Published:Updated:

எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி!

சிவபெருமான்
பிரீமியம் ஸ்டோரி
News
சிவபெருமான்

கோயில்களில் வலம் வரும்போதோ, கிரிவலம் வரும்போதோ, பிரதோஷ வழிபாட்டின் போதோ, வீட்டில் பூஜையின்போதோ இந்த போற்றித் திரு அகவலைச் சொல்லி வழிபடுவது மிகவும் விசேஷம்.

மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தில் உள்ளது, `போற்றித் திருஅகவல்'. இதைச் சொல்லி, ஒவ்வொரு 'போற்றி'க்கும் மலர் தூவி, சிவபெருமானை வழிபடலாம்.

கோயில்களில் வலம் வரும்போதோ, கிரிவலம் வரும்போதோ, பிரதோஷ வழிபாட்டின் போதோ, வீட்டில் பூஜையின்போதோ இந்த போற்றித் திரு அகவலைச் சொல்லி வழிபடுவது மிகவும் விசேஷம்.

இந்த அகவலை உச்சரிப்பதால், இறைவனை வழிபட்ட புண்ணியத்துடன், அவர் உறையும் உலகத்து ஜீவராசிகள் அனைத்தையும் வழிபட்ட புண்ணியம் கிடைக்கும் என்கின்றன ஞானநூல்கள்.

எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி!

இந்தப் போற்றித் துதியை முழுமையாய்ப் படித்து வழிபட இயலவில்லை என்றாலும் கீழ்க்காணும் 11 போற்றித் துதிகளையேனும் தினமும் ஒருமுறை படித்து வணங்கி வந்தால், நினைத்தகாரியம் நினைத்தபடி நிறைவேறும்.

தென்னா டுடைய சிவனே போற்றி

எந்நாட் டவர்க்கு மிறைவா போற்றி

ஏனக் குருளைக் கருளினை போற்றி

மானக் கயிலை மலையாய் போற்றி

அருளிட வேண்டும் அம்மான் போற்றி

இருள்கெட அருளு மிறைவா போற்றி

தளர்ந்தேன் அடியேன் தமியேன் போற்றி

களங்கொளக் கருத அருளாய் போற்றி

அஞ்சேல் என்றிங் கருளாய் போற்றி

நஞ்சே யமுதா நயந்தாய் போற்றி

அத்தா போற்றி ஐயா போற்றி!

- கே.மூர்த்தி, திருநெல்வேலி-2

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz