Published:Updated:

தோட்டம் உயிர் பெற்றது!

தோட்டம் உயிர்பெற்றது
பிரீமியம் ஸ்டோரி
தோட்டம் உயிர்பெற்றது

ஓஷோ சொன்ன கதை

தோட்டம் உயிர் பெற்றது!

ஓஷோ சொன்ன கதை

Published:Updated:
தோட்டம் உயிர்பெற்றது
பிரீமியம் ஸ்டோரி
தோட்டம் உயிர்பெற்றது

முடிவடையாத அனுபவத்துக்குத் தனி அழகு உண்டு. ஞானிகள் எப்போதும் புதிது புதிதான அனுபவங்களைப் பெற்றவாறே வாழ்கிறார்கள். ஓஷோ எடுத்துச் சொன்ன கதையொன்று இதை அழகாக எடுத்துரைக்கிறது.

தோட்டம் உயிர் பெற்றது!
FOTOGRAFIA INC.

ன்னர் ஒருவர் தோட்டக் கலையைக் கற்றுக்கொள்ள ஒரு ஜென் மாஸ்டரிடம் சென்றார். மூன்று ஆண்டுகளாகப் பயிற்சி பெற்றார். மன்னருக்கு அழகான பெரிய தோட்டம் ஒன்று உண்டு. மாஸ்டர் சொல்லிக் கொடுப்பதை உடனே அவர் தன் தோட்டக்காரர்களைக் கொண்டு பரிசோதித்துப் பார்த்துவிடுவார்.

மூன்றாண்டுகள் இப்படிப் பராமரிக்கப்பட்டு வந்த நேர்த்தியான தோட்டத்தை மாஸ்டர் பார்த்துப் புகழ வேண்டும் என்று விரும்பினார் மன்னர். ஆகவே, எவ்விதக் குறைபாடும் இல்லாதபடி தோட்டத்தைப் பல முறை மேற்பார்வை செய்தபின், மாஸ்டரை அங்கு அழைத்து வந்தார்.

மாஸ்டர் தோட்டத்தினுள் நுழைந்தவுட னேயே தன் அதிருப்தியைத் தெரிவித்து விட்டார். அவர் முகத்தில் மகிழ்ச்சி இல்லை. மன்னர் குழம்பினார். ‘‘ஐயா, ஏதாவது தவறு உள்ளதா?’’ என்று மாஸ்டரைக் கேட்டார். மாஸ்டர் தலையை அசைத்தவாறு குறை இருப்பதைத் தெரியப்படுத்தினார். மாஸ்டரைப் பார்த்து, ‘‘நீங்கள் சொல்லிக் கொடுத்த தோட் டக் கலையை அப்படியே பின்பற்றி வருகிறேன். என்ன குறை என்று கூறுங்கள்’’ என்றார் மன்னர்.

மாஸ்டர் கூறினார்: ‘‘இந்தத் தோட்டம் முடிவு பெற்றுவிட்டதாக உள்ளது. அதனால் உயிர் இல்லாமல் போய்விட்டது. இது சற்றே சீர்குலைந்த நிலையில், முடிவுறாமல் இருக்க வேண்டும். காய்ந்த சருகுகள், மஞ்சள் இலைகள் எல்லாம் எங்கு போயின?’’

``நான்தான் தோட்டத்தை மிகவும் சுத்தமாக வைக்குமாறு சொன்னேன்’’ என்றார் மன்னர்.

மாஸ்டர் சொன்னார்: ‘‘ஆகவேதான் தோட்டம் களையிழந்து விட்டது. இது மனிதனின் கையால், முடிவு அடைந்துவிட்ட நிலையில் உள்ளது. கடவுளின் பொருள்கள் எதுவும் முடிவு பெற்றுவிடுதில்லை!’’

அதன் பிறகு அவர் தோட்டத்துக்கு வெளியே போய்ப் பார்த்தார். அங்கு காய்ந்த இலைகள் குவிக்கப்பட்டிருந்தன. அங்கிருந்து ஒரு கூடை நிறைய அள்ளிக்கொண்டு வந்தார். காற்றில் பறக்கும்படி இலைகளைக் கொட்டி னார். மஞ்சள் இலைகளும் சருகுகளும் நடை பாதையில் பறந்தோடி விளையாடின.

இலைகள் காற்றில் சலசலத்து ஓடும் சத்தம் கேட்டது. தோட்டத்தில் ஒரு கலகலப்பு. ஒருவித இசை நிரம்பியது. கல்லறைபோல் நிசப்தமாக இருந்த தோட்டம் இப்போது உயிர் பெற்று அழகாகக் காட்சியளித்தது.

மகிழ்ச்சியடைந்த மாஸ்டர், ‘‘இப்போது தோட்டம் உயிர் பெற்று விட்டது!’’ என்றார்!

- க.திருமலை, திருநெல்வேலி