Published:Updated:

நவகிரக மகாஹோமம்: பிணி தீர்த்து பூரண ஆயுள் அளிக்கும் சிறப்பு வழிபாடு... நீங்களும் சங்கல்பியுங்கள்!

நவகோள் லிங்கேஸ்வரர் ஆலயம்

நவகிரக மகாஹோமம்: இங்குள்ள அம்பிகை மகாவரப்ரஸாதி என்கிறார்கள். இவளை வணங்கிட மங்கல வாழ்வும் குடும்ப உறவும் மேம்படும் என்கிறார்கள்.

Published:Updated:

நவகிரக மகாஹோமம்: பிணி தீர்த்து பூரண ஆயுள் அளிக்கும் சிறப்பு வழிபாடு... நீங்களும் சங்கல்பியுங்கள்!

நவகிரக மகாஹோமம்: இங்குள்ள அம்பிகை மகாவரப்ரஸாதி என்கிறார்கள். இவளை வணங்கிட மங்கல வாழ்வும் குடும்ப உறவும் மேம்படும் என்கிறார்கள்.

நவகோள் லிங்கேஸ்வரர் ஆலயம்

வைகாசி பௌர்ணமி நாளில் 3-6-2023 அன்று சக்திவிகடனும் புதுச்சேரி நவகோள் லிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகமும் இணைந்து நவகிரக மகாஹோமம் நடத்த உள்ளது. இதில் கலந்து கொண்டால் நவகிரகங்களால் உருவாகும் தோஷங்கள், பாவங்கள் யாவும் தீரும். அதேபோல பக்தர்கள் விரும்பிய அனைத்தையும் ஈசனிடம் வாக்களித்தபடி நவகிரகங்கள் நமக்கு செய்து கொடுக்கும் என்பதும் அதிசய நம்பிக்கை.

நவகோள் லிங்கேஸ்வரர் ஆலயம்
நவகோள் லிங்கேஸ்வரர் ஆலயம்

புதுச்சேரி அடுத்துள்ள கண்டமங்கலம் ஒன்றியம் பங்கூர் அருகே நவம்மாள் காப்பேர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு நவகோள் லிங்கேஸ்வரர் ஆலயம். சோழர் காலத்தைச் சேர்ந்த இந்த ஆலயத்தில் நவகிரகங்களும் வழிபட்டு தங்கள் ஆற்றலைப் பெற்றன என்கிறது தலவரலாறு.

உலகிலேயே இந்தக் கோயிலுக்குள் மட்டும்தான் கருவறையில் உள்ள சிவபெருமானை நவகோள்களும் வணங்கி நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர். அதனாலேயே எம்பெருமான் இங்கு நவகோள் லிங்கேசுவரராக விளங்குகிறார். நவகோள் லிங்கேஸ்வரரை வணங்குவதால் பௌர்ணமி நாளில் வணங்கி வழிபட்டால் நம் வாழ்வில் ஏற்படும் இடர்கள் யாவும் நீங்கும் என்பது நம்பிக்கை. அதிலும் பௌர்ணமி நாளில் இங்கு நடைபெறும் நவகோள் இடரறு வேள்வியில் சங்கல்பம் செய்து கொண்டால் நவகிரக தோஷம் நீங்கித் திருமணப் பேறு, குழந்தைப் பேறு, வேலை வாய்ப்பு, இழந்த செல்வம் திரும்பப் பெறல், தம்பதி இடையே ஒற்றுமை, நோய் நொடியின்றி ஆரோக்கியமான நீண்ட வாழ்வு பெறுதல் எனப் பல நன்மைகளைப் பெறலாம் என்கிறது தலவரலாறு.

நவகோள் லிங்கேஸ்வரர்
நவகோள் லிங்கேஸ்வரர்

சுமார் 1,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சோழர் காலத்து ஆலய ஒன்று இந்த ஊரில் முழுவதுமாய்ச் சிதைந்து போய் கிடந்தது. சிவலிங்கத் திருமேனி மட்டும் அழகே உருவாக சிதைவின்றி காட்சி தந்துள்ளது. சுவாமியின் திருப்பெயர் கூடத் தெரியாத நிலையில் இவ்வூர் மக்கள் ஏதோ அவர்களுக்குத் தெரிந்த வகையில் பூஜைகள் செய்து ஈசனைக் கொண்டாடி வந்தனர். 2013-ம் ஆண்டு திருவண்ணாமலையில் வாழும் சித்தர் ஒருவர் தனது அடியார்களை இவ்வூரின் கோயிலைப் பற்றித் தெரிந்து வர அனுப்பியுள்ளார். அடியார்கள் இவ்வூரில் உள்ள ஈசன், ஆலயம் இன்றி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அளித்த தகவலால்தான் இவ்விடத்தில் சோழர் காலத்தில் சிவாலயம் இருந்ததாகவும், இங்குள்ள மூல மூர்த்திகள் ஸ்ரீநவாம்பிகை உடனுறை நவகோள்லிங்கேசுவரர் என்றும் அறிந்தனர்.

அதன்பிறகு சிவநேசன் சிவ. தங்கமணி புதுவை சிவனடியார்கள் திருக்கூட்டமும் இவ்வூர் மக்களும் இணைந்து இந்தக் கோயிலை எழுப்பி 2018-ம் ஆண்டு தை மாதம் குடமுழுக்கு விழா செய்தனர். வருடந்தோறும் இவ்வாலயத்தின் பிரம்மோற்சவ விழாவில் அம்மையப்பரின் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். இவ்விழாவில் கலந்து கொண்டு மாலை வாங்கும் பக்தர்களுக்குத் திருமணத் தடை நீங்கி ஓராண்டுக்குள் திருமணம் கைகூடும் என்பது ஐதிகம். இங்கு நவகிரக பரிகார பூஜை, குருப் பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி போன்ற நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நவகோள் லிங்கேசுவரர் சேவை அறக்கட்டளையின் கீழ் அன்னதானம், கோசாலை, ஏழை மாணவ மாணவிகளுக்குப் படிப்பு போன்ற தரும காரியங்கள் செய்து வருகின்றனர்.

ஸ்ரீநவாம்பிகை
ஸ்ரீநவாம்பிகை

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

உலகில் வேறெங்குமே காண முடியாத வகையில் நவகிரகங்கள் கருவறையில் ஈசனை வழிபட்ட வகையில் அமைந்திருப்பதன் காரணம் என்ன என்று பெரியோர்களிடம் கேட்டோம். 'நவகிரகங்களுக்குள் தானே பெரியவன் என்ற போட்டியும் பொறாமையும் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததாம். இதனால் மண்ணுலகில் இயற்கை மாறி பஞ்சமும் பசியும் உருவானது. வேள்விகள் அறங்கள் குறைபட்டு நிற்க, தர்மம் வீழ்ந்து அதர்மம் மேலோங்கியது. இந்திரன், பிரம்மன் உள்ளிட்டோர் சமரசம் பேசியும் நவகோள்களும் ஆணவம்விட மறுத்துத் தங்களுக்குள் மோதலை வளர்த்து வந்தன.

இதனால் சகலரும் சர்வேஸ்வரனிடம் முறையிட, சித்தர் காடு என்று வழங்கப்பட்ட புதுச்சேரி கண்டமங்கலம் பகுதியில் அடர்ந்த வேணுவனத்தில் ஈசன் சுயம்புவாகத் தோன்றினார். நவகோள்கள் அனைத்தையும் அங்கு வரச் செய்து கண்டித்தார். 'பிரம்மன், விஷ்ணு, இந்திராதிதேவர்கள் அனைவரும் பொறுப்புணர்ந்து தமது கட்டளைக்கு இணங்கி இயங்கும்போது, சாதாரண கோள்கள் இப்படிப் பொறாமை கொண்டு அலைவதா!' என்று ஈசன் அவற்றுக்கு உணர்த்தினார். தவற்றை உணர்ந்த நவகோள்களும் 'இனி இணைந்து செயல்பட்டு பிரபஞ்சத்தின் நலம் காப்போம்' என உறுதி அளித்தன.

'தங்களை ஒருங்கிணைத்துப் பாடம் நடத்திய இந்தத்0 தலத்தில் ஈசனை சந்தித்த கோலத்திலேயே இங்கேயே தாங்களும் எங்களுடன் வீற்றிருக்க வேண்டும். இங்கு வந்து தங்களை வழிபடும் அன்பர்களுக்கு கோள்களாகிய நாங்கள் ஒன்பது பேரும் எல்லாவித நன்மைகளையும் அருளுவோம் என்றும் உறுதி கூறின. அவ்வாறே இங்கே ஆலயம் எழும்பி, இன்றுவரை நவகோள்களும் இங்குள்ள ஈசனை வழிபடுவோருக்கு எல்லாவித நன்மைகளையும் வழங்கி வருகின்றன' என்கிறார்கள்.

இங்குள்ள அம்பிகை மகாவரப்ரஸாதி என்கிறார்கள். இவளை வணங்கிட மங்கல வாழ்வும் குடும்ப உறவும் மேம்படும் என்கிறார்கள்.

நிறைந்த வைகாசி பௌர்ணமி நாளில்தான் இங்கே நவகிரகங்கள் கூடி ஐயனை வழிபட்டு, பிணக்குகள் நீங்கிப் பெருமை கொண்டன என்கிறது தலவரலாறு. இதேநாளில் இங்கே 3-6-2023 சனிக்கிழமை மாலை 5 மணி முதல் 7 மணி வரை இங்கே நவகிரக இடரரு வேள்வி எனும் நவகிரக மகாஹோமம் நடைபெற உள்ளது. இதில கலந்து கொண்டு உங்களின் எல்லா வேண்டுதல்களும் நிறைவேற்றிக் கொள்ளுமாறு வேண்டுகிறோம். குறிப்பாக நோய்நொடிகள் நீங்கி பூரண ஆயுள் பெற, காரியத் தடைகள் நீங்க, கல்வி-கலைகளில் தேர்ச்சி பெற, பதவி உயர்வு, சம்பள உயர்வு, நல்ல வேலை வாய்ப்பு - வெளிநாட்டு யோகங்கள் பெற இந்த ஹோமத்தில் கலந்து கொள்ளுங்கள்.

மகாஹோமம்
மகாஹோமம்

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோம பஸ்பம் மற்றும் ரட்சை அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி வழிபாடுகள் வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.