Published:Updated:

விஜயதசமி நன்னாளில் வாழ்வை வரமாக்கும் ஷீர்டி ஸ்ரீசாயி சத்யநாராயண பூஜை... நீங்களும் சங்கல்பிக்கலாம்!

ஷீர்டி ஸ்ரீசாயி
ஷீர்டி ஸ்ரீசாயி

ஸ்ரீசாயி சத்யநாராயண பூஜை, ஷீர்டியில் இன்றளவும் பௌர்ணமி மற்றும் விசேஷ தினங்களில், நடைபெற்று வருகிறது. இப்பூஜையைச் செய்த அடியவர்கள் அனைவருக்கும் ஸ்ரீசத்ய நாராயணரான பாபா, அனைத்து நலன்களையும் வழங்கி வருகிறார்.

கலியுகத்தில் எண்ணற்ற பக்தர்களுக்குக் கண்கண்ட தெய்வமாய் திகழும் ஷீர்டி ஸ்ரீசாயிபாபாவுக்கு உகந்த தனித்துவம் மிக்க வழிபாடு ஷீர்டி ஸ்ரீசாயி சத்யநாராயண பூஜை. பாபாவை தரிசிக்க ஷீர்டிக்குச் செல்லும் பக்தர்கள், அங்கு நடைபெறும் இந்த வழிபாட்டில் கலந்து கொண்டு பூஜிப்பதைப் பெரும் பாக்கியமாகக் கருதுவார்கள்.

புராணங்களும் ஞானநூல்களும் போற்றும் ஸ்ரீசத்யநாராயண பூஜையின் அடிப்படையிலேயே ஷீர்டி ஸ்ரீசாயி சத்யநாராயண பூஜை கடைப்பிடிக்கப்படுகிறது. நாம் முதலில் சத்யநாராயண பூஜையின் மகிமையைத் தெரிந்துகொள்வோம்.

சரணம்... சாயி சரணம்!
சரணம்... சாயி சரணம்!

ஸ்ரீசத்யநாராயண பூஜை மகிமை!

ஒரு முறை பூமிக்கு வந்த நாரதர் மகரிஷி, இங்கே மக்கள் படும் துன்பங்களைக் கண்டு மனம் வருந்தினார். வைகுண்டம் சென்றவர் ஸ்ரீமந் நாராயணரை தரிசித்து, `பூவுலக மனிதர்களின் துன்பங்களைப் போக்கி நீங்களே அவர்களை ரக்ஷிக்க வேண்டும். அவர்கள், தங்களுடைய துயரங்களிலிருந்து மீள்வதற்கான உபாயத்தைத் தாங்களே அருளவேண்டும்’’ என்று வேண்டிக்கொண்டார்.

அவரின் வேண்டுதலை ஏற்று, அவருக்கு ஸ்ரீசத்யநாராயண பூஜை என்னும் மகத்தான பூஜையின் மகிமைகளை எடுத்துக்கூறினார் மகாவிஷ்ணு. அத்துடன், இந்தப் பூஜையை பக்தியோடு செய்யும் அன்பர்களின் இல்லங்களுக்கு தாமே சென்று அவர்களின் நியாயமான வேண்டுதல்களை நிறைவேற்றி வைப்பதாக வாக்களித்தார்.

அற்புதமான ஸ்ரீசத்யநாராயண பூஜையை பெளர்ணமி தினங்களிலோ மகாவிஷ்ணுவுக்கு உகந்த விசேஷ நாள்களிலோ செய்து பலன் பெறலாம். இந்தப் பூஜையின் தனிச்சிறப்பு... வேண்டுதல் நிமித்தம் சங்கல்பிக்கும் அன்பர்கள், தமது வேண்டுதல் நிறைவேறியதும் எம்பெருமானுக்கு நன்றி தெரிவிப்பதற்காக அனுசரிக்கும் விரத வழிபாடு இது. இந்தப் பூஜையில் வேண்டுதலைக் கூறி சங்கல்பம் செய்யும் பக்தர்களுக்கு, `நிச்சயம் வேண்டுதல் நிறைவேறும்’ என்ற நம்பிக்கையை, ஸ்ரீமந் நாரயணரே அளிக்கிறார்.

சாயி
சாயி

ஷீர்டி ஸ்ரீசாயி சத்யநாராயண பூஜை

ஷீர்டி ஸ்ரீசாயிநாதர், ஸ்ரீமந் நாரயணரின் அவதாரமே என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஷீர்டியில் பாபா கொலுவீற்றிருக்கும் சாயிநாதருக்கான பூஜை முறைகளில் தலையாயது ஸ்ரீ சாயிசத்யநாராயண பூஜை. பீமாஜி பாட்டீல் என்ற பாபாவின் தீவிர பக்தர் தொடர்ந்து பல வருடங்களாக ஸ்ரீசத்யநாராயண பூஜையைச் செய்து வந்தார். ஒருநாள், பீமாஜி பாட்டிலுக்குக் காசநோய்க்கு ஆளாகியிருப்பது தெரியவந்தது. மருத்தவர்கள் பலரிடம் சிகிச்சை பெற்றும் எந்த முன்னேற்றமும் இல்லை. நிறைவில் `என் நோயைத் தீர்க்கும் மாமருந்து, என் சத்குரு சாயிபாபாவிடம் மட்டுமே உள்ளது சாயிநாதரைச் சரணடைந்தார்.

அவர் ஷீர்டியை நெருங்கும் வேளையில், நோயின் தீவிரம் மெள்ள மெள்ளக் குறைவதை உணர்ந்தார். அவர் விரைந்து சென்று பாபாவின் அருகில் அமர்ந்து கொண்டார். பாபா அவரிடம், ``பொறு! உன் கவலைகளைத் தூர எறி. உன்னுடைய துன்பங்கள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டன. ஒருவன் எவ்வளவுதான் நசுக்கப்பட்டு வேதனை அடைந்தாலும், இம் மசூதியில் கால் வைத்ததும், அவன் மகிழ்ச்சியின் பாதையில் செல்கிறான். இங்கே உள்ள பக்கிரி மிகவும் அன்பானவர். அவர் உன் வியாதியை நிச்சயமாகக் குணப்படுத்துவார்!’’ என்றார்.

அதுவரையிலும் ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை ரத்த வாந்தி எடுத்துக்கொண்டிருந்த பீமாஜிபாட்டில், பாபாவின் சந்நிதானத்தில், நோய்க்கான அறிகுறியே இல்லாமல் இருந்தார்.

அதன் பிறகு, பாபா அவரை இரண்டு கனவுகள் மூலம் குணப் படுத்தினார். ஆம்! கனவிலேயே சிகிச்சை முடிந்தது; பூரணக் குணம் அடைந்தார் பீமாஜிபாட்டில். அதனால் மிகவும் மகிழ்ந்த அந்த அன்பர், பாபாவுக்கு நன்றி தெரிவித்து ஒரு சபதத்தை மேற்கொண்டார்.

`நான் இதுவரை ஸ்ரீசத்யநாராயண பூஜையைச் செய்து வந்தேன். பாபா என்ற ஸ்ரீமந் நாராயணரரின் அவதாரம், என் வியாதியை பூரணமாகக் குணப்படுத்தியது. ஆகவே, இனி நான் ஸ்ரீசாயி சத்ய நாராயண பூஜையைத் தொடங்குவேன். என் வேண்டுதலை நிறைவேற்றியது போலவே, பாபா அனைவரின் வேண்டுதலையும் நிறைவேற்றுவார்’ என்று தீர்மானித்தார்.

அதன் பொருட்டு ஸ்ரீதாஸ்கணு மகராஜை தரிசித்த பீமாஜிபாட்டில், தன் சபதத்தைத் தெரிவித்து, பூஜைக்கான விதிமுறைகளைக் கற்றுத் தரும்படி கேட்டுக்கொண்டார். ஸ்ரீதாஸ்கணு மகராஜ், முதன்முதலாக ஸ்ரீசாயி குரு சரித்திரம் என்ற புனித நூலை ஸ்ரீசாயிபாபா உடலுடன் வாழ்ந்த காலத்திலேயே இயற்றி, ஸ்ரீசாயிநாதரின் ஆசீர்வாதத்தையும் பெற்றவர். அவர் பீமாஜி பாட்டிலின் கோரிக்கையை ஏற்று, பூஜைக்கான விதிமுறைகளை உருவாக்கி அளித்தார். பீமாஜி பாட்டீல், முதன் முதலாக 1909-ம் ஆண்டு, பாபா உடலுடன் வாழ்ந்த காலத்திலேயே இந்தப் பூஜையைத் தொடங்கினார்.

அன்று தொடங்கப்பட்ட ஸ்ரீசாயி சத்யநாராயண பூஜை, ஷீர்டியில் இன்றளவும் பௌர்ணமி மற்றும் விசேஷ தினங்களில், நடைபெற்று வருகிறது. இப்பூஜையைச் செய்த அடியவர்கள் அனைவருக்கும் ஸ்ரீசத்ய நாராயணரான பாபா, அனைத்து நலன்களையும் வழங்கி வருகிறார். ஸ்ரீசாயிபாபாவின் ஆரத்தி பாடலில்... `ஷீர்டிமாஜே பண்டர்புர சாயிபாபா ரமா வர என்ற பாடலில், ஷீர்டியே பண்டரிபுரம் என்றும் ரமாதேவியின் மணவாளரான விட்டலனே அங்கு வீற்றிருக்கும் சாயிபாபா என்றும் போற்றிப் பாடப்பட்டுள்ளது. இனி, மகத்துவம் மிக்க இந்த வழிபாட்டினைச் செய்யும் விதிமுறை களை அறிவோம்.

சத்யநாராயண பூஜை
சத்யநாராயண பூஜை

வழிபாட்டு முறைகள்...

வழிபாட்டுத் தினத்தன்று காலையில் பூஜையறையை, நீரால் துடைத்து சுத்தம் செய்து, மாக்கோலம் இடவேண்டும். ஒரு சிறிய மண்டபம் போன்று சிறு மேடை அமைக்கலாம். அல்லது மனைப் பலகை போதுமானது. மேடையில் அல்லது பலகையில் கோலமிட்டு ஸ்ரீசத்யநாராயணர் ஸ்ரீசாயிபாபா படங்களை வைக்கவேண்டும். இயன்றால் பூஜாபீடத்தை அல்லது பலகையைச் சுற்றிலும் மாவிலை முதலான தோரணங்களால் அலங்கரிக்கலாம். மண்டபம் - பலகை மேற்கு நோக்கி இருக்கலாம்.

பூஜைக்கு முன் திருவுருவங்களை நன்கு துடைத்து சந்தனம், குங்குமம் இடவேண்டும். இரண்டு வாழைக்கன்றுகளை வாங்கி இரு பக்கமும் சாய்த்து வைக்கலாம். பூஜை செய்யும் அன்பர்கள், தங்களுக்கு ஒரு மனைப்பலகை போட்டு, வடக்கு நோக்கி அமர்ந்தபடி பூஜையை ஆரம்பிக்கலாம்.

பூஜைக்குத் தேவையான பொருள்களை முன்னதாகவே சேகரித்து தயாராக வைத்துக்கொள்ளவும்

உங்களுக்கு இடப் பக்கத்தில் இரண்டு நுனி வாழை இலைகளை ஒன்றன்மீது ஒன்றாகக் கொஞ்சம் இடைவெளி விட்டு சேர்த்துப் போட்டு, அதன்மீது அரிசியைப் பரப்பி வைத்துக்கொள்ளலாம்.

அரிசியின் பரப்பில் ஆறுமுனை உள்ள ஷட்கோணம் கோலத்தை விரலால் வரைந்து கொள்ளவும். பின்னர் சுத்தமான நீர் நிரப்பிய ஒரு கலசத்தைக் கோலத்தின் நடுவில் வைக்க வேண்டும்.

அந்தக் கலசத்துக்குப் பூச்சூட்டி, சந்தனக் குங்குமத் திலகம் இட்டு, கலசத்தின் வாயில் மாவிலைக் கொத்தைவைத்து, அதன் மீது மஞ்சள் பூசிய தேங்காயை வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் விநாயகப் பெருமானை மனத்தில் தியானித்து இந்தப் புண்ணியக் கலசத்தில் எழுந்தருளுமாறு வேண்டிக்கொண்டு, கலசத்தையே விநாயகராகக் கருதி வழிபட்டு பூஜையைத் தொடங்க லாம். பூஜையை வழிநடத்தும் ஒருவரின் சொல்லை பின்பற்றி பூஜையைச் செய்து முடிக்க வேண்டும். தூப-தீபம், ஆராதனை உள்ளிட்ட தெய்வ மூர்த்தங்களுக்கான அனைத்துப் பணிவிடைகளையும் முறைப்படி செய்யவேண்டும்.

பூஜை நிறைவேறியதும், ஸ்ரீசாயிநாதரின் 108 நாமங்களைச் சொல்லியபடி (ஸ்ரீசாயி அஷ்டோத்திர நாமாவளி), ஸ்ரீசாயிநாதர், ஸ்ரீசத்தியநாராயணர் இருவரின் திருவுருவங்களுக்கும் பூக்களால் அர்ச்சனை செய்யவேண்டும்.

தொடர்ந்து கோதுமை மாவு, நெய், சர்க்கரை மற்றும் பால் கலந்த வெள்ளை நிற கோதுமை கேசரியைப் பிரசாதமாக நைவேத்தியம் செய்வது விசேஷம்.

அடுத்து, கற்பூரம் காட்டி இந்தப் பூஜையை நிறைவு செய்யவேண்டும். பூஜை முடிந்ததும், இந்த வழிபாட்டைச் செய்து பலன் அடைந்தவர் களின் புண்ணியக் கதைகளைப் படித்து விளக்கிச் சொல்லலாம். பின்னர் ஸ்ரீசாயிபாபாவின் ஆர்த்தியும், மங்கல ஆரத்தியும் எடுக்கப் பட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட வேண்டும்.

பக்தர்களின் வேண்டுதல்களை வேண்டியபடி விரைவில் அருளும் வல்லமை பெற்றது இந்த வழிபாடு. ஷீர்டி ஸ்ரீசாயிநாதர் தன் பொருட்டு பக்தர்கள் வழிபட அனுமதித்த தனித்துவமான வழிபாடு இது என்பார்கள். நோய், கடன், பொருளாதாரப் பிரச்னைகள், வழக்குகள், வேலையின்மை, கல்யாணத் தடை, குழந்தைப் பேறு இல்லாமை முதலான சகல பிரச்னைகளும் தீர்ந்து சுபிட்சம் அடைய வரம் அருளும் அபூர்வ பூஜை இது.

இந்தப் பிரச்னைகள் அனைத்தும் விலகி அனைவரும் வாழ்வில் நன்மை அடையவும், வாசகர்களின் நலன் வேண்டியும் ஷீர்டி ஸ்ரீசாயி சத்யநாராயண பூஜைக்கு ஏற்பாடு செய்துள்ளது சக்தி விகடன்.

ஷீர்டி ஸ்ரீசாயிநாதரின் மகா சமாதித் திருநாளான விஜயதசமி புண்ணிய தினத்தில் - 26.10.2020 திங்கள்கிழமை அன்று (காலை 9:30 - 12:00 மணி வரை) சக்தி விகடனும் துவாரகாமாயி ஆத்மஞானியர் மையமும் இணைந்து நடத்தும் இந்த அற்புதமான வழிபாட்டில், வாசகர்களும் `இணைய வீடியோ’ மூலம் (Zoom Meet) கலந்துகொண்டு வழிபட்டுப் பலன் அடையலாம்.

சகலமும் சாயி!
சகலமும் சாயி!

பூஜைக்கு தேவையான மங்கலப் பொருள்கள்;

1. ஷீர்டி ஸ்ரீசாயிபாபா திருவுருவச்சிலை அல்லது படம்,

2. ஸ்ரீசத்யநாராயணரின் திருவுருவம் அல்லது படம்

3. மஞ்சள்

4. குங்குமம் (விபூதி)

5. வெற்றிலை - பாக்கு

6. அட்சதை (அரிசியைச் சிறிதளவு மஞ்சள் பொடியில் தண்ணீர் விட்டு கலந்து வைத்துக்கொள்ளவும்), உதிரிப் பூக்கள்.

7. பஞ்சாமிர்தம்

8. கற்பூரம்

9. சந்தனம், ஜவ்வாது

10. ஒரு பித்தளை தாம்பாளம், இரண்டு தட்டுகள்

12. ஒரு கலசம் (சொம்பு)

13. சுத்தமான தண்ணீருடன் பஞ்ச பாத்திரம் - உத்தரணி

14. தேங்காய்கள்- 5

15. அச்சு வெல்லம் 2 கட்டி

16. பால் - அரை கப்

17. நவதானியங்கள் ( சிறிய அளவில் ஒன்பது தானியங்கள் சேர்ந்த கலவை)

18. இரண்டு ரூபாய் நாணயம்

19. நைவேத்தியம் செய்ய கோதுமை மாவு கேசரி

20. மாவிலை

வாசகர்களின் கவனத்துக்கு...

இந்த பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், சங்கல்பக் கட்டணம் (ரூ.250/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஷீர்டி ஸ்ரீசாயிசத்யநாராயணர் பூஜை - சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் நன்மைக்காக வழிபாட்டில் சிறப்புச் சங்கல்பமும் பிரார்த்தனையும் நடைபெறும்.

விஜய தசமித் திருநாளான 26.10.2020 திங்களன்று காலை 9:30 மணியளவில் வழிபாடு தொடங்கும். முன்பதிவு செய்துகொள்ளும் வாசகர்கள் வீடியோ (zoom meet) மூலம் வழிபாட்டை தரிசிக்கலாம். அதற்கான இணைப்பு முகவரி (zoom meet link) முதல் நாளே அதாவது 25.10.2020 ஞாயிறன்று வாசகர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

முன்பதிவு செய்துகொள்ளும் வாசகர்கள், தரிசனத்துக்காக வீடியோ இணைப்பில் இணைவதோடு, அவரவர் வீட்டிலிருந்தபடி வழிபாடும் செய்யலாம். அங்ஙனம் வழிபட விரும்பும் வாசகர்கள், தங்கள் வீட்டில் பூஜைக்குத் தேவையான முன்னேற்பாடுகள் மற்றும் பொருள்களுடன் முன்னதாகத் தயாராகிக்கொள்ளவும்.

சத்யநாராயண பூஜை
சத்யநாராயண பூஜை

வாசகர்கள் அவரவர் வீட்டிலேயே வழிபட ஏதுவாக, ஸ்ரீசத்ய நாராயணர், ஷீர்டி ஸ்ரீசாயிபாபா வண்ணப்படங்களும் வழிபாட்டு முறைகள், ஸ்ரீசாயி அஷ்டோத்திர நாமாவளி உள்ளிட்டவை அடங்கிய தொகுப்பும் (Pdf வடிவில்) மின்னஞ்சல் மூலம் முன்னதாக அனுப்பிவைக்கப்படும். அவற்றைத் தரவிறக்கம் செய்து பூஜைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அத்துடன், முன்பதிவு செய்துகொள்ளும் வாசகர்களுக்கு ஷீர்டியில் இருந்து விசேஷமாகப் பெறப்பட்ட புனிதம் மிக்க உதிப் பிரசாதம் 1.11.2020 தேதிக்குள் அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்).

முன்பதிவு மற்றும் சங்கல்ப விவரங்களுக்கு: 73974 30999; 97909 90404

நீங்களும் இந்த பூஜையில் கலந்துகொண்டு சங்கல்பிக்க இங்கே க்ளிக் செய்யவும்

அடுத்த கட்டுரைக்கு