திருத்தலங்கள்
திருக்கதைகள்
ஜோதிடம்
Published:Updated:

பங்குனியில் சூரியனின் வழிபாடு!

சிவபெருமான்
பிரீமியம் ஸ்டோரி
News
சிவபெருமான்

ஆர்.பரிமளம், திருச்சி-2

நாம் நேரில் கண்டு வணங்கும் தெய்வம் சூரிய பகவான். உலக உயிர்களின் ஆத்மாவுக்கு அவரே காரகன் என்கின்றன ஞானநூல்கள். வேதங்களும் புராணங்களும் பலவாறு போற்றும் சூரியதேவன், பல தலங்களில் சிவபூஜை செய்து சிறப்புப் பெறுகிறார்.

குறிப்பாக பங்குனி மாதத்தில், சூரியதேவன் தன் கிரணங்களால் லிங்கத் திருமேனியைத் தழுவி பூஜிக்கும் தலங்கள் மகிமைபெற்று விளங்குகின்றன. அவற்றில் ஒன்று திருப்பரிதி நியமம்.

சிவபெருமான்
சிவபெருமான்


ஞ்சைக்கு அருகில் உள்ள இவ்வூரில் அருளும் இறைவன் பெயரி லேயே சூரியனைக் கொண்டுள்ளார். ஆம், இறைவனின் திருநாமம் பரிதியப்பர். சுயம்பு மூர்த்தி. இவரை வழிபட்டால் பித்ரு தோஷம் நீங்கும். இறைவி மங்களாம்பிகை. பங்குனி மாதம் 17, 18, 19 ஆகிய நாட்களில் உதய வேளையில் சூரியக்கதிர்கள் பரிதியப்பர் மீது விழுகின்றன.

சேலம் மாவட்டம், தாரமங்கலத்தில் உள்ளது கயிலாச நாதர் திருக் கோயில். இங்கு பங்குனி 9, 10, 11 தேதிகளில் சூரியக்கதிர்கள், நந்தியின் இரு கொம்புகளின் வழியாகச் சென்று சிவலிங்கத்தை வழிபடும் காட்சியை தரிசிக்கலாம். கோயில் மேற்கு நோக்கி இருப்பதால் சூரிய பூஜை, மாலையில் நிகழ்வது குறிப்பிடத் தக்கது!

கும்பகோணம்-திருவையாறு சாலையில் உள்ளது திங்களூர். இங்குள்ள கயிலாசநாதர் சமேத பெரியநாயகி திருக்கோயிலில் பங்குனி உத்திரத்தன்று காலையில் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது படுகிறது. மறுநாள் மாலையில் சந்திரன் ஆராதிக்கிறார்!

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது சிறுகனூர் - திருப்பட்டூர். இங்குள்ள பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயிலில் பங்குனி மாதம் 15 அன்று தொடங்கி நான்கு நாள்கள் சூரிய பூஜை நடைபெறுகிறது.

மேலும் திருச்சி தாயுமான சுவாமி, திருமீயச்சூர் முயற்சிநாதேஸ்வரர் சுவாமி, சேறை செந்நெறியப்பர், கண்டியூர் வீரட்டேஸ்வரர், நெடுங்களம் நித்திய சுந்தரர், திருவாய்மூர் வாய்மூர்நாதர் ஆகியோரையும் பங்குனி மாதத்தின் குறிப்பிட்ட மூன்று நாள்களில் சூரியன் தனது ஒளிக்கதிர்களால் வழிபடுகிறார்.