பிரீமியம் ஸ்டோரி
பரசுராமரும் ஶ்ரீஐயப்பனும்!

கேரள தேசத்தை நிர்மாணித்தஶ்ரீபரசுராமர், கேரள பூமியில் மொத்தம் 108 இடங்களில் திருக்கோயில்களை அமைத்தாராம். அவற்றுள் 18 கோயில் களில் சுவாமி ஐயப்பன் விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்தார் என்பார்கள்.

பரிமலை திருக்கோயிலில் சுவாமி ஐயப்பன் விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்தவரும் பரசுராமரே. சுவாமி ஐயப்பன், பூலோகத்தில் தனது அவதார நோக்கம் முடிவடைந்ததும் இந்த விக்கிரகத்தில்தான் ஐக்கியமானார் என்பது புராணக் கூற்று.

கிராமப்புறங்களில் ஐயனார் எனப்படும் சாஸ்தா வழிபாடு அதிகம். திருச்சி- பெரம்பலூருக்கு இடையே உள்ள திருத்தலம் திருப்பட்டூர். இங்கு கோயில் கொண்டுள்ள ஶ்ரீமகா சாஸ்தா, கையில் ‘திருஉலா ஏடு’ ஏந்தியபடி காட்சி தருகிறார். இவரை ‘அரங்கேற்றிய ஐயனார்’ என்பர்.

நாகர்கோவிலில் இருந்து கன்னியா குமரி செல்லும் வழியில் உள்ள ஊர் ஆஸ்ரமம். இங்கு அருள்புரியும் சாஸ்தாவின் திருநாமம்- அஞ்சனம் எழுதிய கண்டன் சாஸ்தா.

பரசுராமரும் ஶ்ரீஐயப்பனும்!

லை உச்சியில் கொண்டை, மார்பில் பூணூல், கழுத்தில் பதக்கம், நெற்றியில் விபூதிப் பட்டையுடன் திகழும் இவர், ஒரு காலை மடக்கி வைத்து அமர்ந்தபடி வித்தியாசமான கோலத்தில் காட்சி தருகிறார். இங்கு, சாஸ்தாவை வேண்டி அத்ரி முனிவர் யாகம் செய்ததாகக் கூறுவர்.

பாலசாஸ்தா பால் கிண்ணத்தைக் கையில் ஏந்தி, குழந்தை வடிவில் காட்சி தருபவர். ஞானத்தையும் வெற்றி யையும் தரக்கூடியவர். நோய்களையெல்லாம் நீக்கும் இவரையே ‘தன்வந்த்ரி சாஸ்தா’ என்றும் அழைப்பர். தகழி, த்ருப்ரயார் ராம க்ஷேத்ரம் முதலான தலங்களில் இவர் காட்சி தருகிறார்.

திருகுன்னபுழை எனும் க்ஷேத்திரத்தில் சுமார் பத்தடி உயரத்தில் திகழும் ஶ்ரீப்ரபா ஸத்யக சாஸ்தாவை தரிசிக்கலாம். இவரது திருக்கோயிலே 108 சாஸ்தா ஆலயங்களுக்கும் முதல் திருக்கோயில் என்பார்கள்.

யப்பன் வேட்டைக்காரனாக காட்சிதரும் கோலம், கிராத சாஸ்தா திருக்கோலமாகும். எருமேலி முதலான தலங்களில் இந்தத் திருவடி வில் சாஸ்தாவைக் காணலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு