திருத்தலங்கள்
திருக்கதைகள்
Published:Updated:

அபிஷேக பலன்கள்

அபிஷேக பலன்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
அபிஷேக பலன்கள்

அபிஷேக பலன்கள்

பாற்கடலில் தோன்றிய ஆலகால விஷத்தை அருந்தி, தேவர்களையும் சகல உயிர்களையும் சிவபெருமான் காத்தருளிய திருக்கதை நாமறிந்ததே. விஷப் பாதிப்பு நீங்கியதால் மனக்கலக்கம் நீங்கிய தேவர்கள் முனிவர்கள் முதலான அனைவரும் மகிழும்விதம் ரிஷபத்தின் பிரணவ வடிவமான கொம்புகளின் நடுவில் சிவபெருமான் ஆனந்தத் தாண்டவம் ஆடினார்.

இவ்வாறு சிவபெருமான் அருள் புரிந்த காலமே ‘பிரதோஷ வேளை’ எனப்படுகிறது. அந்த வேளையில் சிவனாரை வழிபடுவதால் பெரும் புண்ணியம் கிடைக்கும். பிரதோஷத்தில் ஐந்து வகை உண்டு. நித்தியப் பிரதோஷம், பக்ஷப் பிரதோஷம், மாதப் பிரதோஷம், மகா பிரதோஷம், பிரளயப் பிரதோஷம் என்பவை அவை.

சிவபெருமான் விஷம் அருந்தி, துயர் தீர்த்த (பிரதோஷம்) காலம் ஒரு சனிக்கிழமையன்று என்பதால், சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் ‘மகா பிரதோஷம்’ எனப்படும். வரும் 15.1.2022 அன்று சனி மகா பிரதோஷம் வருகிறது.

இந்தத் திருநாளில் சிவபெருமானை எந்தெந்தப் பொருளால் அபிஷேகம் செய்து வழிபட்டால் என்னென்ன நன்மைகள் உண்டாகும் என்பதை அனுபவசாலிகளான நம் முன்னோர்கள் கூறி இருக்கிறார்கள். அவை:

வலம்புரிச் சங்கு அபிஷேகம்: தீவினை நீங்கி நல்வினை சேரும். நினைத்தது நடக்கும்.

சொர்ணா(தங்க)பிஷேகம்: வியாபாரம் வளரும்.

பன்னீர் கலந்த சந்தனக் குழம்பு: லட்சுமிதேவியின் கடாட்சம் உண்டாகும்.

விபூதி: போகத்தையும் மோட்சத்தையும் தரும்.

சந்தனத் தைலம்: சுகத்தைத் தரும்.

திருமஞ்சனப் பொடி: கடன் மற்றும் நோய் தீரும்.

கரும்புச் சாறு: நோய் தீர்க்கும்.

எலுமிச்சம் பழம் (சாறு): பகையை அழிக்கும்.

இளநீர்: இன்பமான வாழ்வு தரும்.

பஞ்சாமிர்தம்: உடல் வலிமையைத் தரும்.

தேன்: குரல் இனிமையைக் கொடுக்கும்.

நெய்: முக்தியைத் தரும்.

தயிர்: நல்ல குழந்தைகள் பெறலாம்.

பால்: நீண்ட ஆயுள் கொடுக்கும்.

அவரவர் விரும்பும் பலனுக்கு உண்டான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யலாம். முடியாதபோது நம்மால் எது முடியுமோ, அதை வைத்து அபிஷேகம் செய்யலாம்.