Published:Updated:

பொன்னியின் செல்வன் பயணம்-5: பொன்னியின் செல்வன் நாவலின் முக்கிய கதாபாத்திரம் நந்தினி; ஏன் தெரியுமா?

பொன்னியின் செல்வன்

4 முறை பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பயணத்தை விகடன் பயணித்து இப்போது 5-ம் முறையாக வரும் அக்டோபர் 8,9,10 ஆகிய நாள்களில் நடைபெற உள்ளது

பொன்னியின் செல்வன் பயணம்-5: பொன்னியின் செல்வன் நாவலின் முக்கிய கதாபாத்திரம் நந்தினி; ஏன் தெரியுமா?

4 முறை பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பயணத்தை விகடன் பயணித்து இப்போது 5-ம் முறையாக வரும் அக்டோபர் 8,9,10 ஆகிய நாள்களில் நடைபெற உள்ளது

Published:Updated:
பொன்னியின் செல்வன்

4 முறை பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பயணத்தை விகடன் பயணித்து இப்போது 5-ம் முறையாக வரும் அக்டோபர் 8,9,10 ஆகிய நாள்களில் நடைபெற உள்ளது.

பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன்

"விகடன் நடத்திய 'வந்தியத்தேவன் வழியில் ஒரு வரலாற்றுப் பயணம்' என்ற யாத்திரையில் கலந்து கொண்ட வாசகி நான். இந்த பயணத்தில் உண்டான அனுபவங்களையும் தகவல்களையும் கொண்டு 'பொன்னியின் செல்வனின் பெண்மணிகள்!' என்ற ஒரு நாவலையே எழுதி உள்ளேன். அந்த நாவலில் உள்ள கட்டுரைகளில் ஒரு கட்டுரையை உங்களிடம் பகிர்ந்துள்ளேன். 30 ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய காசநோய் ஆராய்ச்சி மையத்தில் சமூக விஞ்ஞானியாக பணிபுரிந்த நான், விகடனின் நீண்ட நாள் வாசகி.உலக அளவில் பல கருத்தரங்கில் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்த நான், 25 சமூக நாவல்களையும் எழுதி உள்ளேன். சரித்திர ஆர்வலர்களுக்கு நிச்சயம் இந்த பயணம் விசேஷமான அனுபவங்களைத் தரும் என்பது உறுதி! "

-மோகனா சுகதேவ், சென்னை

மோகனா சுகதேவ்
மோகனா சுகதேவ்

பொன்னியின் செல்வனின் பெண்மணிகள்!

காலம் கடந்து நிற்கும் பொன்னியின் செல்வன் புதினத்தைப் படிக்கப் படிக்க ஆர்வம் மேலோங்கும். 20 முதல் 80 வயது என எல்லா தரப்பினரும் விரும்பிப் படிக்கும் சரித்திர நாவல் என்றால் அது பொன்னியின் செல்வன் மட்டுமே. சரித்திர நாவல் படிப்பவர்களுக்கு இடையே இந்த புத்தகமே அரிச்சுவடி என்றும் சொல்லலாம். அதைவிட மேலாக இந்தப் புத்தகத்தை ஆழ்ந்து படிக்கும்போது அந்த கதாபாத்திரங்கள் போன்றே நாம் மாறிவிடுவோம் என்பதே இந்த புத்தகத்தின் வெற்றி எனலாம்.

இந்த கதையைப் படித்துவிட்டால் சோழர்களின் சூழல், அந்த பாத்திரங்களின் தாக்கம் இவற்றில் இருந்து வெளிவர சில மாதங்கள் ஆகும் என்பதே உண்மை. வீரம், காதல், நேர்த்தியான வாழ்வு, துரோகம், மன்னிப்பு, தியாகம், மர்மம், நகைச்சுவை என அனைத்தும் கலந்த இந்த சரித்திர காவியத்தில் பெரும் தாக்கத்தை உண்டாக்கிய பெண் கதாபாத்திரங்கள் அனைவரும் அனைவரின் நெஞ்சிலும் இன்றும் வாழ்பவர்கள்.

பாஞ்சாலி சபதத்தால் ஒரு பாரதம்; கைகேயி சபதத்தால் ஒரு ராமாயணம்; சிலப்பதிகாரமும், மணிமேகலையும் கூட பெண்மையின் பெருமையைப் பாடும் தமிழ்க் காப்பியங்கள். அதைப்போல் பெண்கள் நினைத்தால் நல்லதும் நடக்கும்; நாசமும் விளையும் என்பதை குந்தவை, நந்தினி என்ற இரு கதாபாத்திரங்கள் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.

பொன்னியின் செல்வன் கதையை இரண்டே வரிகளில் சொல்லி விடலாம். இரண்டாம் பராந்தக சுந்தர சோழ சக்கரவர்த்திக்குப் பின் யார் அரசுக் கட்டிலில் ஏறுவது என்ற அதிகாரப்போட்டியே இந்த சரித்திர நாவலின் கரு. இந்தப் போட்டியில் ஆதித்த கரிகாலன், அருள்மொழிவர்மன் தவிர அவர்களின் சிறிய தந்தை மதுராந்தகனும் உள்ளான். அதையொட்டிய நிகழ்வுகளை இந்நூல் மிக மிகச் சுவைப்பட பிற்காலச் சோழர்களின் சரித்திரத்துடன் விவரித்துள்ளது.

பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன்

இந்த நாவலில் வரும் ஆண் கதாபாத்திரங்களுக்கு சமமாகவே பெண் கதாபாத்திரங்களும் படைக்கப்பட்டுள்ளனர். செம்பியன் மாதேவி, குந்தவை, நந்தினி, பூங்குழலி, வானதி, மந்தாகினி முதலிய மாதரசிகள் சுதந்திரமாக தாங்கள் நினைத்ததை செயல்படுத்தும் ஆற்றல் கொண்டவர்களாய் இருந்தார்கள். கம்பீரத்துக்கும், புத்திசாலித்தனத்துக்கும் குந்தவை, அழகுக்கும் ராஜதந்திரங்களுக்கும் நந்தினி, அடக்கத்துக்கு வானதி, துணிச்சலுக்கு பூங்குழலி, தியாகத்துக்கு மந்தாகினி, இறைபக்திக்கு செம்பியன்மாதேவி, பதிபக்திக்கு வானமாதேவி, காதலுக்கு மணிமேகலை என்று பொன்னியின் செல்வனில் வரும் பெண்மணிகள் ஒவ்வொருவரும் கதையின் சுவாரஸ்யத்தை கூட்டியிருப்பார்கள். அவர்களின் மனதிலும் ஊடுருவி அவர்களின் எண்ண ஓட்டத்தையும், மற்ற கதாபாத்திரங்கள் அவர்களைக் குறித்து என்ன நினைக்கிறார்கள் என்பதையும் சுவைப்பட சொல்லியிருக்கும் இந்த புதினம். இதில் முதலில் நந்தினியை மட்டும் காண்போம்...

நந்தினி:

பொன்னியின் செல்வனில் அனேகமாக எல்லோருக்கும் பிடித்த கதாபாத்திரம் குந்தவைப் பிராட்டியாராகத்தான் இருக்கும். ஆனால் இந்த கதை நகர்வுக்கு மிக முக்கியமான கதாபாத்திரம் பழுவூர் ராணி நந்தினிதான். கதையின் முக்கியமான திருப்பங்கள் நந்தினியால்தான் நிகழ்கின்றன. கடம்பூர் அரண்மனையில் நடக்கும் சதியாலோசனை கூட்டத்திலிருந்து கதையின் உச்சக்கட்டமான ஆதித்த கரிகாலனின் சாவு வரை நந்தினியே எல்லாவற்றையும் தீர்மானிக்கிறாள். பின்னால் நின்று ஆட்டுவிக்கும் ஒரு சூத்ரதாரியாக விளங்குகிறாள்.

சிவ பக்தனாக இருந்த மதுராந்தகனுக்கு ராஜ்ஜியம் ஆளும் ஆசையை உண்டு பண்ணியது நந்தினியே! அது மட்டுமில்லாமல் சிற்றரசர்களின் சதியாலோசனை கூட்டத்தை நடத்துவதும் அவளே! பாண்டிய ஆபத்துதவி ரவிதாசனுக்கு சோழ நாட்டுப் பொக்கிஷத்திலிருந்து வேண்டிய பொன்னையும், பொருளையும் தந்து உதவுகிறாள். ரவிதாசனையும், தேவராளனையும் இலங்கைக்குப் போய் அருள்மொழிவர்மனைக் கொல்வதற்கு வேண்டிய இலங்கைக் காசுகளையும் தருகிறாள். சுந்தரச் சோழரை ஊமைராணி போல் நடித்து சித்திரவதை செய்கிறாள்.

சக்கரவர்த்தியும், முதன்மந்திரி அநிருத்தரும் இருக்க, நந்தினி சோழ நாட்டை இரண்டாகப் பிரித்து ஆதித்த கரிகாலனுக்கும், மதுராந்தகனுக்கும் பிரித்து கொடுத்து சமரசம் செய்ய ஏற்பாடு செய்கிறாள். அதற்கு கந்தமாறனும், பார்த்திபேந்திரனும் உடந்தை. ஆபத்துதவிகள் சதியில் சுந்தர சோழரும், அருள்மொழிவர்மனும் தப்பித்துக் கொள்ள, ஆதித்த கரிகாலரை கடம்பூர் மாளிகைக்கு வரவழைத்து அவர் கொலையாவதற்கும் முழுமுதற் காரணமாய் இருக்கிறாள். பழுவேட்டரையர்கள் இருவரின் சாவுக்கும் கூட நந்தினியே மறைமுகக் காரணம். நந்தினி ஒரு அபலையைப் போல அறிமுகமாகி மோகினியாக, சூழ்ச்சிக்காரியாக, ராஜதந்திரியாக, கணவனை நேசிக்கும் பத்தினியாக, சூழ்நிலை கைதியாக... எத்தனை எத்தனைப் பரிமாணங்களை இந்த கதாபாத்திரம் ஏற்கிறது? இத்தனைக்கும் நந்தினி கதாபாத்திரம் கற்பனையானது என்று கல்கி சொன்னாலும் அதை நம்ப நாம் யாருமே தயார் இல்லை என்பதே நந்தினியின் படைப்பு எத்தனை அற்புதமானது என்று உணர்ந்து கொள்ள முடியும்.

முன்பதிவு விவரங்களுக்கு 97909 90404

முன்பதிவுக்கு கிளிக் செய்யவும்.

பொன்னியின் செல்வன் - 4
பொன்னியின் செல்வன் - 4

வீராணம் ஏரி தொடங்கி, காட்டுமன்னார்கோவில் பெருமாள் கோயில், அனந்தேஸ்வரர் கோயில், மேலக் கடம்பூர், கீழக்கடம்பூர் கோயில்கள், பழையாறை கைலாசநாதர் கோயில், ராஜராஜனின் பள்ளிப்படை, நந்திபுர விண்ணகரம், சோமநாதேஸ்வரர் கோயில், பஞ்சவன்மாதேவி பள்ளிப்படை, திருப்புறம்பியம் பள்ளிப்படைகள், தஞ்சை பெரிய கோயில், கோடியக்கரை கடற்கரை, குழகர் கோயில் என பொன்னியின் செல்வனில் வரும் இடங்கள் தமிழர்கள் வாழ்வில் மறக்க முடியாத சரித்திர சாட்சிகளாக விளங்கி வருகின்றன. இந்த இடங்களை ஒரு புனிதப் பயணம் போல சென்றுவர இன்றும் பலரும் விருப்பம் கொண்டுள்ளார்கள். இவர்களின் விருப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்யவும், உண்மையான வரலாற்றை உரிய ஆய்வாளர்கள் கொண்டு சொல்லவும் உங்கள் விகடன் குழுமம் விரும்பியது. அதன் விளைவாக 4 ஆண்டுகளுக்கு முன்பு வந்தியத்தேவன் வழியில் வரலாற்றுப் பயணம் என்ற சிறப்புமிக்க வரலாற்றுப் பயணத்தைக் தொடங்கியது. 4 முறைகள் வெற்றிகரமாக நூற்றுக்கும் மேற்பட்ட வாசகர்களோடு பயணித்து சிறப்பும் கொண்டது. இப்போது 5-ம் முறையாக வரும் அக்டோபர் 8,9,10 ஆகிய நாள்களில் நடைபெற உள்ளது.

3 பகல், 2 இரவுகள் என நடக்கவிருக்கும் இந்தப் பயணத்தில் சோழர்கள் உலாவிய இடங்களில் தகுந்த வரலாற்று ஆய்வாளர்களோடு பயணித்து சோழர்களின் பெருமைகளை அறிந்துகொள்ள இருக்கிறோம். அதோடு அற்புதமான கலை நிகழ்ச்சிகள், பாரம்பர்யமிக்க கலை அழகு கொண்ட தங்கும் விடுதிகள், அறுசுவை உணவு வசதி, சிறப்புப் பரிசுகள் என அனைத்து அம்சங்களோடும் திகழும் சரித்திர யாத்திரை இது.

ஏற்கெனவே 4 முறை வெற்றிகரமாக நடத்தப்பட்ட இந்த யாத்திரை தற்போது மீண்டும் அக்டோபர் 8,9,10 ஆகிய நாள்களில் நடைபெற உள்ளது.

பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன்

நிகழ்ச்சி விவரங்கள்:

அக்டோபர் 8 (சனிக்கிழமை) - அதிகாலை 5.30 மணிக்கு சென்னை விகடன் அலுவலகத்தில் இருந்து சொகுசுப் பேருந்துப் பயணம். மதியம் 3 மணிக்கு மேல் வீராணம் ஏரி, காட்டுமன்னார்கோவிலில் உள்ள கல்வெட்டுகள், பெருமைகள், மேலைக் கடம்பூர், கீழைக்கடம்பூர் கோயில்கள்...

இரவு தங்கல் - லக்ஷ்மி விலாஸ் காட்டேஜ் (காட்டுமன்னார்கோவில் அருகே) + சிறப்பு கலை நிகழ்ச்சிகள்.

அக்டோபர் 9 (ஞாயிறு) - பழையாறை கோயில்கள், கல்வெட்டுகள், திருப்புறம்பியம், கலை நிகழ்வுகள்.

இரவு தங்கல் - இண்டிகோ ஹெரிடேஜ் காட்டேஜ் (சுவாமி மலை அருகில்) + சிறப்பு கலை நிகழ்ச்சிகள்.

அக்டோபர் 10 (திங்கள்) - தஞ்சைக் கோயில், கல்வெட்டுகள், கோடியக்கரை கடற்கரை, குழகர் கோயில் + கலை நிகழ்வுகள்.

இரவு சென்னை திரும்பல்...

அக்டோபர் 11 - அதிகாலை 6 மணிக்கு சென்னை அடைதல்.

குறிப்பு: நேரம் பொறுத்து பார்க்கும் இடங்களும் சற்றே மாறலாம்.

எவ்வளவு கட்டணம்?

நபர் ஒருவருக்கு சிறப்பு சலுகைக் கட்டணம் ரூபாய் 18,000 (ஜி.எஸ்.டி. உள்பட).

வீராணம் ஏரியும், காட்டுமன்னார்கோவில் கல்வெட்டுகளும், கடம்பூர் ரகசியங்களும், பழையாறைப் பெருமைகளும், தஞ்சை பெரியகோயில் பிரமாண்டமும், கோடியக்கரை கடற்கரையும், குழகர் கோயில் அற்புதங்களும் ஆயிரம் ஆயிரம் கதைகளைச் சொல்ல உங்களுக்காகக் காத்திருக்கின்றன. வாருங்கள், விகடன் நடத்தும் வந்தியத்தேவனின் வழியில் வரலாற்றுப் பயணம் நிகழ்வில் கலந்துகொள்ளுங்கள்!

முன்பதிவு விவரங்களுக்கு 97909 90404

முன்பதிவுக்கு கிளிக் செய்யவும்.