`ஓம் அரிகர புத்திராய புத்திர லாபாய சத்துரு விநாசகனாய,

மத கஜ வாகனாய பூத நாதாய ஐயனார் சுவாமியே நமக!'

தொன்றுதொட்டு தமிழர்களின் காவல் தெய்வமாக விளங்கி வருபவர் ஐயனார். கிராமம்தோறும் காவல் காக்கும் இந்த ஐயனார் ‘ஸ்ரீபூர்ணா புஷ்கலாம்பிகா ஸமேத ஸ்ரீபனிச்சரயப்பர்’ என்ற பெயரில் எங்கள் மாத்தூர் கிராமத்தில் வயலுக்கு நடுவே ஆங்கார ரூபனாக அதிகார ஐயனாக வீற்றிருக்கிறார்.

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூருக்கு நேர் மேற்கே 4 கி. மீ தொலைவில் ஆக்கூருக்கு உள்ளடங்கிய கிராமம் மாத்தூர். இங்கே, இன்றும் வெள்ளைக் குதிரையில் நள்ளிரவில் பவனி வருபவராக, பாக்கியம் உள்ளவர்களுக்கு நேரில் காட்சிகொடுக்கும் தெய்வமாக இவர் விளங்கி வருகிறார். அதற்கு சாட்சியாக ஒரு சம்பவமும் நடந்துள்ளது.

புராணங்களில் இறைவனை நேரில் தரிசித்து இறையருள் பெற்ற பிரக லாதன் போன்ற பாக்கியசாலிகளைப் பற்றி அறிவோம். கடந்த நூற்றாண் டுகளில் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர், ஸ்ரீசாயிபாபா, மகா பெரியவா போன்ற மகான்களுக்கு இந்தப் பாக்கியம் வாய்த்தது. அதுபோன்றே மாத்துர் ஐயனாரின் ப்ரத்யக்ஷ அருட்கடாட்சம் பெற்றவர்கள், முக்குறும்பூர் ஸ்ரீராமநாதய்யர் குமாரர் ஸ்ரீராதாகிருஷ்ணன் குடும்பத்தினர்.

இது நடந்த வருடம் 1962. சிதம்பரத்திலிருந்து மயிலாடுதுறைக்கு இரவு ரயிலில் வந்திறங்கி, அங்கிருந்து மாத்துர் கிராமத்துக்கு சுமார் 10 மைல் தூரம் ஒரு மாட்டு வண்டியில் பிரயாணம் மேற்கொண்டனர். அப்போதெல் லாம் சாலை போக்குவரத்து வசதிகள் சொற்பம்தான். இருள் விலகாத விடியற்காலை சுமார் 4 மணியளவில் - ஆறுபாதி கிராமத்தைத் தாண்டும் வழியில் கள்வர்கள் சிலர் ஆயுதங்களுடன் வண்டியை மறித்தனர். அவ்வளவுதான்! அனுதினமும் ஐயனாரை மனதார பிரார்த்திக்கும் அந்தத் தீவிர பக்தர்கள் அச்சத்தில் செய்வதறியாது `ஐயனாரப்பா...’ என அலறினர். என்ன ஆச்சர்யம்!

கம்பீரத்துடன் ஹூங்காரக் கனைப்புடன் உயரமான ஒரு வெள்ளைக் குதிரை அங்கு வேகமாகப் பாய்ந்து பிரவேசித்தது. பிரமாண்ட உருவம்; பெரும் சத்தம். அதிர்ச்சியடைந்த கள்வர்கள் அலறிக்கொண்டு ஓடிவிட்ட னர். மறுபடியும் அதிசயம்... அந்த வெள்ளைக் குதிரை அந்தக் குடும்பத்தினர் வண்டிக்கு முன்பாக சாலையில் கொஞ்ச துரம் வழிகாட்டிச் சென்று, பிறகு மறைந்துவிட்டது. குதிரை மீது அமர்ந்த உருவம் பெரும் ஒளியோடு மங்கலாகவே தெரிந்ததாம்.

உதவ யாருமில்லாத நேரங்களில் தானே வந்தருள்வான் இறைவன் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் ஐயனார் நேரடியாக வந்து அபயம் அளித்தார். நினைக்க நினைக்க மெய் சிலிர்க்கும் இந்தச் சம்பவத்தை ஸ்ரீஐயனாரின் பிரபாவத்தை இன்னும் தழுதழுத்த குரலுடன் நினைவுகூரும் ராதாகிருஷ்ணன் (91 வயது) - ஜெயலெஷ்மி தம்பதியினர் தங்கள் மூத்த குமாரனுடன் தற்சமயம் பெருங்குடியில் வசித்து வருகின்றனர்.

இந்தச் சம்பவத்துக்கு நன்றி கூறும் விதமாக இந்தக் குடும்பத்தினர் ஆலய வளாகத்தில் நிறுவிய வெள்ளைக் குதிரை சிலா ரூபம் ஒன்று, தர்ம ஸ்தம்பம் போன்று கம்பீரத்துடன் காட்சியளிக்கிறது!

ஸ்ரீபூர்ணா புஷ்கலாம்பிகா ஸமேத ஸ்ரீபனிச்சரயப்பர் ஆலயம், பல நுாறு ஆண்டுகள் பழைமையானதாக அறியப்படுகிறது. பழைய ஆவணங் களின் மூலம் சுவாமியின் திருநாமம் ‘பனிச்சடையப்பர்’ என்று அறியப் படுகிறது. நியாயமான வேண்டுதல் களை உடனே நிறைவேற்றும் வரப் பிரசாதி இவர். மாத்துார் அக்ரஹாரம் பகுதியில் நிறைய குடும்பத்தினர், வேத விற்பன்னர்களாக இருந்தனர். காலமாற்றத்தில் 50 ஆண்டுகளில் பல காரணங்களினால், ஒரு சிலரைத் தவிர, மற்றவர்கள் பல ஊர்களுக்குக் குடிபெயர்ந்து விட்டனர்.

வெளியூர்களில் குடியமர்ந்தாலும் ஐயனாரை அவர்கள் மறந்து விடவில்லை. வாய்ப்பு அமையும் போதெல்லாம் மாத்துாருக்கு வந்து ஸ்ரீஐயனாருக்கு அர்ச்சனை அபிஷேகம், முடியிறக்குதல் என வேண்டு தல்களை நிறைவேற்றிச் செல்கின்றனர். ``எங்கிருந்தாலும் சரி, தன் பக்தர்களுக்கு ஓர் ஆபத்தென்றால் ஓடிவந்து உதவும் கண்கண்ட தெய்வம் எங்கள் ஐயனார்'' என்கிறார்கள் சிலிர்ப்புடன்.

1940 -ல் பட்டணம் ஸ்ரீநாராயண ஸ்வாமி ஐயரின் முயற்சியில் ஆலயம் புனரமைக்கப்பட்டதாகத் தெரிகிறது. மீண்டும் 1993-ல், ஐயனாரைக் குலதெய்வமாகப் போற்றும் பக்தர்கள் பலரும் சென்னையில் ஒன்று கூடி ‘ஸ்ரீமாத்துார் சாஸ்தாஸ் பரிபாலன சபா’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, இந்தக் கோயிலை புனரமைத்துச் சிறப்புற நிர்வகித்து வருகின்றனர்.

இன்றும் குல தெய்வம் ஸ்ரீ ஐயனார் அருளினால் தங்கள் குடும்பங்கள் நல்ல நிலைமையில் உள்ளதாக நெகிழ்ச்சி யுடன் பகிர்ந்துகொள்கிறார்கள்.

மாத்தூர் ஸ்ரீபனிச்சரயப்பர் ஐயனார் கோயில் சிறப்புகளை, இவ்வூரைச் சேர்ந்த கோவிந்தகிருஷ்ணன் சிலிர்ப்புடன் பகிர்ந்துகொண்டார்:

``மாத்தூரிலிருந்து எங்கள் முன்னோர்கள் பலர் பல்வேறு இடங்களுக்குச் சென்று விட்டாலும், ஐயனார் அருளால் இன்றும் ஒன்றிணைந்து பல பணிகளை தர்ம காரியங் களைச் செய்துவருகிறோம். எங்கள் வளர்ச் சியும் வாழ்வும் ஐயனாரின் அருளாலேயே நடைபெறுகிறது என்று நம்புகிறோம்.

நாங்கள் வருடம் ஒரு முறை மே மாதத்தில் திருக்கடையூர் வந்து பசுமடத்தில் 2 நாள்கள் தங்கி மாத்தூர் ஆலயங்களுக்குச் சென்று வருகி றோம். 200 குடும்பத்தினருக்குக் குறையாமல் வந்து கலந்துகொள்வோம். முதல் நாள் ஸ்ரீஐயனார் கோயிலுக்கும், பிறகு சிவாலயங்கள் இரண்டுக்கும் ஒரு பெருமாள் கோயிலுக்கும் சென்று விசேஷ பூஜைகள், ஹோமங்கள், ஆராதனைகள் நடத்தி வழிபடுகிறோம்.

எங்கள் ஐயனாருக்கு ஒவ்வோர் ஆண்டும் விசேஷமான பூஜைகள், திருக்கல்யாண உற்சவம், புஷ்பப் பல்லக்கு, திருத்தேர் புறப்பாடு, அபிஷேகங்கள், அஷ்ட சாஸ்தா ஹோமம், சஹஸ்ர கலசாபிக்ஷேகம், லட்ச ஹோமம், ஸ்ரீசாஸ்தா சாம்ராஜ்ஜிய பட்டாபிஷேக மஹோத்ஸவம், ஆகம சதஸ், அன்னதானம், தேவபாராயணம், புஷ்ப பந்தல் என விமர்சை யாகக் கொண்டாடி வருகிறோம்.

அந்தத் தருணத்தில், இங்கு வந்து ஐயனாரை தரிசிக்க, திருக்கடை யூரில் தங்குமிடம், போஜன வசதி, போக்குவரத்து ஏற்பாடுகளை எங்கள் சபா மூலம் செய்கிறோம்.

`காருறழ் வெய்ய களிற்றிடையாகிப்

பாரிட எண்ணிலர் பாங்குற நண்ணப்

பூரணை புட்கலை பூம்புற மேவ

வாரணம் ஊர்பவன் முன்னுற

வந்தான்...'

என ஐயனாரைப் போற்றிப் புகழ்கிறது கந்தபுராணம். சிலப்பதி காரம் உள்ளிட்ட சங்க இலக்கியங் களும் புராணங்களும் கொண்டா டும் ஐயனார் எங்கள் குலதெய்வ மாக அருள்பாலித்து, துடியான தெய்வமாக எங்களை என்றென் றும் காத்து வருகிறார். அதனால், எங்களுக்கும் எங்கள் தலைமுறைக்கும் எப்போ தும் கவலையில்லை என்றே நம்புகிறோம்.

எங்களைப்போல வாசகர்கள் எல்லோருக்கும் சகல வளங்களையும் தந்து, காத்து ரட்சிக்குமாறு எங்கள் ஐயனாரை வேண்டிக்கொள்கிறோம்.'' என்று பரவசத்துடன் கூறினார் கோவிந்த கிருஷ்ணன்.

மாத்தூர் ஐயனாரின் திருவருள் அனைவரை யும் காத்து ரட்சிக்கட்டும்!