Published:Updated:

வந்தியத்தேவன் வழியில் ஒரு பிரமாண்டப் பயணம்: சோழர்களின் வரலாற்றை அறிந்துகொள்ள ஓர் அரிய வாய்ப்பு!

பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பயணம்

பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பயணத்தில் கலந்துகொள்ள ஓர் அரிய வாய்ப்பு

வந்தியத்தேவன் வழியில் ஒரு பிரமாண்டப் பயணம்: சோழர்களின் வரலாற்றை அறிந்துகொள்ள ஓர் அரிய வாய்ப்பு!

பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பயணத்தில் கலந்துகொள்ள ஓர் அரிய வாய்ப்பு

Published:Updated:
பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பயணம்

பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பயணம்: ஏற்கெனவே 4 முறை வெற்றிகரமாக நடத்தப்பட்ட இந்த யாத்திரை தற்போது மீண்டும் அக்டோபர் 8,9,10 ஆகிய நாள்களில் நடைபெற உள்ளது.

பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பயணம்
பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பயணம்

பொன்னியின் செல்வன் நான்காம் பயணத்தில் பயணித்த வாசகர் கருத்து: நீண்ட கால விருப்பம் ஒன்று நனவானது. கற்பனையில் மட்டுமே பார்த்த வந்தியத்தேவன் வழியை நேரில் பார்க்கும் ஒரு வாய்ப்பு. இந்த பயணத்தில் இணைவதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள், ஒன்று விகடன் மீதுள்ள நம்பிக்கை, மற்றொன்று பொன்னியின் செல்வன் மீதுள்ள காதல். அரசியல் தலைவர்கள், மிக பிரபலமானவர்கள் மட்டுமே அணுக முடிந்த விகடன் அலுவலகத்தை நாங்களும் பார்த்த அந்த அதிகாலையை மறக்க மாட்டோம்.

நம் கோயில்கள் என்பது பல்வேறு வரலாறுகளைப் பத்திரமாக தன்னுள் வைத்திருக்கும் கருவூலம் என்பதும், தொலைநோக்கு பார்வையுடன் நம் மன்னர்கள் கட்டிய நூலகங்கள் என்பதும் இந்த பயணத்திலேயே புரிந்தது. முன்பு கோயில் என்பது கடவுள் இருக்கும் இடம் என்பதாக மட்டுமே இருந்தது மாறி, இப்போது விலைமதிப்பில்லாத அறிவுக்களஞ்சியம் என்று உணர்ந்ததால் கோயிலின் மீதான மதிப்பு பன்மடங்கு பெருகிற்று.

ஒரு வாசகனாக என்னை ஒரு நண்பனாக, ஒரு மாணவனாக, மதிப்பிற்குரிய பயணியாக வழி நடத்திய விகடனுக்கு நன்றிகள் பல. மூன்று நாள்களில் நாங்கள் சந்தித்த அனுபவங்களும் படிப்பினைகளும் வாழ்நாள் முழுவதும் மறக்க இயலாதவை.

- மதன் குமார் வெ

வாசகர் கருத்து
வாசகர் கருத்து

சோழர்களின் சிறப்பை எடுத்துக் கூறிய பிரமாண்ட புதினம் பொன்னியின் செல்வன். வந்தியத்தேவனின் வழியில் பிற்காலச் சோழர்களின் வளர்ச்சிகளையும் பெருமைகளையும் அழகாக எடுத்துரைத்த காவியம் பொன்னியின் செல்வன். வந்தியத்தேவன், அருண்மொழிவர்மன், ஆழ்வார்க்கடியான், ஆதித்த கரிகாலன், பூங்கோதை, மணிமேகலை, நந்தினி, பழுவேட்டரையர்கள் என இந்த புதினத்தில் உலா வரும் உண்மையான மற்றும் புனைவானக் கதாபாத்திரங்கள் யாவுமே நம்முள் இன்றும் பிரமிப்பையும் நெருக்கத்தையும் கொண்டவை என்பதில் சந்தேகமே இல்லை எனலாம்.

நெடுங்காலம் ஆட்சி புரிந்த பிற்காலச் சோழர்களை வரலாறு ஏன் இன்றும் கொண்டாடி வருகிறது! அரசர்களிலேயே ராஜராஜசோழர் ஏன் சிறப்பானவர் என்பதை எல்லாம் விளக்கும் படைப்பாக இந்த புதினம் விளக்கிக் கூறியுள்ளது. வந்தியத்தேவன் வழியில் இந்த புதினம் பயணிக்கும் வீராணம் ஏரி தொடங்கி காட்டுமன்னார்கோவில் வீரநாராயண பெருமாள் கோயில், அனந்தீஸ்வரர் கோயில், கடம்பூர் மாளிகை, திருப்புறம்பியம், பழையாறை வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், பஞ்சவன்மாதேஸ்வரம், தஞ்சை, கோடியக்கரை என்று எல்லா இடங்களிலும் இந்த உலா செல்லவுள்ளது. 1000 ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்ற வரலாற்று நிகழ்வுகள் யாவையும் அதன் சுவை குறையாமல், வாசகர்களுக்கு அளிக்கும் ஒரு முயற்சிதான் இந்த 'வந்தியத்தேவன் வழியில் வரலாற்றுப் பயணம்’ என்ற வரலாற்று யாத்திரை.

வந்தியத்தேவன் வழியில் ஒரு பிரமாண்டப் பயணம்: சோழர்களின் வரலாற்றை அறிந்துகொள்ள ஓர் அரிய வாய்ப்பு!

3 பகல், 2 இரவுகள் என நடக்கவிருக்கும் இந்தப் பயணத்தில் சோழர்கள் உலாவிய இடங்களில் தகுந்த வரலாற்று ஆய்வாளர்களோடு பயணித்து சோழர்களின் பெருமைகளை அறிந்துகொள்ள இருக்கிறோம். அதோடு அற்புதமான கலை நிகழ்ச்சிகள், பாரம்பர்யமிக்க கலை அழகு கொண்ட தங்கும் விடுதிகள், அறுசுவை உணவு வசதி, சிறப்புப் பரிசுகள் என அனைத்து அம்சங்களோடும் திகழும் சரித்திர யாத்திரை இது.

ஏற்கெனவே 4 முறை வெற்றிகரமாக நடத்தப்பட்ட இந்த யாத்திரை தற்போது மீண்டும் அக்டோபர் 8,9,10 ஆகிய நாள்களில் நடைபெற உள்ளது.

முன்பதிவு விவரங்களுக்கு 97909 90404

முன்பதிவுக்கு கிளிக் செய்யவும்.

கலை நிகழ்ச்சிகள்
கலை நிகழ்ச்சிகள்

அக்டோபர் 8 (சனிக்கிழமை) - அதிகாலை 5.30 மணிக்கு சென்னை விகடன் அலுவலகத்தில் இருந்து சொகுசுப் பேருந்துப் பயணம். மதியம் 3 மணிக்கு மேல் வீராணம் ஏரி, காட்டுமன்னார்கோவிலில் உள்ள கல்வெட்டுகள், பெருமைகள், மேலைக் கடம்பூர், கீழைக்கடம்பூர் கோயில்கள்...

இரவு தங்கல் - லக்ஷ்மி விலாஸ் காட்டேஜ் (காட்டுமன்னார்கோவில் அருகே) + சிறப்பு கலை நிகழ்ச்சிகள்.

அக்டோபர் 9 (ஞாயிறு) - பழையாறை கோயில்கள், கல்வெட்டுகள், திருப்புறம்பியம், கலை நிகழ்வுகள்.

இரவு தங்கல் - இண்டிகோ ஹெரிடேஜ் காட்டேஜ் (சுவாமி மலை அருகில்) + சிறப்பு கலை நிகழ்ச்சிகள்.

அக்டோபர் 10 (திங்கள்) - தஞ்சைக் கோயில், கல்வெட்டுகள், கோடியக்கரை கடற்கரை, குழகர் கோயில் + கலை நிகழ்வுகள்.

இரவு சென்னை திரும்பல்...

அக்டோபர் 10 - அதிகாலை 6 மணிக்கு சென்னை அடைதல்.

குறிப்பு: நேரம் பொறுத்து பார்க்கும் இடங்களும் சற்றே மாறலாம்.

தஞ்சைக் கோயில்
தஞ்சைக் கோயில்


எவ்வளவு கட்டணம்?
நபர் ஒருவருக்கு சிறப்பு சலுகைக் கட்டணம் ரூபாய் 18,000 (ஜி.எஸ்.டி. உள்பட).

நாம் காணவிருக்கும் சரித்திரப் புகழ்மிக்க இடங்களின் சிறுகுறிப்புகள்!

வீராணம் ஏரி: தொண்டை நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் இடையில் தில்லைக்கு மேற்கே இரண்டு காத தூரத்தில் உள்ளது வீரநாராயண ஏரி. இது தெற்கு வடக்கில் ஒன்றரைக் காத நீளமும், கிழக்கு மேற்கில் அரைக் காத அகலமும் கொண்டது. மதுரை கொண்ட பராந்தகரின் புதல்வர் இளவரசர் இராஜாதித்தர் உண்டாக்கிய மாபெரும் ஏரி இது! இதன் அழகையும் வரலாற்றையும் அதன் கரையில் இருந்து ரசிக்க சோழர்களின் பிரமாண்டம் உணரலாம்.

மேலைக் கடம்பூர்: சம்புவரையர்களின் மாளிகை அமைந்திருந்த இடம். கதையின் முக்கிய சம்பவங்கள் இடம்பெற்ற களம் இது. அப்பர் ஸ்வாமிகள் பாடிய அழகிய கரக்கோயில் இங்குள்ளது. தென்னகத்தில் உள்ள ஒரே கரக்கோயில் இது. சிற்பங்களுக்கும் கல்வெட்டுகளுக்கும் பெயர்போனது.

கீழைக்கடம்பூர்: சிற்பங்களுக்குப் பெயர் பெற்ற தலம் இது. இங்குள்ள மாப்பிள்ளை கோல சிவனாரும் ரகசிய சுரங்கங்களும் சிறப்பானவை.

பழையாறை: அரிசிலாற்றுக்குத் தென் கரையில் உள்ள சோழர்களின் அழகிய தலைநகரம். இடிந்து மண்மேடாகி, சிறுகிராமமாக உள்ளபோதும் சோழர்களின் பெருமையைச் சொன்னபடியே இந்த பகுதி உள்ளது. ராஜராஜ சோழர் வணங்கிய கைலாசநாதர் கோயில், அவரின் பள்ளிப்படை என்று நம்பப்படும் சோழர் மாளிகை, பாண்டிமாதேவி பிறந்த, அவரின் திருவுருவச் சிலை உள்ள சோமநாதேஸ்வரர் கோயில், நந்திபுர விண்ணகரம், பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை என இங்கு காணப்பட வேண்டிய தலங்கள் அநேகம்.

திருப்புறம்பியம்
திருப்புறம்பியம்


திருப்புறம்பியம்: பிற்காலச் சோழர்களின் வரலாற்றில் திருப்புமுனை உண்டாக்கிய இடம் திருப்புறம்பியம். மண்ணியாற்றுக்கு வடகரையில், திருப்புறம்பியம் என்னும் ஊரில் வயல்வெளிகளுக்கு நடுவே கேட்பாரற்றுக் கிடக்கிறது கங்க மன்னன் பிரிதிவீபதியின் பள்ளிப்படைக் கோயில். விஜயாலயச் சோழன் இங்கு காட்டிய வீரத்தால் சோழர் குலமே மீண்டெழுந்த அதிசயம் இங்குதான் நடைபெற்றது. இன்றும் அவர் தெய்வமாக வழிபடப்படும் அதிசயத்தை நாம் கண்டே ஆக வேண்டும்.

கோடியக்கரை
கோடியக்கரை

இன்னும் தஞ்சையும், கோடியக்கரையும் ஆயிரம் ஆயிரம் கதைகளைச் சொல்ல உங்களுக்காகக் காத்திருக்கின்றன. வாருங்கள், விகடன் நடத்தும் வந்தியத்தேவனின் வழியில் வரலாற்றுப் பயணம் நிகழ்வில் கலந்துகொள்ளுங்கள்...

முன்பதிவு விவரங்களுக்கு 97909 90404

முன்பதிவுக்கு கிளிக் செய்யவும்.