திருத்தலங்கள்
திருக்கதைகள்
Published:Updated:

ஆதவன் அருளட்டும்!

பொங்கல் திருநாள்
பிரீமியம் ஸ்டோரி
News
பொங்கல் திருநாள்

பொங்கல் வழிபாடு

தை முதல்நாளே உத்தராயன புண்ணிய காலத்தின் தொடக்கமாகும். இதை மகர சங்கராந்தி என்று போற்றுகிறார்கள். இந்த நாளில் சூரியனை பொங்கலிட்டு வழிபாடு செய்வது மிகவும் சிறப்புடையதாகும்.

தைப்பொங்கல்
தைப்பொங்கல்

சூரிய பகவானுக்குப் பற்கள் கிடையாது என்பதால் சர்க்கரைப் பொங்கலே உகந்த நிவேதனமாகக் கருதப்படுகிறது. தட்சன் நடத்திய யாகத்தில் தேவர்கள் சென்று கலந்துகொண்டனர். அங்கு பார்வதி தேவிக்கு அவமரியாதை உண்டாக அவள் அக்னியில் வீழ்ந்தாள். இதனால் கோபம் உற்ற சிவபெருமான் தன் சடையிலிருந்து ஒரு முடியைக் கிள்ளித் தரையில் அடித்தார். அதிலிருந்து தோன்றிய வீரபத்திரர், தட்சனின் யாகத்தை அழித்து அங்கிருந்த தேவர்களைக் கடுமையாகத் தாக்கினார். அந்தத் தாக்குதலில் தான் சூரியனுக்குப் பற்கள் அனைத்தும் விழுந்துவிட்டன என்று சொல்வதுண்டு.

பொங்கல் பண்டிகை அன்று சூரிய ஒளிபடும் இடத்தைச் சுத்தமாகப் பெருக்கி, பச்சரிசி மாவினால் தேர்போல கிழக்கு நுனியாகக் கோலம் இட்டு, வடக்குப்புறத்தில் அரிசி மாவினாலே சூரியனைப் போல் வரைந்து, அதன் அருகில் குங்குமத்தால் பாதி சந்திரனையும் வரையவேண்டும்.

பிறகு தலைவாழை இலைவிரித்து, அதில் காய்கறிகள், புதுமஞ்சள், கரும்பு, அரிசி பரப்பிவைத்துக் கொள்ளவேண்டும். மஞ்சள் பிள்ளையாரும் பிடித்துவைக்க வேண்டும்.

மேலும் திருவிளக்கேற்றி வைத்துப் பூச்சூடி, பிள்ளையார் வணக்கத்துடன் பொங்கலிட வேண்டும். புதுப் பானையில் நல்ல தண்ணீர் ஊற்றி சந்தனம், குங்குமம் இட்டு, மஞ்சள் குலை சேர்த்துக் கட்டி, அடுப்பில் வைத்து நெருப்பேற்ற வேண்டும். பிறகு புது அரிசிபோட்டு பொங்கி வரும் வேளையில், பாலூற்றி பொங்கலிட்டு படைத்து இறை வழிபாடு செய்து வணங்க வேண்டும்.

பொங்கல் வைக்க உகந்த நேரம் :

ந்த ஆண்டு பொங்கல் ஜனவரி 14-ம் தேதி வருகிறது. மாதப்பிறப்பு பிற்பகல் வேலையிலேயே வந்தாலும் பொங்கல் வைக்க உகந்த நேரம் என்பது அபிஜித் முகூர்த்தம் எனப்படும் உச்சி வேளையே ஆகும். ஜனவரி 14-ம் தேதி வெள்ளிக்கிழமையாக இருப்பதால் ராகு காலம் முடிந்ததும் 12 மணியிலிருந்து 1.30க்குள் பொங்கல் வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.