Published:Updated:

பிணி நீக்கும் பதும தீர்த்தம்; சிறப்புகள் என்னென்ன?

ஸ்ரீ உத்தவேதீஸ்வரர் ஆலயம்

தோல் வியாதிகளைத் தீர்த்திடும் பதும தீர்த்தம்.

பிணி நீக்கும் பதும தீர்த்தம்; சிறப்புகள் என்னென்ன?

தோல் வியாதிகளைத் தீர்த்திடும் பதும தீர்த்தம்.

Published:Updated:
ஸ்ரீ உத்தவேதீஸ்வரர் ஆலயம்

பழைமையான புராதன திருத்தலங்களில் ஒன்றுதான் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் அமைந்துள்ள‌ ஸ்ரீ உத்தவேதீஸ்வரர் ஆலயம். மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றானும் சிறப்பானதாகும்.

பதும தீர்த்தம்
பதும தீர்த்தம்

இப்பெருமானை அப்பர்,சம்பந்தர் பெருமான் ஆகிய இருவரும் தலயாத்திரையாக வந்து பாடிப்பரவி இன்புற்றிருக்கிறார்கள். 

ஆனால், சுந்தரர் அவ்வாறு அல்லர்.

சங்கிலி நாச்சியாருக்குக் கொடுத்திட்ட சத்தியத்தினை மீறியமையால் கண்களை இழந்து உடல் நலிவுற்று வாடினார் சுந்தரர். இழந்த கண்பார்வையை கச்சியிலும், திருவாரூரிலும் பெற்றாகிவிட்டது என்பது வரலாறு. ஆனால் உடலைப் பற்றிய சருமவியாதியால் ஏற்பட்ட பிணி அவரை விட்டு அகலாதிருந்தது. அந்நிலையில் இத்தலத்திற்கு எழுந்தருந்தருளியவர் இறையின் வாக்கின்படி, இங்குள்ள பத்ம தீர்த்தத்தில் நீராடித் தமது பிணியகலப் பெற்று மகிழ்ந்தார். முன்னை விடப் பொன்போல் பொலியும் தேகத்துடன் நோய்வாதனை தீரப்பெற்ற‌ மகிழ்ச்சியில்,

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சொன்னவாறு அறிவார் 

துருத்தியார்

வேள்விக் குடியுளர் அடிகளைச்

செடியனேன் நாயேன்

என்னை நான் மறக்குமாறு?

எம்பெருமானை என்னுடம்படும்

பிணியிடர் கெடுத்தானை!"

எனப் பாடி மகிழ்ந்துள்ளார்.

சுந்தரர் நீராடிய பதும தீர்த்தக் குளமானது  கோயில் பிராகாரத்திற்குள்ளேயே அமைந்துள்ளது.  தொல் பாரம்பர்யமிக்க இந்தத் தீர்த்தக்குளமானது தற்போது நவீனபாணியில் புனர் நிர்மாணம் செய்யப்பெறுவதுடன், அதன் எதிரே அமைந்துள்ள சுந்தரர் பிரானது தனித்த கோட்டமானது புதியதோர்  கற்றளியாக உருவாக்கம் செய்யப்பெற்று வருகிறது.

ஸ்ரீ உத்தவேதீஸ்வரர்
ஸ்ரீ உத்தவேதீஸ்வரர்

பொதுவாக சிவாலயம் என்றாலே 'நால்வர் சந்நிதி' இருப்பது வழக்கம். ஆனால் இத்தலத்தில் மட்டும் சுந்தரர் தனித்தில்லாமல் பரவை நாச்சியாருடன் தம்பதி சகிதராக ஏனைய மூவருடன் சேர்ந்து ஐவராகக் காட்சி தருவது  விசேஷமாகச் சொல்லப் படுகிறது.

இத்தலத்திற்குரிய விருக்ஷமான உத்தால மரத்தின் பூக்களும், இலைகளும்  தோல் வியாதிகளுக்கு அருமருந்தாகப் பயன்படுத்தப் படுகிறது.

இத்தலத்து பதும தீர்த்தத்தில் நீராடி, உத்தால மரத்தினை வலம் செய்து வழிபடுவோர் ஸ்ரீ உத்தவேதீஸ்வரர் அனுக்ரஹித்தினால் தீராத கடும் தோல் நோய்களிலிருந்து நிவாரணம் பெறுவது இன்றளவும் கண்கூடு. 

தருமை ஆதீனகர்த்தர் 27 -வது குருமகா சந்நிதானம்  திருவுளப்படி, அன்பர்களின் முழு ஒத்துழைப்பினால் 62 வருடங்களுக்குப் பிறகு கும்பாபிஷேகப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இயன்றவர்கள் இப்புண்ணிய கைங்கர்யத்தில்  பங்கேற்கலாமே...!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism