Published:Updated:

எங்கள் ஆன்மிகம்: “தெய்வங்களுக்கு எல்லாம் தெய்வமான பெருமாள் சுவாமி!”

பெருமாள் சுவாமி
பிரீமியம் ஸ்டோரி
News
பெருமாள் சுவாமி

டாக்டர் ஆர்.டி.சாமி

ரு பூரா பல சாமிகள் இருந்தாலும் எப்போதும் ஒருவரின் கூட இருந்து காப்பது குலசாமிதான். குறிப்பிட்ட கூட்டத்துக்கு என்றே சாமியாக இருந்து காக்கும் குலதெய்வங்கள் தியாகத்தின் வடிவானவை.

‘குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறவாதே... குலதெய்வத்துக்குக் கூடுன சாமி உலகத்தில் இல்லை...’ எனப்போன்ற பழமொழிகள் எல்லாம் குலசாமியின் அருமை பெருமைகளைச் சொல்லும் காலக் கல்வெட்டுகள் எனலாம். குலசாமியைக் கும்பிடும்போதுதான் ஒருவர் தன் முன்னோர்களின் வரிசையில் இணைந்து கொள்கிறார். குலசாமியின் வடிவில் தன் முன்னோர்களை வழிபடுகிறார் என்று பெரியோர்கள் சொல்வார்கள்.

எங்கள் ஆன்மிகம்:  “தெய்வங்களுக்கு எல்லாம் தெய்வமான பெருமாள் சுவாமி!”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

குலம் தழைப்பதற்காகப் போராடியவர்களை யும், குலம் காப்பதற்காகக் காவல் நின்றவர் களையும் மறக்காமல், அந்தக் குலத்தவர் குலதெய்வமாக வணங்குகிறார்கள். அவ்வகை யில், பல்வேறு கூட்டங்களுக்கு விதவிதமான குலசாமிகள் இருந்து வருகின்றனர்.

முற்காலத்தில் எங்களின் முன்னோர்கள், ஆந்திர மாநிலத்தின் ராயலசீமா பகுதியில் சித்தூர் அருகில், கால்நடைகள் பராமரிப்பு மற்றும் தோட்டவேலைகளைச் செய்து வந்துள்ளனர். 13-ம் நூற்றாண்டில் வடக்கிலிருந்து பெரும் படையெடுப்பு நிகழ்ந்தது. அலாவுதின் கில்ஜி ராயலசீமாவைக் கைப்பற்றினார். அதற்கு முன்பாக இங்கு ராஜா ரத்னசிம்ஹா என்பவர் ஆண்டு வந்தார். அந்நியர்கள் எங்கள் பகுதிகளைக் கைப்பற்றிய பிறகு, அங்கே வன்முறைகளும் அராஜகங்களும் நிகழ்ந்தன. அதனால் தங்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, எங்கள் முன்னோர் அந்தப் பகுதியை விட்டு புலம்பெயர்ந்தனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அங்கிருந்து தமிழகத்துக்கு வந்த நாயுடு இனத்து மக்கள் தனித்தனியாகப் பிரிந்து வெல்லூர், தஞ்சை, கோவை, மதுரை மற்றும் பிற தென் மாவட்டங்களில் குடியேறினர்.

எங்கள் ஆன்மிகம்:  “தெய்வங்களுக்கு எல்லாம் தெய்வமான பெருமாள் சுவாமி!”

இவ்வாறு புலம்பெயர்ந்தவர்களில் மதுரைக்குச் சென்றவர்களும் உண்டு. அவர் களில் சிலர், அழகிரிசாமி என்பவரின் தலைமையில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பாதையில் (மதுரை - தேனி வழி) 25 கி.மீ தொலைவிலுள்ள செல்லம்பட்டி அருகில் குடில்கள் அமைத்துத் தங்கினர். அந்தப் பகுதியில் எங்கள் முன்னோர், கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயம் போன்ற வேலைகளை வாழ்வாதரமாகக் கொண்டு வாழ்ந்தனர்.

எங்கள் ஆன்மிகம்:  “தெய்வங்களுக்கு எல்லாம் தெய்வமான பெருமாள் சுவாமி!”

இந்த நிலையில், ஒரு நாள் இரவு எங்களின் குலத் தலைவர் அழகிரிசாமியின் கனவில், கைகளில் மாணிக்கக் கற்களை ஏந்தியவாறு காட்சியளித்தாராம் பெருமாள். அத்துடன், `நான் ஈஸ்வர பெருமாள் சுவாமி. காலம் காலமாய் உங்களைக் காத்து வரும் வேங்கடாசலபதியின் அம்சம் நான். உங்களின் ஆதி இடத்திலிருந்து உங்களைப் பின்தொடர்ந்து இங்கு வந்துள்ளேன்' என்று கூறியுள்ளார்.

மேலும், `நானே உங்கள் கூட்டத்தை இனி காக்க வல்லவன். கொடிய நோயிலிருந்தும், தீய சக்திகளிடம் இருந்தும் மற்ற பேரிடர்களில் இருந்தும் உங்களைக் காப்பேன்’ என்றும் அருளி மறைந்தாராம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கனவைக் கண்டு சிலிர்த்துபோன அழகிரி சாமி, காலையில் விழித்தெழுந்ததும் தன் சமூகத்தினரிடம் கனவு விஷயத்தை எடுத்துக் கூறி, `ஈஸ்வர சாமியே இனி நம் குலசாமி' என்று அறிவித்துள்ளார். அதன்படி கருவேப்பிலை என்ற சிற்றூர் அருகில், திருக்கோயிலும் விளக்குக் கம்பமும் அமைத்து வழிபட்டு வந்தனர். இன்றும் எங்கள் வகையறாவினர் சென்று விளக்குக் கம்பத்தில் விளக்கேற்றி வழிபட்டு வருகிறார்கள்.

எங்கள் ஆன்மிகம்:  “தெய்வங்களுக்கு எல்லாம் தெய்வமான பெருமாள் சுவாமி!”

மும்மூர்த்திகளில் பகவான் விஷ்ணுவின் அவதாரமாகவே கருதப்படுகிறார் எங்கள் ஜோதி மாணிக்கம் பெருமாள் சுவாமி . அவரை வேங்கடேசா, ஈஸ்வரா, ஜெகநாதா, வாசுதேவர் என்றும் நாங்கள் அழைப்பதுண்டு. அந்தச் சாமியை ஜோதி வடிவில் வழிபட, விளக்குத் தூண் நிறுவி, அதில் விளக்கு ஏற்றி குலதெய்வமாக வழிபாடு செய்துவந்துள்ளனர். மதுரையம்பதியில் நாயக்க மன்னர்கள் ஆட்சியில் எங்களின் குலதெய்வம் பிரசித்தமாக வணங்கப்பட்டிருக்கிறார். அப்போது, பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு பிரபலமான கோயிலாக விளங்கி வந்துள்ளது.

காலப்போக்கில் இந்தக் கோயில் பழைமை யாகி, பிரசித்தம் குறைந்துபோனது. எங்கள் குலத்தவரால் மட்டுமே வழிபாடு செய்யப்படும் கோயிலாக இருந்துவந்துள்ளது. இன்றும் எங்கள் எல்லா விசேஷங்களுக்கும் இந்தச் சாமியை வணங்கி அருள் கேட்ட பிறகே வேலையைத் தொடங்குவோம்.

கேட்டதை கேட்டவண்ணமே கொடுக்கும் எங்கள் பெருமாள் சுவாமி கருணையே வடிவானவர். எத்தனையோபேரின் குறை களைத் தீர்த்து நலம் அளித்தவர். இங்கு இவரை வேண்டிக்கொண்டு அற்புத மாற்றங்கள் கண்டவர் அநேகம். அச்சமின்றி வாழ எங்கள் சாமி இங்கே அபயமளிக்கிறார் எனலாம்.

எத்தனையோ பேரின் உயிரையும் உடைமை களையும் காத்துக் கொடுத்தவர் பெருமாள் சுவாமி. அவரை வணங்கித் தொடங்கப்படும் எந்தக் காரியமும் தடைப்பட்டு நின்றதில்லை எனலாம். இன்றும் எங்கெங்கோ உள்ள எங்கள் வகையறாவினர் ஒன்றுகூடி இவருக்கு வழிபாடுகள் நடத்திவருகிறோம். கால மாற்றத்தால் தற்போது கோயிலைப் புனரமைக்க வேண்டும் என்ற கட்டாயம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. சில சந்நிதிகளையும் மண்டபங் களையும் கட்டவிருக்கிறோம். இதற்கான பொருளையும் அருளையும் எங்கள் குலசாமி அளிப்பார் என்று நம்புகிறோம்.

எத்தனையோ துன்பங்களை எங்கள் கூட்டம் சந்தித்தபோதெல்லாம் எங்கள் குலதெய்வமே முன்னின்று எங்களைக் காத்து வந்துள்ளது. அந்நியர்களின் அநியாயத் தாக்குதல் எங்கள்மீது நடந்தபோதெல்லாம் எங்கள் குலதெய்வமே துடியாக நின்று அவர்களைத் தண்டித்து எங்களை வாழ வைத்தது.

மதுரைக்கு மேற்கே 25 கி.மீ தொலைவில், மதுரை - தேனி நெடுஞ்சாலையில் கருமாத்தூர், செல்லம்பட்டி ஊர்களுக்கு அருகே கொடிக் குளம் சாலையில் இந்தக் கோயில் அமைந்துள்ளது (தொடர்புக்கு - 98942 10281).

நீங்களும் ஒருமுறை வந்து எங்கள் சாமியை வழிபட்டுச் செல்லுங்கள்; தாய்க்கு நிகரான அன்பும் கருணையும் கொண்ட எங்கள் குலசாமி உங்களையும் காத்து நிற்பார்.

குலதெய்வ வழிபாடு நம் சந்ததிக்குக் காப்பு. நீங்களும் அனுதினமும் உங்கள் குலதெய்வத்தை வழிபடுங்கள். அவர்களின் பேரருளால், சகல தோஷங்களும் ஆபத்துகளும் நீங்கி, உங்கள் குலம் செழிக்கும்; வாழ்க்கை வளம்பெறும்!