Published:Updated:

1 கோடி பேர் தரிசனம், 7 கோடி வருமானம்... அத்திவரதர் அப்டேட்ஸ்!

பெ.மதலை ஆரோன்

கடந்த 48 நாள்களில் ஒரு கோடியே ஏழாயிரத்து ஐந்தூறு (1,00,07,500) மக்கள் தரிசனம் செய்துள்ளனர். மேலும், 7 கோடி ரூபாய்க்கு உண்டியலில் காணிக்கை வசூலாகியிருக்கிறது. தினசரி சுமார் 25 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

athivaradar
athivaradar

காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலின் அனந்த சரஸ் குளத்தில் வைக்கப்பட்டிருந்த அத்திவரதர், ஜூன் 28-ம் தேதி வெளியே கொண்டுவரப்பட்டு, ஜூலை 1-ம் தேதியிலிருந்து வசந்த மண்டபத்தில் பொதுமக்கள் தரிசனத்துக்காக வைக்கப்பட்டார். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த வைபவம், இந்தமுறை மிகப்பெரிய அளவில் மக்கள் வரவேற்பைப் பெற்று, ஆகஸ்ட் 16-ம் தேதியுடன் முடிவடைந்துள்ளது. இன்று முதல் அனந்த சரஸ் குளத்தில் சயன கோலத்தில் ஓய்வெடுக்கப் போகிறார் அத்திவரதர். இதன்பிறகு 40 வருடங்கள் கழித்து 2059-ம் ஆண்டுதான் அத்திவரதரை தரிசிக்க முடியும்.

கடந்த 48 நாள்களில் ஒரு கோடியே ஏழாயிரத்து ஐந்தூறு (1,00,07,500) மக்கள் தரிசனம் செய்துள்ளனர். மேலும், 7 கோடி ரூபாய்க்கு உண்டியலில் காணிக்கை வசூலாகியிருக்கிறது. தினசரி சுமார் 25 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

தமிழகம் மட்டுமன்றி இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் காஞ்சிபுரத்துக்கு வந்த பக்தர்கள், அத்திவரதரை தரிசித்தார்கள். இதுவரை ஒரு கோடிக்கும் மேலான பக்தர்கள் காஞ்சிபுரத்தில் திரண்டு அத்திவரதரை தரிசித்ததாகக் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார்.

அத்திவரதர் தரிசனத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்வுகள் சிலவற்றைக் கீழேயுள்ள இன்ஃபோகிராபிக்ஸில் காணலாம்...

அத்திவரதர்
அத்திவரதர்
அத்திவரதர்
அத்திவரதர்