Published:Updated:

மீனாட்சியம்மன்-சுந்தரேசுவரர் தெப்பத்திருவிழா.. மதுரையில் கோலாகலம்!

தெப்பத் திருவிழா
தெப்பத் திருவிழா ( என்.ஜி.மணிகண்டன் )

அறுபடை வீடுகளில் ஒன்றான பழநியில் லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் அரோகரா கோஷத்துடன் தைப்பூச தேரோட்டம் நடைபெற்றது.

`சொல்லச் சொல்ல இனிக்குதடா... முருகா

உன்பெயரைச்

சொல்லச் சொல்ல இனிக்குதடா...'

மலையே கடவுளாகக் காட்சிதரும் தலம் பழநி. முருகக் கடவுளுக்கான படைவீடுகள் ஆறு. திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவை. ஆறு படைவீடுகளில் மூன்றாவது படைவீடு பழநி.

Palani Murugan
Palani Murugan

மற்ற படைவீடுகளில் முருகனுக்கு ஒரு கோயில்தான் இருக்கும். ஆனால், பழநியில் கீழ்ப்பகுதியில் திருஆவினன்குடி கோயிலும் மலைமீது தண்டாயுதபாணி திருக்கோயிலும் இருக்கின்றன. அதே போல மேற்கு நோக்கி முருகன் தரிசனம் தரும் கோயிலும் இதுதான். அனைத்துப் படைவீடுகளிலும் தைப்பூசம் விமரிசையாகக் கொண்டாடப்படும் என்றாலும் பழநியில் நடைபெறும் தைப்பூச திருவிழா அனைத்துக்கும் சிகரம் போன்றது.

காவடி, பால்குடம், தீர்த்தம் எனச் சுமந்துகொண்டு பாதயாத்திரையாக வந்து பக்தர்கள் முருகனைத் தரிசிப்பது பழநியில்தான் அதிகம். முருகனிடம் பக்தர்கள் மனமுருக வேண்டுதலை வைப்பார்கள். அந்த வேண்டுதல்கள் நிறைவேறிய பிறகு பாதயாத்திரை, காவடியென நன்றிக் கடனைச் செலுத்துவார்கள்.

பழநி பக்தர்கள்
பழநி பக்தர்கள்

'அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை... அந்த

அண்ணலே தந்து வைத்தான் ஆறுதலை' என முருக பக்தர்கள் நெகிழ்ச்சியால் கிரிவலம் வந்து முருகனைத் தரிசிப்பார்கள். இந்த நாள்கள் பழநி முழுவதும் ஆன்மிக மணம் கமழும்.

இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா களைகட்டி வருகிறது. பிப்ரவரி 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது தைப்பூச திருவிழா. முருகன் கோயில் மலையிலிருந்தாலும் தைப்பூச நிகழ்வுகள் பெரும்பாலும் மலைக்குக் கீழ்ப் பகுதியில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில்தான் நடைபெறும். தினமும் நான்கு ரதவீதிகளிலும் வள்ளி, தெய்வானையுடன் முத்துக்குமாரசுவாமி பக்தர்களுக்குக் காட்சி தருவார்.

தேரோட்டம்
தேரோட்டம்
முத்துக்குமார சுவாமி
முத்துக்குமார சுவாமி

விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் நேற்று இரவு பெரியநாயகி அம்மன் கோயிலில் நடைபெற்றது. தொடர்ந்து இன்று புகழ்பெற்ற தைப்பூச தேரோட்டம் நடைபெற்றுவருகிறது. 3,500 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பழநி கோயில் யானை கஸ்தூரி பின்பக்கம் இருந்து முட்டித்தள்ளி தேரோட்டத்தை தொடங்கி வைத்தது.

பெரியநாயகி அம்மன் கோயிலிலிருந்து தொடங்கிய தேரோட்டம், நான்கு ரத வீதிகள் வழியாக மீண்டும் பெரியநாயகி அம்மன் கோயிலை வந்தடையும்.

தேரோட்டம்
தேரோட்டம்

திருத்தேரில் வள்ளி, தெய்வானையுடன் சமேதராக முத்துக்குமாரசுவாமி பவனி வந்தார். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பழநி எம்.எல்.ஏ ஐ.பி.செந்தில்குமார், மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி, எஸ்.பி சக்திவேல் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் தேரோட்டத்தில் கலந்துகொண்டனர்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தெப்பத்திருவிழா நிகழ்ச்சி!

வடலூரில் இன்று 149 வது ஆண்டு தைப்பூச விழா சத்திய ஞான சபையில் முதல் ஜோதி தரிசன பெருவிழா!

மீனாட்சியம்மன்-சுந்தரேசுவரர் தெப்பத்திருவிழா கோலாகலம்!

மதுரை மீனாட்சியம்மன்-சுந்தரேஷ்வரருக்கு நாள் தோறும் திருவிழா கொண்டாட்டம்தான். அந்த வகையில் முக்கியமானது தெப்பத் திருவிழாவாகும். இன்று நடந்து வரும் தெப்பத் திருவிழாவில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு வருகிறார்கள்.

கடந்த 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய தெப்பத்திருவிழாவில் தினமும் காலை மாலை இரு வேளையும் மீனாட்சியம்மன்-சுந்தரேஸ்வரர், சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்

மீனாட்சியம்மன்-சுந்தரேசுவரர்
மீனாட்சியம்மன்-சுந்தரேசுவரர்
அரவிந்தன் (மாணவ புகைப்படக்காரர் )

நேற்றைய தினம் அனுப்பானடி சிந்தாமணியில் கதிரறுப்பு திருவிழா விமர்சையாக நடந்தது. அதைத்தொடர்ந்து கதிரறுப்பு மண்டபத்தில் மீனாட்சியம்மன்-சுந்தரேசுவரர் எழுந்தருளி மக்களுக்கு காட்சியளித்தனர்.

இவ்விழாக்களின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்திருவிழாவுக்கு இன்று காலை கோயிலிருந்து புறப்பட்டு தெப்பக்குளத்துக்கு வந்தனர்.

தெப்பக்குளத்தில் எழுந்தருளிய மீனாட்சியம்மன்-சுந்தரேசுவர் சிறப்பு பூஜைகளுக்குப்பின் தெப்பத்தில் எழுந்தருளினார்கள். அங்கு கூடியிருந்த பக்தர்கள் இரண்டு முறை தெப்பத்தை சுற்றி வர வடம் பிடித்து பக்தியுடன் இழுத்தனர்.

தெப்பத்திருவிழா
தெப்பத்திருவிழா
அரவிந்தன் (மாணவ புகைப்படக்காரர் )

இன்று மாலையும் தெப்பம் சுற்றி வரும் அதன் பின் தெப்பக்குளத்தின் மைய மண்டபத்தில் மீனாட்சியம்மனும், சுந்தரேசுவரும் மக்களுக்கு காட்சி தருவார்கள். இக்காட்சியை காண மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் மதுரை காமராசர் சாலையில் வாகனப் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு