Published:Updated:

வரம் தருவாள் வாராஹி! ஸ்ரீமகா வாராஹி ஹோமம்... நீங்களும் சங்கல்பிக்கலாம்!

இந்த நவராத்திரி நன்னாள் முழுக்க ஸ்ரீமகா வாராஹியின் மூல மந்திர கோடி பாராயணமும் சரபேஸ்வர, சூலினி, பிரத்யங்கிரா நாமார்ச்சனைகளும் நடைபெற உள்ளன.

நவராத்திரி கொண்டாட்டங்களின் ஹைலைட் கொலுதான். அதிலும் சமீப ஆண்டுகளாக, ஏதேனும் ஒரு கருத்தை மையமாகக் கொண்டு வைக்கப்படும் 'தீம்மேட்டிக்' கொலுக்கள் பரவலாகப் பிரபலமாகிக்கொண்டு வருகின்றன. சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ரஞ்ஜனா பாலசுப்ரமணியனின் இல்லத்தில், 'தீம்மேட்டிக்' கொலுவோடு சேர்ந்து இன்னும் ஒரு சிறப்பும் உண்டு. ஒவ்வோர் ஆண்டும் என்ன கருத்தை மையமாகக் கொண்டு கொலு வைக்கிறார்களோ, அதைப் பற்றிய விவரங்களை முழுமையாகத் திரட்டி, அதற்கேற்ற படங்களுடன் நல்லதோர் புத்தகமாக வெளியிட்டு, கொலுவுக்கு வரும் விருந்தினர்களுக்கு தாம்பூலத்துடன் வைத்து வழங்குகின்றனர் பாலசுப்ரமணியன் தம்பதியர்.

வாராஹி
வாராஹி

ஒன்றல்ல, இரண்டல்ல.. கடந்த 18 ஆண்டுகளாக இது போல சிறப்பு கொலுவும், அது பற்றிய புத்தகங்களும் வெளிட்டு சாதனை படைத்துள்ள இத் தம்பதி, இந்த ஆண்டு வாராஹி அம்பாளின் வரலாறு மற்றும் அவள் நிகழ்த்திய அற்புதங்களை கொலுவாக அமைத்திருக்கிறார்கள். இந்த ஆண்டு வெளியிட்டுள்ள புத்தகம், 'வரமருள்வாள் வாராஹி'. இலவசமாகக் கொடுக்கும் புத்தகம் என்பதால் ஏனோதானோவென்றெல்லாம் போடாமல், நல்ல தரமான தாளில், வண்ணமயமான அருமையான படங்களும் வாராஹியின் திருவுருவைத் தாங்கிய அட்டைப் படமுமாக 252 பக்கங்களில் அமர்க்களமாக இருக்கிறது அந்நூல்.

வாராஹி கொலு
வாராஹி கொலு

கொலுவுக்கு வந்த விருந்தினர்களுக்கு வாராஹியின் கதையைச் சொல்வதும், சுண்டல் விநியோகிப்பது, தாம்பூலம் கொடுப்பது என்று படு பிஸியாக இருந்தனர் பாலசுப்ரமணியனும் அவர் மனைவி ரஞ்ஜனாவும். இருந்தாலும் சில நிமிடங்களை ஒதுக்கி 'சக்தி விகடனு'க்காகப் பேசினார். ''வாராஹி பத்தி கொலு வைக்கலாம்னு முடிவு செய்ததுமே பெங்களூரில் இருக்கும் வாராஹி உபாசகர் வாராஹி குமார் மாமாதான் நினைவுக்கு வந்தார். அவர்தான் எங்களுக்கு வாராஹி பத்தின தகவல்களை எல்லாம் கொடுத்து உதவினார். வழக்கமாக எங்க புத்தகங்களுக்கு எல்லாம் காஞ்சி மடத்திலிருந்து ஶ்ரீபாலபெரியவா தான் ஶ்ரீமுகம் தந்து ஆசி தருவார். இந்த முறை பல நெருக்கடிகள், கொரோனா கட்டுப்பாடுகள் எல்லாம் இருந்ததால் பெரியவாகிட்ட ஶ்ரீமுகம் வாங்க முடியல..

ஶ்ரீ மஹாவாராஹி என்றாலே வாரி வாரி வழங்குபவள் என்று அர்த்தம்.. அவளை நம்பிக்கையுடன் வழிபடும் பக்தர்களை அவள் என்றும் கைவிடுவதில்லை!'' என்றார் பாலசுப்ரமணியன்.

ஶ்ரீ ராஜராஜேஸ்வரி
ஶ்ரீ ராஜராஜேஸ்வரி

''ஶ்ரீ லலிதா பரமேஸ்வரி பண்டாசுரனுடன் போர் புரியும்போது, அம்பிகையின் உடலில் இருந்து தோன்றிய சப்தகன்னியருள் ஒருவர்தான் வாராஹி. எனவே அவள் பராசக்தியின் ரூபம்! ஶ்ரீ ராஜராஜேஸ்வரியின் படைத்தலைவி. போர்க்கடவுளாகக் கருதப்படும் இவளை வழிபட்டால் வெற்றியைத் தருவாள் என்பது ஐதீகம். தோல்விகள், அவமானங்கள் போன்றவற்றில் இருந்து நம்மைக் காப்பவள் இந்த தேவி!

வாராஹி உபாசனை தைரியத்தைத் தருவதோடு, எதிர்ப்புகளைச் சந்திப்பவர்களுக்கு வெற்றியையும் தரும். எனவேதான், 'வாராஹி பக்தனோடு வாதாடாதே' என்று பெரியவர்கள் சொல்வார்கள். 'ஜகத்துக்குத் தாயாகவும் கருணைக்கடலாகவும் இருக்கும் அம்பிகையிடம் பக்தி இருந்தால், அம்பிகை இந்த லோகத்தில் வித்தை, தனம், ஆரோக்கியம், ஆயுள் போன்றவற்றை அடையச் செய்து, பிறகு பரமானந்தத்தையும் அருள்வாள்' என்பது காஞ்சி ஶ்ரீ மகா ஸ்வாமிகள் அருள்வாக்கு.. ஶ்ரீவாராஹியைத் துதிப்பவர்களுக்கு, அவர்களுடன் இருந்து கைபிடித்து வழிநடத்துவாள் அந்த தேவி!'' என்று கூறி முடித்தார் ரஞ்ஜனா.

வாராஹியை வழிபடுங்கள்; வரம் பெறுங்கள்! சகல துன்பங்களையும் நீக்கும் வாராஹி அன்னையின் அருளைப்பெற ஸ்ரீமகா வாராஹி ஹோமத்திலும் பங்கு பெறுங்கள்!

ஸ்ரீவாராஹி அன்னை
ஸ்ரீவாராஹி அன்னை

ஸ்ரீமகா வாராஹி ஹோமம்:

நன்மைகள் அருளும் ஸ்ரீவாராஹி அன்னையை ஸ்ரீமகா வாராஹி ஹோமம் செய்து வழிபட்டால் தீராத தொல்லைகள் யாவும் தீர்த்து வைப்பாள் என்கின்றன சாஸ்திரங்கள். அந்த வகையில், ஸ்ரீவாராஹிக்கு உகந்த இந்த ஸ்ரீமகா வாராஹி ஹோமத்தை நவராத்திரி வைபவத்தை முன்னிட்டு விஜயதசமி நன்னாளில் உலக நன்மைக்காகவும் வாசகர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தாரின் நலன் வேண்டியும் சக்தி விகடன் சார்பில் நடத்தவுள்ளோம்.

அதன்படி சென்னை கோடம்பாக்கம் ஸ்ரீதேவி கருமாரியம்மன் மகா பிரத்யங்கிரா தேவி திருக்கோயில் மற்றும் சக்தி விகடன் இணைந்து வாசகர்களுக்காக ஸ்ரீமகா வாராஹி ஹோமம் நடத்தவுள்ளோம். இது வரும் 15-10-21 அன்று விஜயதசமி நன்னாளில் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தில் சங்கல்பித்து வழிபட்டால் தடைகள் விலகும், எடுத்த காரியங்கள் வெற்றி அடையும். யம பயம் போக்கும், வாழ்வில் தொடர்ந்து வரும் தரித்திரம் நீக்கும். வீண் அச்சங்கள் நீங்கும், சகல காரியங்களிலும் வெற்றி தரும். திருமண தடை உத்தியோக தடை நீங்கும், வாழ்வில் சோதனைகள் நீங்கி சாதனைகள் தொடரும் என ஆன்மிக நூல்கள் கூறுகின்றன.

மேலும் இந்த நவராத்திரி நன்னாள் முழுக்க ஸ்ரீமகா வாராஹியின் மூல மந்திர கோடி பாராயணமும் சரபேஸ்வர, சூலினி, பிரத்யங்கிரா நாமார்ச்சனைகளும் நடைபெற உள்ளன. இதனால் இந்த வைபவத்தில் இணைந்து சங்கல்பம் செய்து கொள்வது விசேஷம் எனலாம்.

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (₹500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (மஞ்சள் + குங்குமம் + ஹோம பஸ்மம்) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு