Published:Updated:

குளிக்கும்போதும் இறைநாமம்!

நீராடல் நியதிகள்
பிரீமியம் ஸ்டோரி
நீராடல் நியதிகள்

நீராடல் - நியதிகள் - வகைகள் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

குளிக்கும்போதும் இறைநாமம்!

நீராடல் - நியதிகள் - வகைகள் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:
நீராடல் நியதிகள்
பிரீமியம் ஸ்டோரி
நீராடல் நியதிகள்

நீராடல் இயற்கைத் தூய்மையை உறுதிப்படுத்தும். உடல் நலம் குன்றியவர்களுக்குத் தண்ணீரில் மூழ்குவதும் நீராடுவதும் இயலாது. அந்த நிலையில், விபூதியை உடலில் பூசிக்கொள்ளலாம். இதுவும் நீராடலுக்குச் சமம் என்கிறது தர்மசாஸ்திரம். இங்ஙனம் விசேஷமான நீராடல் வகைகளின் சிறப்பை விவரிக்கின்றன ஞானநூல்கள்.

குளிக்கும்போதும் இறைநாமம்!
Rajesh Kumar Singh

விபூதிக் குளியல்: தண்ணீரால் நீராடுவதை ‘வாருண ஸ்நானம்’ என்றும் விபூதியைப் பூசிக்கொள்வதை ‘ஆக்னேய ஸ்நானம்’ என்றும் சொல்வார்கள். சுத்தம் செய்யத் தண்ணீர் பயன்படுவது போல், நெருப்பும் பயன்படும். தங்கத்தில் இருக்கும் அழுக்கை அகற்ற நெருப்பைப் பயன் படுத்துவார்கள். நெருப்பு, அதாவது அக்னி சுத்தம் செய்யும். பசு மாட்டுச் சாணத்தை அக்னியில் பஸ்பமாக்கியதுதான் விபூதி. சாணம் சுத்தம். அதோடு அக்னியின் தொடர்பும் சுத்தத்தைச் சிறப்பிக்கிறது. அதை அணியும்போது உடலும் உள்ளமும் தூய்மை பெறும்.

கோதூளி ஸ்நானம்: கிராமங்களில் சாயங்கால வேளைகளில் மாட்டு மந்தைகள் வீடு திரும்பும். பசுக்களின் கால்கள் பட்டு மேலே கிளம்பிய தூசி காற்றில் நமது உடம்பில் பட்டால் உடலும் உள்ளமும் சுத்தமாகிவிடும். இதற்கு ‘கோதூளி ஸ்நானம்’ என்று பெயர்.

மண் இயற்கைச் சுத்தத்தோடு இருக்கும். குளம்பின் காலடி பட்டு, காற்றின் இணைப்பில் சுத்தப்படுத்தப்படுகிறது மண். அந்த மண் பட்டாலே உடலும் சுத்தமாகும் என்பது சாஸ்திரத்தின் கணிப்பு. இதற்கு ‘வாயவ்ய ஸ்நானம்’ என்று பெயர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குளிக்கும்போதும் இறைநாமம்!
Mukhtar Khan

திவ்ய ஸ்நானம்: சில நேரம் மழை பொழியும்போது வெயிலும் தோன்றும். அந்த வேளையில் தென்படும் மழைத் தண்ணீரை உடம்பில் படவைப்பது, நீராடலுக்கு ஒப்பாகும். இதற்கு ‘திவ்ய ஸ்நானம்’ என்று பெயர்.

ப்ரோக்ஷண ஸ்நானம்: தலை முதல் கால் வரை மந்திரம் சொல்லி தண்ணீரைத் தெளித் துக் கொள்வதும், நீராடலுக்கு ஈடாகும். ‘ராமா, கிருஷ்ணா, சிவ சம்போ, ஹரே, மாதவா, கோவிந்தா...’ என்று கடவுள் பெயரைச் சொல்லி தண்ணீரை உடம்பில் தெளித்துக்கொள்ள வேண்டும். அப்போது மனம் கடவுள் பெயரைச் சொல்லும். கை தண்ணீரை உடம்பில் தெளித்துக்கொள்ளும். இதற்கு ‘ப்ரோக்ஷண ஸ்நானம்’ என்று பெயர்.

குளிக்கும்போதும் இறைநாமம்!
Mukhtar Khan

நீராடலின் நியதிகள்...

தர்ம சாஸ்திரத்தின் செயல்பாடுகள் அத்தனையும் நீராடலுக்குப் பிறகே தொடங்கு

கிறது. தண்ணீரில் நீராட இயலாதவர்கள் மேற்குறிப்பிட்டவற்றில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து, உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக்கிக்கொள்ள வேண்டும் என்பது சாஸ்திரத்தின் பரிந்துரை.

ஆதவன் தோன்றுவதற்கு முன்னே நீராடல் நிகழவேண்டும். ‘எனது பாவத்தைப் போக்கவும், கடவுளை மகிழ்விக்கவும் நீராடலைச் செயல்படுத்துகிறேன்!’ என்று சொல்ல வேண்டும். காலத்தையும் தேசத்தையும் குறிப்பிட்டு நீராட வேண்டும்.

தண்ணீரை உடலில் தெளித்துக்கொள்ள வேண்டும். ‘ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே’ என்று சொல்லித் தெளித்துக்கொள்வது சிறப்பு. வேதம் பயின்றவர் சூக்தங்களையும் சேர்த்துச் சொல்ல வேண்டும்.

கிழக்கு முகமாகவோ, வடக்கு முகமாகவோ நீரில் மூழ்க வேண்டும். வேதம் கற்றவர் அப்போது அகமர்ஷண சூக்தத்தையோ, காயத்ரி மந்திரத்தையோ சொல்லலாம். கடைசிப் பட்சமாக ஓம் என்ற பிரணவத்தைச் சொல்லலாம். கடவுள் பெயரைச் சொல்லியும் முழுகலாம். முழுகிய பிறகு தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும், இறந்த முன்னோருக்கும், தண்ணீரை இரு கைகளாலும் அள்ளி விட்டு வணங்கவேண்டும்.

குளியலறையில் தண்ணீரை மொண்டு குளித்தாலும், கிழக்கு நோக்கியோ, வடக்கு நோக்கியோ நின்று நீராட வேண்டும். கடவுள் பெயரைச் சொல்லி நீராடுவது சிறப்பு. மனம், சொல், செயல் ஆகியவற்றால் நிகழ்ந்த தவறுகள் ராம நாமத்தால் அகன்றுவிடும் என்கிறது சாஸ்திரம்.