Published:Updated:

எங்கள் ஆன்மிகம்: 'மனித உருவில் வருவாள்!'

மேல்மாந்தை பெத்தனாட்சி அம்மன்
பிரீமியம் ஸ்டோரி
News
மேல்மாந்தை பெத்தனாட்சி அம்மன்

குலம் காக்கும் தெய்வம் - மேல்மாந்தை பெத்தனாட்சி அம்மன்!

பி.குருமூர்த்தி, மன்னார்குடி

குலம் காக்கும் தெய்வமம்மா...

குறி சொல்லும் தேவியம்மா!

தீப்பாஞ்ச தெய்வமம்மா...

தீமைகளை விலக்கும் தேவியம்மா!

பெத்தவளைப் போல வந்து

கருணை காட்டும் தெய்வமம்மா!

பெத்தனாட்சி மாரியம்மா...

பெருங்கூட்டம் காக்கும் தெய்வமம்மா!

பெத்தனாட்சி - வீரத்துக்கும் தியாகத்துக்கும் அடையாளமாக நிற்கும் பெருந்தேவி. எங்கள் குலத்துக்கே காவலாக இருந்துவரும் கருணை தெய்வம். மழையாகப் பொழிந்துவந்து மண்ணைக் காப்ப வளும் இவளே. நதியாக ஓடிவந்து நஞ்சைதனைக் காப்பவளும் இவளே.

உயிர்களை உருவாக்குவதும் உருவாக்கிய ஒன்றை, பாதுகாப்பதி லும் பெண்ணே சிறந்தவளாகிறாள். அதனால் அவளே தாய் தெய்வமாக உருமாறி வழிபாட்டுக்கும் உரியவளா கிறாள். அப்படித்தான் எங்களுக்கும் தென்னாட்டு மக்களுக்கும் பெரும் தெய்வமானாள் பெத்தனாட்சி அம்மன்.

எங்கள் ஆன்மிகம்:  'மனித
உருவில் வருவாள்!'

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

15-ம் நூற்றாண்டு. ஒட்டுமொத்த தமிழகமே ஆங்காங்கே போரும் பூசலுமாக இருந்த காலம். தங்களை யார் ஆளுகிறார்கள், யார் அழிக்கிறார்கள் என்று மக்கள் உணர்ந்துகொள்ள முடியாத குழப்பமான காலகட்டம் அது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அப்போது மதுரை விஜயநகரப் பேரரசின் பிரதிநிதிகளாக வந்த நாயக்க மன்னர்களின் ஆளுகையில் இருந்தது. ஆனாலும் தென்காசி, கொற்கை, திருநெல்வேலி போன்ற பகுதிகளில் பாண்டியர்களின் ஆட்சி தொடர்ந்து நடைபெற்று கொண்டுதான் இருந்தது.

திருநெல்வேலியை ஆண்ட மன்னன், அரிகேசரி சடையவர்மன் பராக்கிரம பாண்டியன். அவனின் சகோதரி பெயர் மாலையம்மன். மாதர்களில் மாணிக்கமான குணவதி.

பருவமடைந்த மாலையம்மனுக்கும் அழகன்பெருமாள் என்ற குறுநில மன்னனுக்கும் மணமுடித்து வைக்கிறார் பராக்கிரம பாண்டியன். அவர்களின் இல்லறமும் நல்லறமாகத் தொடர்ந்தது. போர் வடிவில் போதாத வேளை வந்தது மாலையம்மனுக்கு.

எங்கள் ஆன்மிகம்:  'மனித
உருவில் வருவாள்!'

குரும்பூர் என்ற இடத்தில் நாயக்கர்கள் பாண்டியர்கள்மீது போர் தொடுத்தனர். பாண்டியருக்கு ஆதரவாகப் போரை முன்னின்று நடத்திய அழகன்பெருமாள், அந்தப் போரில் நாயக்கர் படைத்தளபதியான ராமப்பய்யனுடன் போரிட்டு போர்க்களத்திலே வீரமரணமடைந்தார். அழகன்பெருமான் போரில் மாண்டதை...

`திற மேற விஸ்வநாத திருமேலந்திரன்

சித்த மகிழ் ராமப்பையன் பாண்டியரை

பொர மாற விட்டு குரும்பூர் அழகன்

தலை துணித்தனன் துட்டரை கழுவேற்றினன்

பூசுரர்கள், தேவர் பதியும் பொலிவுற

நடத்தினன் புகழ் நிறுத்தினன்'

என்ற பாடல் மூலம் அறியலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கணவன் போரில் இறந்ததைக் கேள்வியுற்ற மாலையம்மன், “மன்னவனை இழந்தபின்னர் மற்றொரு வாழ்வுண்டோ, எங்கள் குலம் வெற்றிபெற என்னையே தருகிறேன். ஏற்றுக்கொள்ளுங்கள் தெய்வங்களே. என் கணவன் இறந்தததற்கு நீதி சொல்லுங்கள்” என்று வெஞ்சினம்கொண்ட அந்த மாதரசி, அக்கால வழக்கப்படி உடன்கட்டை ஏற விரும்பினாள். அதற்காக புகுந்த வீட்டாரிடம் எரியூட்டித் தருமாறு வேண்டினாள். `வாழவந்த குலமகளை வேகவைக்க விரும்ப மாட்டோம்' என்று அவர்கள் மறுத்துவிட்டனர்.

ஶ்ரீ பெத்தனாட்சி பெரியாண்டவர் சுவாமிகள்
ஶ்ரீ பெத்தனாட்சி பெரியாண்டவர் சுவாமிகள்

கொண்ட தீர்மானத்தில் பிடிவாதமாக இருந்த மாலையம்மனும் தன் சகோதரர்களான பாண்டியர்களிடம் வந்து தீ மூட்டி தரச் சொன்னாள். தங்கை கேட்டு இதுவரை எதையுமே மறுக்காத பாண்டியர்களும் கண்ணீருடன் தீ மூட்டி தந்தார்கள்.

மளமளவென்று எழுந்தது தீ! அந்தத் தீயினுள் சரண் புகுந்தாள், தீக்கு நிகரான அந்த தேவி. போரில் வீழ்ந்துபட்ட தங்கள் குலம் மீண்டெழவும், நாடும் தன் மக்களும் நலம் பெறவும் ஆங்கார சக்தியாக தேவி எரிந்துகொண்டிருந்தாள். பெருமழை பொழிந்தபோதும் அந்தத் தீ மட்டும் கொழுந்துவிட்டு மூன்று நாள்கள் எரிந்ததாம். ஊரே அந்தத் தியாகவதியின் பெருமையைப் பேசிப் பேசி கலங்கியது.

தங்கள் குலம் வெற்றிபெற தன்னையே மாய்த்துக்கொண்ட மாலையம்மன் மக்களின் தெய்வமானாள்; மகாசக்தியானாள்.

மாற்று சொல்ல முடியாத அந்த வீரத் திருமகளுக்குக் கோயில் எடுத்தனர் பாண்டியர்கள். அவளை தம் குலதெய்வமாகவே பாவித்து, தங்கள் குலத்தில் அழைக்கப்படும் சக்திக்குரிய பெயர்களுள் ஒன்றான பெத்தனாட்சி என்ற பெயரை இட்டு வணங்கினார்கள்.

எங்கள் ஆன்மிகம்:  'மனித
உருவில் வருவாள்!'

தொடர்ந்து நடைபெற்ற போரில் வெற்றி பெற வேண்டும் என்று சக்தியின் வடிவான தன் தங்கையை வணங்கி, அவள் தீ புகுந்த இடத்தில் இருந்த சாம்பலை பூசிக்கொண்டு சகோதரர்கள் போருக்குச் சென்றார்கள்.

அந்தப் போரில் பெத்தனாட்சியின் ஆசியுடன் வெற்றியும் பெற்றார்கள். அவர்கள் போரில் வெற்றிபெற்ற இடம் வேம்பார். அதற்கு அருகில் இருந்த கிராமமான மேல்மாந்தையில் மாதரசிபுரம் என்னும் புதிய தலத்தை உருவாக்கி, பெத்தனாட்சி தீ புகுந்த இடத்திலிருந்து பிடிமண் கொண்டுவந்து கோயில் கட்டினார்கள். அதே கோயிலில் பெரியாண்டவர், வேலாயுதப் பெருமாள், செட்டியப்பன் ஐயனார், கருப்பசாமி ஆகிய தெய்வங்களையும் பிரதிஷ்டை செய்து வணங்கினார்கள்.

எங்கள் ஆன்மிகம்:  'மனித
உருவில் வருவாள்!'

மண்ணையும் மக்களையும் காக்க உயிர் தியாகம் செய்த பெத்தனாட்சி இன்றும் எளிய மக்களின் நீதி தேவியாக இருந்து வருகிறாள். அடக்கு முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அபயம் அளிக்கும் அம்மனாக விளங்குகிறாள்.

எனக்கும் என் குடும்பத்துக்கும் மூத்தோளாக இருந்து காத்துவரும் இந்த அன்னை உங்களுக்கும் நலமும் வளமும் அருளட்டும். தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகில், மேல்மாந்தை என்ற கிராமத்தில கிழக்குக் கடற்கரை சாலையில்

கோயில்கொண்டுள்ள இந்த அன்னையை எல்லோருமே தரிசிக்க வேண்டும்.

எங்களுக்கு ஏதேனும் கஷ்டங்கள் வரும் போது, நாங்கள் எங்கள் குலதெய்வத்திடம் முறையிடுவோம். முறையிட்ட சில நாள்களிலேயே, எவர் மூலமாவது உதவிகள் தேடிவரும்.

எங்கள் குலதெய்வமே அந்த அன்பர்களின் வடிவில் வந்து உதவியதாக உணர்கிறோம்! இதை அனுபவ பூர்வமாக பலமுறை நான் உணர்ந்திருக்கிறேன். இதைச் சொல்லும்போதே என் உடல் சிலிர்த்து கண்கள் பனிக்கின்றன.

எப்போதும் எங்கள் குலதெய்வம் எங்கள் அருகில் இருப்பது போன்ற உணர்வை உணர் கிறேன். எங்கள் குலதெய்வத்தை தரிசிக்க, வருடம் முழுவதும் எப்போது வேண்டுமானாலும் போகலாம். சிறப்பாக ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் இரண்டாவது வெள்ளி அன்று வருடாந்திர குலதெய்வ வழிபாடு மிகச் சிறப்பாக நடைபெறும்.

அன்று எங்கள் முன்னோர் வழிச் சகோதர மக்கள் பல்லாயிரக்கணக்கானோர் ஒன்று கூடி, மூன்று நாள்கள் தங்கியிருந்து குலதெய்வ வழிபாடு செய்வோம். எண்ணியவருக்கு ஆறுதலும் தேறுதலும் தந்து காத்து வரும் பெத்தனாட்சி அம்மன் உங்களுக்கும் சகல சௌபாக்கியங்களும் தந்து காக்க வேண்டுமென்று பிரார்த்திக்கிறேன்.

ஆலயத்துக்கான வழி: தூத்துக்குடியிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் பாதையில் 55 கி.மீ தொலைவில் உள்ளது. எப்போது சென்றாலும் அம்மனை தரிசிக்கலாம்.

மண்டபங்கள்!

கோயிலின் பாகங்களில் மிக முக்கியமானது மண்டபம். கருவறைக்கு முன்னுள்ள கட்டடம் அர்த்த மண்டபம் ஆகும். அதையடுத்து விசாலமாக அமைந்த பகுதி மகா மண்டபமாகும். பெரும்பாலான கோயில்களில் இந்த இரு மண்டபங்கள் அமைந்திருக்கும். பெருங்கோயில்களில் அமையும் மண்டபங்களைப் பல வகையாகச் சொல்லி விவரிக்கின்றன ஞானநூல்கள்.

எங்கள் ஆன்மிகம்:  'மனித
உருவில் வருவாள்!'

அவற்றில் சில: ஸ்நபன மண்டபம், கேய மண்டபம், வாத்திய மண்டபம், முக மண்டபம், சோபான மண்டபம், கோபுரத் துவாரசாலா மண்டபம், ஆஸ்தான மண்டபம், யாகசால மண்டபம், புஷ்ப மண்டபம், பூஜா மண்டபம்.

இப்படி 60-க்கும் மேற்பட்ட மண்டப வகைகள் உண்டு. திருவண்ணாமலை அருகில் உள்ளது அறையணிநல்லூர். இவ்வூரின் அறையணி நாதர் கோயிலின் மண்டபத் திருப்பணி தடங்கலின்றி நடைபெற வேண்டிக்கொண்டு, `இளவெண்மதி சூடினான்' தன் இன்னுயிரைத் தியாகம் செய்த வரலாறு உண்டு.