புத்தாண்டு ராசிபலன்கள்!
திருத்தலங்கள்
Published:Updated:

நிர்மால்ய தரிசனம்!

கழுகுமலை முருகன்
பிரீமியம் ஸ்டோரி
News
கழுகுமலை முருகன்

ஆன்மிக விளக்கங்கள்

வீட்டில் சாமிப் படங்களுக்குச் சாத்தப்படும் மலர்களை எப்போது அகற்றலாம் என்பது குறித்துப் பலருக்கும் சந்தேகம் எழும். இதற்கான பதிலை அறிவது அவசியம்.

நிர்மால்ய தரிசனம்!

பூஜையைப் பற்றி ஒரு விளக்கம் உண்டு. இந்த உடல் இருக்கிறதே, அது கோயில். உள்ளே உட்கார்ந்திருக்கிற உயிர் இருக்கிறதே, அது கடவுள். அஞ்ஞானம் என்பதான நிர்மால்யத்தை வெளியிலே தள்ளி பூஜையை ஆரம்பி என்பார்கள். அஞ்ஞானம் என்பது நிர்மால்யம். நேற்றுப் போட்டது நிர்மால்யம். அதை அகற்றிவிட்டு பூஜையை ஆரம்பிக்க வேண்டும். ‘நான் ஏற்கெனவே நாலு நாளைக்கு முன்னால் அகற்றி விட்டேன்’ என்று சொல்லக் கூடாது. `தேகோ தேவாலய ப்ரோக்த: ஜீவோ தேவ ஸநாதன: தெஜேயத் அஞ்ஞான நிர்மால்யம் ஸோஹம் பாவேன பூஜயேத்’ என்பது ஸ்லோகம்.

கோயிலில் பூஜைக்கு முன் கதவைத் திறப்பதற்கே ஒரு மந்திரம் உண்டு. அதைச் சொல்லிக் கதவைத் திறந்து, முந்தைய நாளின் நிர்மால்யத்தை அகற்ற வேண்டும். அதன் பிறகுதான் ஜலமே விடவேண்டும் என்று விதி உண்டு.

கேரளாவில் நிர்மால்ய தரிசனம் என்பது பிரசித்தம். முதல் நாள் அணிவித்த பூக்களோடு ஸ்வாமியை தரிசிப்பதுதான் அது. ஒரு ராத்திரி தாண்டினால்தான் அது நிர்மால்யம். எனவே, மறு நாள் பூஜையின்போது பூக்களை அகற்றுங்கள். முடியுமானால், மாலை வேளையிலும் பூஜை செய்ய முயலுங்கள். அப்போது வாடிய பூக்களை மாலையிலேயே அகற்றலாம்.

உயர் பதவி அருளும் முருகன்!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியிலிருந்து சங்கரன்கோவில் செல்லும் சாலையில் சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது கழுகுமலை - கழுகாசல மூர்த்தி ஆலயம். மேற்கு முகமாக அமைந்த முருகன் தலங்களில் முருகப் பெருமான் ராஜ கோலத்தில் அருளும் தலம் இது ஆகவே, இவரை தரிசிக்கும் அன்பர்களுக்கு ராஜயோகம் கைகூடும்; உயர்பதவி வாய்க்கும் என்பது நம்பிக்கை.

தொடர்ந்து 5 செவ்வாய்க்கிழமைகள் இந்த முருகனுக்குச் சிவப்பு வஸ்திரம், வள்ளிக்குப் பச்சை வஸ்திரம், தெய்வானைக்குச் சிவப்பு வஸ்திரம் சாத்தி மூவருக்கும் ரோஜா மாலை அணிவித்து, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபட்டால், திருமணத்தடை நீங்கி விரைவில் கெட்டிமேளம் கொட்டும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.

தொகுப்பு: சக்திதர்