Published:Updated:

பெரம்பலூர்: பெண்கள் வேண்டியவற்றை வழங்கும் வீரபாஞ்சாலி அம்மன் தரிசனம்!

வீரபாஞ்சாலி அம்மன்

தற்போது கும்பாபிஷேகம் நிறைவுபெற்ற நிலையில் 48 நாள் மண்டல பூஜை தினமும் ஒவ்வொருவர் சார்பாக நடைபெற்று வருகிறது. தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்கிறார்கள்

பெரம்பலூர்: பெண்கள் வேண்டியவற்றை வழங்கும் வீரபாஞ்சாலி அம்மன் தரிசனம்!

தற்போது கும்பாபிஷேகம் நிறைவுபெற்ற நிலையில் 48 நாள் மண்டல பூஜை தினமும் ஒவ்வொருவர் சார்பாக நடைபெற்று வருகிறது. தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்கிறார்கள்

Published:Updated:
வீரபாஞ்சாலி அம்மன்
பெரம்பலூர் அருகே உள்ள பூலாம்பாடி கிராமம் ஸ்ரீ திரௌபதி அம்மன் (வீரபாஞ்சாலி அம்மன்) ஆலய கும்பாபிஷேகம் கடந்த ஜூலை 6-ம் தேதி வெகுவிமர்சையாக நடைபெற்றது.

வரலாறு கண்டிராத அலைமோதும் மக்கள் கூட்டத்தில், பிற மாநிலங்களிலிருந்தும், நாடுகளிலிருந்தும் பக்தர்கள் திரௌபதி அம்மனை தரிசிக்க வந்ததாக கூறப்படுகிறது. தொழிலதிபர் டத்தோ பிரகதீஷ்குமாரின் உதவியால் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் 40 வருடங்களாக கோயில் பணியில் அனுபவம் பெற்று விளங்கும் கிருஷ்ணமூர்த்தி ஸ்தபதியார் மூலம் இப்பணி நிறைவு பெற்றது.

திரௌபதி அம்மன் ஆலயம்
திரௌபதி அம்மன் ஆலயம்

பூலாம்பாடி கிராமம் மந்தைவெளியில் கால மாற்றங்களால் சிதைந்து கிடந்த திரௌபதி அம்மன் ஆலயம், சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பானது எனக்கூறப்படுகிறது. கிபி 1800-களின் இறுதியில் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. "திரௌபதி அம்மன் என்பவள் மகாபாரதக் கதையில் வரும் பஞ்ச பாண்டவர்களின் மனைவியாவாள். ஐந்து பஞ்ச கன்னிகைகளில் திரௌபதியும் ஒருவள். கருமை நிறைந்தவள். நெருப்பில் தோன்றியவள்!" என்கிறது வரலாறு.

பல நூற்றாண்டுக்கு முன்னர் சிவனிடம் வரம் வேண்டி வந்து, இவ்விடத்தில் திரௌபதி எழுந்தருளினாள் என்று கூறப்படுகிறது. காலப்போக்கில் மண்ணில் புதையுண்ட இவ்வாலயம் தற்போது எழில்மிகு தோற்றத்துடன் மிளிர்கிறது. மகா மண்டபத்தின் மேற்கு புறம் விநாயகரும், வடபுறம் தர்மராஜர் ஸ்வாமிகளும், தென்புறம் ஸ்ரீஅரவான் சந்நிதிகளும் உள்ளன. பாண்டவர்கள் பயன்படுத்தியது போன்ற வேலாயுதமும் இங்கு அமைந்துள்ளது. கொடிமரத்தின் கிழக்குப்புறம் பலிபீடமும் , மேற்குப்புறம் போத்தராஜாசுவாமி சந்நிதியும் அமைந்துள்ளன. கோபுரத்தில் மகாபாரத கதாபாத்திரங்களின் தத்ரூபமான சிலைகள் இடம் பெற்றுள்ளன. திரௌபதி அம்மனின் அழகைக் காண கண் கோடி வேண்டும்! அழகும் கம்பீரமும் கொண்ட நித்ய கன்னிகையாக இந்த தேவி விளங்கி வருகிறாள்.

திரௌபதி அம்மன்
திரௌபதி அம்மன்

குறிப்பாக பெண்கள் வேண்டியவற்றைத் தருபவளாகவும், பல்வேறு தோஷங்கள் நீக்குபவளாகவும், பல தரப்பட்ட பிணி பீடைகள் நீக்குபவளாகவும் இந்த அன்னை விளங்குகிறாள். வரம் தரும் தேவியாக வானவர் தலைவியாக அன்னை விளங்குவதால் பல இடங்களில் இருந்து அம்மனை தரிசிக்க பக்தர்கள் இங்கு வந்து செல்கிறார்கள். வாழ்வில் சுபிட்சம் பெருக, வெற்றிகள் குவிய, வீண் தொல்லைகள் அகல, மன அமைதி பெற, திரௌபதி அம்மன் நல்ல பலனை அளிப்பாள் என்கிறார்கள். தற்போது கும்பாபிஷேகம் நிறைவுபெற்ற நிலையில் 48 நாள் மண்டல பூஜை தினமும் ஒவ்வொருவர் சார்பாக நடைபெற்று வருகிறது. தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்கிறார்கள். தினமும் மண்டல பூஜையின் நிறைவாக அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது. "அம்பாளின் பரிபூரண அருள் பெற வாருங்கள்! தாயே உங்களை ஆசீர்வதிப்பதை உணர்வீர்கள்!" என்கிறார்கள் இந்த ஊர் மக்கள்.

- பூஜா ச. மாணவப் பத்திரிகையாளர், பெரம்பலூர்