Published:Updated:

ஆருத்ரா தரிசனம்: பாரம்பர்ய உடை, நடனம்; பவானீஸ்வரரை கொண்டாடி வணங்கிய தோடர் பழங்குடிகள்!

ஆருத்ரா தரிசனம்
News
ஆருத்ரா தரிசனம்

தோடர் பழங்குடி மக்களின் பாரம்பர்ய ஆடல் பாடலுடன் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 110 - ம் ஆண்டு ஆருத்ரா பவாணீஸ்வரர் கோயில் தரிசன மஹோற்சவம் மற்றும் தேர்பவனி நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம் ஊட்டி, ஃபெர்ன்ஹில் பகுதியில் வீற்றிருக்கிறது பவானீஸ்வரர் ஆலயம். ஒவ்வோர் ஆண்டும் ஸ்ரீ நடராஜமூர்த்தி, ஸ்ரீ சிவகாமசுந்தரேஷ்வரி ஆருத்ரா தரிசன மகோற்சவம், தோடர் பழங்குடி மக்களின் பாரம்பர்ய வழிபாட்டுடன் வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசன உற்சவம், நேற்று காலை 9.30 மணிக்கு கணபதி, சூரியபகவான் பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து 2 மணிக்கு நடராஜர் அபிஷேகம், சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது. மாலை 4.30 மணிக்கு பூர்ணாகுதி, மகா தீபாரதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டன.

இன்று காலை 6 மணிக்கு துவங்கிய தேர்பவனி மினிக்கிசோலை, ஃபெர்ன்ஹில், மத்திய பஸ் நிலையம், லோயர் பஜார் வழியாக ஊட்டி மாரியம்மன் கோயிலை வந்தடைந்தது. தோடர் பழங்குடியின மக்கள் தங்கள் பாரம்பர்ய முறைப்படி உடையணிந்து பாரம்பர்ய நடனம் ஆடி நடராஜரை நகர் வலம் அழைத்து வந்தனர்.தொடர்ந்து ஐந்து லாந்தர் பகுதியில் தோடர் பழங்குடியின ஆண்கள் வட்டவடில் கைகளைக் கோர்த்து நடனமாடி வழிபட்டனர்.தொடர்ந்து கமர்சியல் சாலை வழியாக காஃபி ஹவுஸ் சதுக்கம் வழியாக வலம் வந்து, பின்னர் பவானீஸ்வரர் ஆலயத்துக்குக் கொண்டுச் செல்லப்பட்டது. தேர் பவனியின் போது, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிப்பட்டனர்.

ஆருத்ரா தரிசனம்
ஆருத்ரா தரிசனம்

110 - ம் ஆண்டு ஆருத்ரா பவானீஸ்வரர் கோயில் தரிசன மஹோற்சவம் குறித்து பேசிய தோடர் பழங்குடிகள்,

" ஒவ்வோர் ஆண்டும் ஆருத்ரா தரிசன விழாவில் எங்கள் மக்கள் தவறாமல் கலந்துகொண்டு வழிபாடு செய்வோம். அனைத்து மந்துகளிலும் [ஊர்] இருந்தும் ஆண்கள் பாரம்பர்ய உடை அணிந்து பாடல்களை பாடி ஊர்வலமாக வலம் வருவது வழக்கம். 110 ஆண்டுகளாக எங்கள் மக்களுக்கும் இந்தக் கோயிலுக்கும் பந்தம் தொடர்கிறது. கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக விமர்சியாக விழா நடத்தப்படவில்லை. இரண்டு ஆண்டுகளுக்குப்பின் தற்போது கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்று வருகிறது"என்றனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz