Published:Updated:

பொன்னியின் செல்வன் 5: சோழர்களின் பிரமாண்டம் சொல்லும் சிறப்பு யாத்திரை! நீங்களும் கலந்து கொள்ளுங்கள்!

பொன்னியின் செல்வன்

3 ஆண்டுகளுக்கு முன்பு வந்தியத்தேவன் வழியில் வரலாற்றுப் பயணம் என்ற வரலாற்றுப் பயணத்தை தொடங்கியது. 4 முறை வெற்றிகரமாக பயணித்து இப்போது 5-ம் முறையாக வரும் அக்டோபர் 8,9,10 ஆகிய நாள்களில் நடைபெற உள்ளது

பொன்னியின் செல்வன் 5: சோழர்களின் பிரமாண்டம் சொல்லும் சிறப்பு யாத்திரை! நீங்களும் கலந்து கொள்ளுங்கள்!

3 ஆண்டுகளுக்கு முன்பு வந்தியத்தேவன் வழியில் வரலாற்றுப் பயணம் என்ற வரலாற்றுப் பயணத்தை தொடங்கியது. 4 முறை வெற்றிகரமாக பயணித்து இப்போது 5-ம் முறையாக வரும் அக்டோபர் 8,9,10 ஆகிய நாள்களில் நடைபெற உள்ளது

Published:Updated:
பொன்னியின் செல்வன்

'3 ஆண்டுகளுக்கு முன்பு வந்தியத்தேவன் வழியில் வரலாற்றுப் பயணம் என்ற சிறப்புமிக்க வரலாற்றுப் பயணத்தைக் தொடங்கியது விகடன். 4 முறைகள் வெற்றிகரமாக நூற்றுக்கும் மேற்பட்ட வாசகர்களோடு பயணித்து சிறப்பும் கொண்டது. இப்போது 5-ம் முறையாக வரும் அக்டோபர் 8,9,10 ஆகிய நாள்களில் நடைபெற உள்ளது.'

பொன்னியின் செல்வன் யாத்திரை
பொன்னியின் செல்வன் யாத்திரை

'பொன்னியின் செல்வன்' வெறும் வரலாற்றுப் புதினம் மட்டும் கிடையாது. சுமார் எழுபது ஆண்டுகளாக தமிழர்களின் உணர்வோடு கலந்த சோழர்களின் நடமாடும் காவிய வடிவம். இந்த கதையில் வரும் மாந்தர்கள் யாவரும் ஜீவனுள்ள படைப்பாகவே இன்றும் போற்றப்படுகிறார்கள். இவர்களில் யார் உண்மையாக வாழ்ந்தார்கள், யார் யார் புனைவுப் பாத்திரங்கள் என்று கண்டறியாத வண்ணம் சிறப்பாக இயற்றப்பட்ட காவியம் பொன்னியின் செல்வன். இந்த கதையைப் பற்றிப் பேசினாலே பலரும் நெகிழ்ந்து போவதை இன்றைய நவீன தலைமுறையும் கண்டு அதிசயித்து வருகிறது.

ஆதித்த கரிகாலனுடைய நண்பனான வாணர் குல வீரன் வல்லவரையன் வந்தியத்தேவன் ஆதித்தனின் வேண்டுகோளுக்காக அரசர் சுந்தரச் சோழனுக்கு ஒரு ஓலையும், பழையாறையில் உள்ள இளவரசி குந்தவைக்கு ஒரு ஓலையும் எடுத்துச் செல்கிறான்.

கடம்பூர் மாளிகை
கடம்பூர் மாளிகை

செல்லும் வழியில் வீராணம் ஏரி தாண்டி, காட்டுமன்னார்கோவிலை அடுத்த கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் தங்குகிறான். வந்தியத்தேவரும் கந்தமாறனும் நெருங்கிய நண்பர்கள். இரவில் கடம்பூர் மாளிகையில் பெரிய பழுவேட்டரையர் மதுராந்தகனை அடுத்த அரசன் என பட்டம் ஏற்கச் செய்வதற்கான ரகசிய கூட்டத்தை நடத்துகிறார். இந்த ரகசிய கூட்டத்தை வந்தியத்தேவன் மறைந்திருந்து கேட்டான், என விரிகிறது இந்த புதினம்.

சரித்திரப் புகழ்மிக்க சோழர்களின் பெருமைகளை சுவாரசியமாக இந்த புதினம் விவரிக்கும் அழகே அலாதியானது. ராஜராஜனின் வீரத்தையும் தியாகத்தையும் வந்தியத்தேவனின் வழியே விவரிக்கும் பாங்கே தமிழுக்கு அப்போது புதுமையானது என்று வரலாற்று அறிஞர்கள் இன்றும் விவரிக்கிறார்கள். பொன்னியின் செல்வன் புதினத்தில் கதை மாந்தர்களுக்கு எத்தனை புகழ் உள்ளதோ, அதே அளவுக்கு கதை நடைபெற்ற களங்களைக் காண்பதிலும் இன்றுவரை தமிழ் மக்களுக்கு ஒரு ஈர்ப்பும் ஆவலும் இருந்தபடியே உள்ளது.

விகடன் கலை நிகழ்ச்சிகள்
விகடன் கலை நிகழ்ச்சிகள்

வீராணம் ஏரி, காட்டுமன்னார்கோவில், கடம்பூர் கோயில்கள், பழையாறையின் அற்புதமான வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள், பஞ்சவன்மாதேஸ்வரம் பள்ளிப்படை, தஞ்சை பெரிய கோயில், கோடியக்கரை கடற்கரை, குழகர் கோயில் என இந்த புதினத்தில் வரும் இடங்கள் யாவையும் ஒரு புனிதப் பயணம் போல இன்றும் போய்வர விருப்பம் கொண்டுள்ளார்கள் வரலாற்று ஆர்வலர்கள். இவர்களின் விருப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்யவும், உண்மையான வரலாற்று உரிய ஆய்வாளர்கள் கொண்டு சொல்லவும் உங்கள் விகடன் குழுமம் விரும்பியது. அதன் விளைவாக 3 ஆண்டுகளுக்கு முன்பு வந்தியத்தேவன் வழியில் வரலாற்றுப் பயணம் என்ற சிறப்புமிக்க வரலாற்றுப் பயணத்தைக் தொடங்கியது. 4 முறைகள் வெற்றிகரமாக நூற்றுக்கும் மேற்பட்ட வாசகர்களோடு பயணித்து சிறப்பும் கொண்டது. இப்போது 5-ம் முறையாக வரும் அக்டோபர் 8,9,10 ஆகிய நாள்களில் நடைபெற உள்ளது.

குழகர் கோயில்
குழகர் கோயில்

3 பகல், 2 இரவுகள் என நடக்கவிருக்கும் இந்தப் பயணத்தில் சோழர்கள் உலாவிய இடங்களில் தகுந்த வரலாற்று ஆய்வாளர்களோடு பயணித்து சோழர்களின் பெருமைகளை அறிந்துகொள்ள இருக்கிறோம். அதோடு அற்புதமான கலை நிகழ்ச்சிகள், பாரம்பர்யமிக்க கலை அழகு கொண்ட தங்கும் விடுதிகள், அறுசுவை உணவு வசதி, சிறப்புப் பரிசுகள் என அனைத்து அம்சங்களோடும் திகழும் சரித்திர யாத்திரை இது.

ஏற்கெனவே 4 முறை வெற்றிகரமாக நடத்தப்பட்ட இந்த யாத்திரை தற்போது மீண்டும் அக்டோபர் 8,9,10 ஆகிய நாள்களில் நடைபெற உள்ளது.

முன்பதிவு விவரங்களுக்கு 97909 90404

முன்பதிவுக்கு கிளிக் செய்யவும்.

திருப்புறம்பியம்
திருப்புறம்பியம்

அக்டோபர் 8 (சனிக்கிழமை) - அதிகாலை 5.30 மணிக்கு சென்னை விகடன் அலுவலகத்தில் இருந்து சொகுசுப் பேருந்துப் பயணம். மதியம் 3 மணிக்கு மேல் வீராணம் ஏரி, காட்டுமன்னார்கோவிலில் உள்ள கல்வெட்டுகள், பெருமைகள், மேலைக் கடம்பூர், கீழைக்கடம்பூர் கோயில்கள்...

இரவு தங்கல் - லக்ஷ்மி விலாஸ் காட்டேஜ் (காட்டுமன்னார்கோவில் அருகே) + சிறப்பு கலை நிகழ்ச்சிகள்.

அக்டோபர் 9 (ஞாயிறு) - பழையாறை கோயில்கள், கல்வெட்டுகள், திருப்புறம்பியம், கலை நிகழ்வுகள்.

இரவு தங்கல் - இண்டிகோ ஹெரிடேஜ் காட்டேஜ் (சுவாமி மலை அருகில்) + சிறப்பு கலை நிகழ்ச்சிகள்.

அக்டோபர் 10 (திங்கள்) - தஞ்சைக் கோயில், கல்வெட்டுகள், கோடியக்கரை கடற்கரை, குழகர் கோயில் + கலை நிகழ்வுகள்.

இரவு சென்னை திரும்பல்...

அக்டோபர் 11 - அதிகாலை 6 மணிக்கு சென்னை அடைதல்.

குறிப்பு: நேரம் பொறுத்து பார்க்கும் இடங்களும் சற்றே மாறலாம்.

பழையாறை
பழையாறை

எவ்வளவு கட்டணம்?

நபர் ஒருவருக்கு சிறப்பு சலுகைக் கட்டணம் ரூபாய் 18,000 (ஜி.எஸ்.டி. உள்பட).

வீராணம் ஏரியும், காட்டுமன்னார்கோவில் கல்வெட்டுகளும், கடம்பூர் ரகசியங்களும், பழையாறைப் பெருமைகளும், தஞ்சை பெரியகோயில் பிரமாண்டமும், கோடியக்கரை கடற்கரையும், குழகர் கோயில் அற்புதங்களும் ஆயிரம் ஆயிரம் கதைகளைச் சொல்ல உங்களுக்காகக் காத்திருக்கின்றன. வாருங்கள், விகடன் நடத்தும் வந்தியத்தேவனின் வழியில் வரலாற்றுப் பயணம் நிகழ்வில் கலந்துகொள்ளுங்கள்!

முன்பதிவு விவரங்களுக்கு 97909 90404

முன்பதிவுக்கு கிளிக் செய்யவும்.