமான, உத்திரவாஹினியாகிய காவிரி நதியைக் கடக்க எண்ணுகையில், திடீரெனக் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்துச் சுழலில் சிக்கி மீள முடியாது தவித்தனர்.

`ஈசனைச் சந்திக்கும் அவசர கதியில் முதற்கடவுளாம் விநாயகரை பூஜிக்காது, வந்ததினால் ஏற்பட்ட சோதனை இது'என்பதை உணர்ந்தனர்.

உடனே ஆற்று மணலிலேயே விநாயகப் பெருமானது உருவத்தை சிருஷ்டி செய்து, அவரிடத்தே பிழை பொறுத்துக் காக்க வேண்டினர்.

இதனால் மனமிரங்கிய விநாயகரும், ஆற்று வெள்ளத்தைத் தணித்து, தேவர்களைக் கரையேற்றினார்.

அதுமுதல், இத்தலத்து விநாயகர் 'கரையேற்றுவிநாயகர்' என்ற நாமம் தாங்கி அருளி வருகின்றார்" என்கிறது தலவரலாறு.

ஆற்று மணலினால் ஆன திருமேனி என்பதால், விஸ்தாரமான அபிஷேகாதிகள் இவருக்குச் செய்யப்படுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

திருக்கோடிக்காவல் தலமானது `யம வாதனை' இல்லா பூமி.

திருக்கோடிக்கா
திருக்கோடிக்கா

ஜன்ம வினைகள் நசிந்து, உயிர்கள் கடைத்தேற அருளுபவர் என்பதாலும், இவர் 'கரையேற்று விநாயகர் என்று போற்றப்படுகிறார்.

வாழ்வில் பிரச்னைகளால் தத்தளிப்போர் இத்தலத்து விநாயகரை வணங்கி வழிபட்டால் நலம் பெறலாம்' என்கிறார்கள் பக்தர்கள்.