Published:Updated:

வேண்டுதல்!

அக்பர் கதை!
பிரீமியம் ஸ்டோரி
அக்பர் கதை!

சிந்தனை விருந்து

வேண்டுதல்!

சிந்தனை விருந்து

Published:Updated:
அக்பர் கதை!
பிரீமியம் ஸ்டோரி
அக்பர் கதை!

`நம் தேவைகள் மிகவும் குறைவானவை; ஆனால், நம் ஆசைகளுக்குத்தான் எல்லையே இல்லை’ என்கிறார் பிரபல அமெரிக்க மருத்துவரும், சிந்தனையாளருமான ஜான் பில்லிங்ஸ். இறை வழிபாட்டின் மேன்மையை அறியாதவர்கள்தான் நம்மில் பலர். வல்லமைமிக்க மகாராஜாக்களே அப்படி இருந்திருக்கிறார்கள் என்பதுதான் வரலாறு சொல்லும் உண்மை.

வேண்டுதல்!

க்பரின் ஆட்சிக்காலம். டெல்லிக்கு மிக அருகிலிருக்கும் ஒரு கிராமத்தில் வசித்துவந்தவர் ஃபரீத்... சூஃபி ஞானி. அவரைக் காண அக்பர் வருவாரே தவிர, ஒருபோதும் ஃபரீத் அக்பரைத் தேடிச் சென்றதில்லை. ஆனால், அவரும் அக்பரைத் தேடிச் செல்லவேண்டிய நேரம் வந்தது. கிராமத்துப் பெரியவர் ஒருவர் ஃபரீத்திடம் சொன்னார்... ``நம் கிராமத்தில் பள்ளிக்கூடம் இல்லை. அக்பரிடம் நீங்கள் சொன்னால் போதும். உடனே கட்டித் தந்துவிடுவார்.’’

`ஒருவரிடம் உதவி கேட்க வேண்டுமென்றால், அவர் வரும்போது கேட்பது முறையல்லவே... நாம்தானே போய்க் கேட்க வேண்டும்!’ கிளம்பிவிட்டார் ஃபரீத்.

அக்பரின் அரண்மனை. அங்கிருந்த காவலர் களுக்கு ஃபரீத் நன்கு அறிமுகம். மரியாதையோடு வழிவிட்டார்கள். அது தொழுகை நேரம். அக்பர் தனியறையில் தொழுகையிலிருந்தார். அவருக்குப் பின்னால் போய் நின்றார் ஃபரீத்.

தொழுகை முடிந்ததும், தன் அருகே யாரும் இல்லை என்கிற நம்பிக்கையில் அக்பர் சத்தமாக இறைவனிடம் இப்படி வேண்டினார்... ``எனக்கு அதிக செல்வத்தையும், அதிக அதிகாரத்தையும், அதிக ராஜ்யத்தையும் கொடு இறைவா...’’ இதைக் கேட்ட ஃபரீத் விதிர்விதிர்த்துப் போனார். விறுவிறுவென்று திரும்பி நடக்க ஆரம்பித்தார். ஆனால், அக்பர் அவரைப் பார்த்துவிட்டார். ஃபரீத்தை நோக்கி ஓடினார். அவர் கால்களில் விழுந்தார். ``இங்கே எதற்காக வந்தீர்கள் மகானே...’’

``ஒரு சிறு கோரிக்கை வைப்பதற்காக வந்தேன். நீங்களோ இன்னும் கடவுளிடம் எதையாவது கேட்டுப்பெறும் பிச்சைக்காரராகவே இருக்கிறீர்கள். எங்கள் கிராமத்துக்குப் பள்ளிக் கூடம் வேண்டும். அதற்காக உங்களிடமிருக்கும் செல்வத்தில் சிறிதைச் செலவழித்தாக வேண்டும். அதனால் உங்கள் செல்வம் குறைந்து போகும். உங்களிடம் போய்... நானும் இறைவனை வழிபட்டுக்கொண்டுதான் இருக்கிறேன். ஆனால், ஒருபோதும் எதையும் அவரிடம் கேட்டதில்லை. என் கண்களைத் திறந்துவிட்டீர்கள். நன்றி.’’ அந்த சூஃபி ஞானி வெளியேறினார்.

நேர்த்திக்கடன் என்கிற பெயரில் நம் ஆட்கள் செய்பவை கொஞ்சநஞ்சமல்ல. அதிகாரி கேட்டார்... ``ஏம்ப்பா... இப்போ ஒரு வாரத்துக்கு முன்னாடிதானே திருப்பதிக்குப் போகணும்னு லீவு போட்டுட்டுப் போனே... மறுபடியும் திருப்பதிக்குப் போக லீவு கேட்டிருக்கே?’’

``இல்லை சார். பத்திரமா வீடு வந்து சேர்ந்துட்டேன்னா, மறுபடியும் திருப்பதிக்கு வர்றேன்னு வேண்டிக்கிட்டேன். அதான்..!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism