Published:Updated:

`இந்தியாவின் லட்சுமிகளைப் போற்றுவோம்'- பெண்கள் குறித்து மோடி பெருமிதம்!

நவராத்திரியை வடமாநிலங்களில் ‘துர்கா பூஜை’ என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். குறிப்பாக மேற்கு வங்கத்தில் மிகப் பிரமாண்டமான முறையில் இந்த விழா கொண்டாடப்படும். கர்நாடக மாநிலம் மைசூரில் நடைபெறும் தசரா திருவிழா மிகவும் புகழ்பெற்றது.

இந்திய முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகைகளுள் நவராத்திரி மிகவும் முக்கியமானது. அனைத்து ஆலயங்களிலும் அன்னை சக்தியை இந்த நவராத்திரி நாள்களில் ஆராதிப்பது வழக்கம். நவராத்திரியின் முதல் மூன்று நாள்கள் துர்கைக்கும், அடுத்த மூன்று நாள்கள் லட்சுமிக்கும், கடைசி மூன்று நாள்கள் சரஸ்வதிக்கும் உரியதாகக் கொண்டாடப்படுகின்றன.

Golu Dolls
Golu Dolls

நவராத்திரியின் ஒன்பது நாள்களும் ஒன்பது விதமான அம்பிகையைப் பூஜை செய்து, வழிபட வேண்டும். அப்படி வழிபடுவதால் வாழ்க்கையில் எல்லா வளங்களையும் பெற முடியும் என்பது நம்பிக்கை.

நவராத்திரியை வடமாநிலங்களில் ‘துர்கா பூஜை’ என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். குறிப்பாக மேற்கு வங்கத்தில் மிகப் பிரமாண்டமான முறையில் இந்த விழா கொண்டாடப்படும். கர்நாடக மாநிலம் மைசூரில் நடைபெறும் தசரா திருவிழா மிகவும் புகழ்பெற்றது.

Narendra Modi - Prime Minister of India
Narendra Modi - Prime Minister of India

இந்தச் சூழலில் ஐ.நா. பொதுச்சபையில் பங்கேற்ற பின் நாடு திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி, `மன் கி பாத்’ நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது “நவராத்திரி பண்டிகை என்பது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும் நேரம். இந்தியாவின் லட்சுமிகளான பெண் குழந்தைகளைப் போற்றிக் கொண்டாட வேண்டும். பெண்களின் ஆற்றலை, வலிமையை நவராத்திரி பண்டிகைக் காலங்களில் போற்றுவோம்” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் அன்னை பிரம்மச்சாரிணியை ஸ்தோத்தரிக்கும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். அன்னை பிரம்மச்சாரிணியே ஆதி சக்தியாகக் கருதப்படுபவள். வீடியோவுடன் ஒரு செய்தியையும் பிரதமர் மோடி வழங்கியிருந்தார்.

அதில் `இன்று நவராத்திரி. தாயின் மற்றொரு வடிவம் தாய் பிரம்மச்சாரிணி. தியானத்தின் பலனை அடைய தெய்விக ஊக்கமளிப்பவர் அவர். நம்முடைய இலக்குகளை அடைய அவர் நமக்கு சக்தி அளிக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு