Published:Updated:

பட்டினத்தார் அருள் பெற்ற பல்லவனேஸ்வரம்!

பல்லவனேஸ்வரம் ஆலயம்
பிரீமியம் ஸ்டோரி
News
பல்லவனேஸ்வரம் ஆலயம்

பட்டினத்தார் வழிபட்ட ஆலயம்

அன்று ஆவணி மாதம். திங்கட்கிழமையும் திருவோண நட்சத்திரமும் இணைந்த தினம்; பிரதோஷத் திருநாள்வேறு. திருவெண்காடு காவிரிக் கரையில் கூடியிருந்தது அந்தக் கூட்டம். தன் எதிரில் நிற்கும் சிறுவனை ஒருகணம் உற்று நோக்கிய அந்த அடியவர் சிறு புன்னகையோடு பேசத் தொடங்கினார்.

பட்டினத்தார் அருள் பெற்ற பல்லவனேஸ்வரம்!

``ஈசனின் கட்டளைப்படியே இங்கு வந்திருக்கிறேன். அவரின் விருப்பப்படியே உனக்கு தீட்சை தருவதோடு பஞ்சாட்சர உபதேசமும் செய்துவைக்கப் போகிறேன். கொடுத்து வைத்தவன் நீ. நல்ல நாள்-நல்ல பொழுது இது. விரைந்து சென்று நதியில் நீராடி வா...’’ என்றார்.

அவ்விதம் அவனுக்கு வழிகாட்டிய அந்த அடியவர் வியாக்ரபுரம் எனும் ஊரிலிருந்து வந்திருந்தார். அவரின் கனவில் தோன்றிய ஈசன் `திருவெண்காட்டுக்குச் சென்று, அங்கே ஆலயத்தில் அன்னையுடனும் அடியார் களுடனும் சிறுவன் ஒருவன் இருப்பான். அவனுக்குத் தீட்சையும் பஞ்சாட்சர உபதேசமும் செய்து வா’ என்று அருளியிருந்தார்.

அத்துடன் சம்புடம் ஒன்றைக் கொடுத்து ``இந்தச் சம்புடத்தை அவனிடம் கொடு. அவன் போன பிறவியில் வழிபட்ட ஆன்மார்த்த வடிவமான சிவலிங்கம் இதனுள் இருக்கிறது. இதை அந்தச் சிறுவனால் மட்டுமே திறக்க முடியும். அவனுக்குப் பூஜை முறைகளைச் சொல்லிக் கொடுத்து, நாற்பத்தெட்டு நாட்களாவது அவனுடன் இரு!’’ என்றும் ஆணையிட்டிருந்தார்.

சிவன் ஆணையை நிறைவேற்றவே அடியார் வந்திருந்தார். சிறுவன் நீராடி வந்தான். தொடர்ந்து திருக்குளத்திலும் அவனை நீராடச் செய்து, விபூதி, ருத்திராட்சங்கள் அணியச் செய்தார். கோயிலுக்குள் சிவ சந்நிதியில் பட்டினத்தாருக்குப் பஞ்சாட்சர மந்திரம் உபதேசிக்கப்பட்டது. இறைவன் அளித்த சம்புடமும் அவனிடம் ஒப்படைக்கப்பட்டது.

பட்டினத்தார் அருள் பெற்ற பல்லவனேஸ்வரம்!

எவராலும் திறக்க முடியாத சம்புடத்தைச் சிறுவன் திறந்தான். உள்ளே சிவலிங்கம் காட்சி தந்தது. அனைவரும் வியந்து போற்றி வணங்கினர். அந்த வேளையில் சிறுவனின் மனதில் குறையொன்று தலை தூக்கியது. சிந்தை நிறைந்திருக்கும் சிவத்தைப் பாடி வழிபட ஞானம் இல்லையே என்ற குறைதான் அது. அப்போது ஓர் அசரீரி ஒலித்தது.

‘‘திருவெண்காடனே! உனக்கு இப்போதே எல்லா கலை ஞானமும் உண்டாகும்’’ என்று அருளினார் இறைவன்.

ஆம்! திருவெண்காடர் என்றும் பட்டினத்தார் என்றும் ஞான உலகம் போற்றும் அற்புதரின் ஞானப் பயணம் தொடங்கியது இப்படித்தான். அரன் அருளால் அவர் வாக்கிலிருந்து அற்புதமான பாடல்கள் பலவும் வெளிவந்தன.

பட்டினத்தடிகள் பிறந்த ஊர் காவிரிப்பூம்பட்டினம். தற்போது `பூம்புகார்’ என்றழைக்கப்படுகிறது. இவ்வூரின் அருகே பல்லவனம் எனும் பகுதியில் அமைந்திருக்கிறது அருள்மிகு சௌந்தரநாயகி சமேத அருள்மிகு பல்லவனேஸ் வரர் திருக்கோயில்.

தேவாரப் பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் 10-வது தலம் இது. பல்லவ மன்னன் ஒருவன் இங்கு வழிபட்டதால், இத்தலத்துக்கு ‘பல்லவனீச்சரம்’ என்றும் அழைக்கப்பட்டதாம். இயற்பகை நாயனார் அவதரித்ததும் இங்குதான். காலவ முனிவரும் இங்கு வந்து வழிபட்டுள்ளார்.

ஶ்ரீபல்லவனேஸ்வரர்
ஶ்ரீபல்லவனேஸ்வரர்

பல்லவனீச்சரம் என வழங்கப்படும் பூம்புகார் சிவாலயத் தில், ஸ்தல விநாயகராக அனுக்கை விநாயகர் அருள்புரிகிறார். மூல ஸ்தானத்தில் பெரிய லிங்க உருவில் காட்சித் தருகிறார் அருள்மிகு பல்லவனேஸ்வரர். சுயம்பு மூர்த்தி. பட்டினத்தார் தனிச் சந்நிதியில் வடக்கு நோக்கி அருள்கிறார். இவரின் சந்நிதி விமானத்தில் அவரின் தாய், மனைவி, அவரிடம் மகனாக வந்து வளர்ந்த ஈசன் ஆகியோரின் சிற்பங்களை தரிசிக்கலாம்.

சுவாமி, கடலை நோக்கியபடி காட்சி தருகிறார். நவகிரக மண்டபத்தில் அருளும் கிரக மூர்த்திகள் அனைவரும் சுவாமியை (மேற்கு) நோக்கி அருள்வது இத்தலத்தின் விசேஷ அம்சம். பிராகாரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகன் காட்சி தருகிறார்; மயில் வாகனம் இல்லை. கோஷ்டத்தில் இரண்டு துர்கையரை தரிசிக்கலாம். இந்த தேவியரின் ஒருவரின் திருவடியில் மகிஷன் இல்லை.

இங்கு சிவபெருமானுக்குப் பிரம்மோற்சவம் கிடையாது; கோயிலில் கொடி மரம் இல்லை. பட்டினத்தாருக்காக விழா எடுக்கப்படுகிறது. இதை `அடியார் உற்சவம்’ என்கிறார்கள்.

ஆடி மாதம் பட்டினத்தார் திருவிழா 12 நாட்கள் நடைபெறு கிறது. 10-ம் நாளன்று பட்டினத்தார், அவரின் குடும்பத்தினர், சீடர் பத்ரகிரியார், குகாம்பிகை ஆகியோர் உற்சவ மூர்த்திகளாய் வீதியுலா காண்பார்கள்.

பக்தர்கள் தங்களுக்கு நல்ல அறிவான குழந்தைகள் பிறக்கவும், பொருட்கள் மீதான ஆசை குறையவும் இங்குள்ள பல்லவனநாதரிடம் வேண்டிக்கொள்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் சுவாமி, அம்பாள், பட்டினத்தாருக்கு விசேஷ பூஜைகள் செய்து வழிபடுகின்றனர்.

பட்டினத்தார் அருள் பெற்ற பல்லவனேஸ்வரம்!

இக்கோயிலில் பூஜை செய்து வரும் கணேஷ் குருக்களிடம் பேசினோம். “இந்தக் கோயில் பஞ்சலிங்க க்ஷேத்திரம். சூரியேஸ்வரர், சுந்தரேஸ்வரர், ஆரண்யேஸ்வரர், பில்லாரை யேஸ்வரர், பல்லவனேஸ்வரர் என பஞ்ச லிங்க ரூபத்தில் ஈசன் அருள்வதால் இப்படியொரு சிறப்பு இந்தத் தலத்துக்கு!

ஏழு அழகிய வனங்கள் சூழ அமைந்திருந்த இத்தலத்தின் அழகை வியந்த குபேரன், இந்த வனத்தில் அமர்ந்து சிவனை எண்ணி தவம் செய்தாராம். அவரின் விருப்பப்படியே இங்கு திருவெண்காடராகப் பிறந்து வளர்ந்து, பிற்காலத்தில் பட்டினத்தாராக சிறப்பு பெற்றார்.

வாணிப குலத்தை இத்தலத்து ஈசன் பெருமைப் படுத்தியதால், காரைக்குடி மற்றும் தேவகோட்டையைச் சேர்ந்த வாணிப செட்டியார் சமூகத்தினர் ஆண்டுதோறும் இங்கு வந்து 12 நாள் திருவிழாவை கோலாகலமாக நடத்துகின்றனர்’’ என்று தொடர்ந்தார்.

``முதல் நாள் கொடியேற்றம். அடுத்து மூன்று நாள்களில் முறையே பெண்பார்க்கும் வைபவம், திருக்கல்யாணம், மருதவாணரைத் தத்தெடுத்து வாங்கும் வைபவங்கள் நிகழும். 5-ம் நாளன்று மருதவாணர் கடல் கடந்து வணிகத்துக்குப் புறப்படுதல், அவர் திரும்பியதும் தாயிடம் ஒரு பேழையை ஒப்படைப்பது, அதிலுள்ள ஓலையில் `காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே’ எனும் பெரும் தத்துவத்தை உணர்த்துதல் முதலான வைபவங்கள் நிகழும்.

இப்படியே 6, 7, 8-ம் திருநாள்களிலும் பட்டினத்தாரின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களை நினைவூட்டும் வைபவங்கள் நடந்தேறும். 9-ம் நாளன்று சிவனார் பிச்சாண்டியாக வந்து பட்டினத்தடிகளிடம் பிக்ஷை ஏற்கும் வைபவம், 10-ம் நாளன்று பட்டினத்தருக்கு ஈசன் பேய்க்கரும்பு வழங்கும் வைபவம் நடக்கும். 11-ம் நாள் தீர்த்தவாரி நிகழும். 1

2-ம் திருநாளன்று காப்புறுத்து திருவிழா நிறைவடைகிறது. இந்த விழா நாட்களில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ஈசனை வேண்டி வளம் பெறுகிறார்கள்” என்றார்.

எப்படிச் செல்வது?: மயிலாடுதுறை மற்றும் சீர்காழியிலிருந்து பூம்புகார் செல்லும் பேருந்துகளில் பயணித்து, பல்லவனத்தை அடையலாம். பேருந்து நிறுத்தம் அருகிலேயே பல்லவனேசுவரர் கோயில் உள்ளது.

தேனி மாவட்டம், கண்டமனூரில் இருக்கிறது, ஶ்ரீஉமா மஹேஸ்வரி சமேத ஶ்ரீபரமேஸ்வரன் கோயில். 300 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த ஊரிலுள்ள குளத்தைச் சீர்ப்படுத்தியபோது, உருண்டை வடிவில் ஒரு சாளக்கிராமக் கல் கிடைத்திருக்கிறது. அதில் லேசாக ரத்தக்கசிவு ஏற்பட்டதுபோலத் தெரிந்திருக்க, விஷயம் அன்றைய கண்டமனூர்