தஞ்சை - கும்பகோணம் சாலையில் 14-வது கி.மீ தாண்டி அய்யம்பேட்டை அருகே உள்ளது பசுபதிகோயில் கிராமம். இங்குதான் ஆலந்துறை எனும் புள்ளமங்கை கோயில் உள்ளது. முதலாம் பராந்தகச் சோழன் கட்டிய அற்புதமான கலைப் பொக்கிஷம் இந்த ஆலயம்.
கழுகுகள் வணங்கியதால் புள்ள (கழுகு) மங்கை என்றும், சக்கர மங்கை, அரிய மங்கை, சூல மங்கை, நந்தி மங்கை, பசு மங்கை, தாழ மங்கை, புள்ள மங்கை (இத்தலம்) என சப்த மாதர்கள் வழிபட்டது என்றும் இந்த ஆலயத்துக்கு புள்ளமங்கை என்று பெயர் வந்ததாம். குடமுருட்டி ஆற்றின் கரையில் இருப்பதாலும் ஆலம் (குளிர்ச்சி), ஆலமரத்தை தலவிருட்சமாகவும் கொண்டதால் ஆலந்துறை என்றும் பெயர் உருவானதாம். புள்ளமங்கை அருகேயே பசுபதீஸ்வரர் கோயில் இருப்பதால் இந்த ஊருக்கு பசுபதிகோயில் என்றும் பெயர் வந்ததாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
முன்பதிவு மற்றும் விவரங்களுக்கு: 97909 90404, 73974 30999
இங்குள்ள ஈசன், ஆலந்துறைநாதர், பிரம்மபுரீஸ்வரர், புள்ளமங்கலத்து மகாதேவர் என்று வணங்கப்படுகிறார். அம்பிகை அல்லியங்கோதை, சௌந்தரநாயகி என்று வணங்கப்படுகிறாள். கோச்செங்கணான் கட்டிய மாடக்கோயில்களில் இதுவும் ஒன்று. சம்பந்தப்பெருமானால் தேவாரம் பாடப்பெற்ற கோயில் இது. பாற்கடலைக் கடைந்தபோது திரண்ட ஆலகால விஷத்தை இறைவன் அமுது செய்த இடம் என்பதால் ஆலந்துறை நாதர் என்றானார் வேண்டும் பிரம்மன் பூசித்ததால் பிரம்மபுரீஸ்வரர் என்றானார் என்றும் கூறப்படுகிறது. சக்கரப்பள்ளியின் சப்தஸ்தானத் தலங்களுள் இதுவும் ஒன்று. ஆலயத்தின் புராணத் தகவல்கள் அளப்பரியன என்றால், வரலாற்றுத் தகவல்களோ அதை விட அதிகம் கொட்டிக் கிடக்கின்றன எனலாம்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஅகழி அமைப்பு கொண்ட அற்புதமான தேர் வடிவ கோயில் இது. வெற்றியின் நினைவாக எழுப்பப்படும் ஜயத விமானம் இங்குள்ளது. விமானத்தின் கீழ் நாட்டிய கரணங்கள் 108, ராமாயண காட்சிகள், ஆடல் மங்கையர் சிற்பங்களும் அருமையானவை. நவகிரகங்களுக்கு நடுவில் நந்தி இருப்பது இங்கு மட்டுமே. இங்குள்ள துர்கை தனி விஷேசம் கொண்டவள் எனலாம். அப்பப்பா...என்னவொரு அழகு, என்னவொரு கம்பீரம் இந்த துர்கைக்கு! திருப்புள்ளமங்கை, திருநாகேச்சுரம், பட்டீஸ்ரம் இந்த 3 தலங்களிலும் உள்ள துர்கைகளும் ஒரே சிற்பியால் வடிக்கப்பட்டவள் என்றும், ஒரே காலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டவள் என்றும் கூறுகிறார்கள்.

கருங்கல்லில், பிரகாசமாக, எருமை மீது நின்று கொண்டு மகிஷாசுர மர்த்தினியாக காட்சி தருகிறாள் துர்கை. சூலம், கேடயம், அங்குசம், சங்கு, சக்கரம், வாள், வில், கதை ஆகிய அஷ்ட ஆயுதங்களை ஏந்தி, இருபுறமும் மானும் சிம்மமும் காணப்படுகின்றன. இது ஒரு அபூர்வ குறியீடு என்கிறார்கள் ஆய்வாளர்கள். கீழே இரு வீரர்கள் அரிகண்டமும், நவகண்டமும் அளிக்கும் சிற்பம் நம்மை அதிர வைக்கிறது. அங்கு நடந்த தியாக நிகழ்ச்சியை இவை குறிக்கின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பின்புறம் அம்பறாத் தூணியும் அம்புகளும் விளங்க துர்கை நின்றிருக்கும் கோலம், நேரிலேயே அவளைப் பார்க்கும் சிலிர்ப்பைத் தரும். மேலும் ஆலயம் எங்கும் கணபதி, மாதொருபாகன், கஜசம்ஹார மூர்த்தி, காலாரி, அந்தகாசுர சம்ஹார மூர்த்தி, தாண்டவ மூர்த்தி, வராகர் என எங்கும் சிற்பங்கள் கொட்டிக் கிடக்கின்றன. அதிலும் நான்முகனின் புன்னகை இருக்கிறதே, அது ஆயிரத்து நூறு ஆண்டுகள் கழிந்தும் மாறாத 'என்றென்றும் புன்னகை' என வியக்கலாம்.

இதே ஆலயத்தில்தான் சட்டென யாருக்கும் புலப்படாத, விமானத்தில் சற்றே ஒதுங்கி இருக்கும் ஒரு அழகிய சிற்பம் ஒன்றும் உள்ளது. அட, யார் இவர்? எங்கோ பார்த்தது போல இருக்கிறதே என்று யோசித்தால், விடை சொல்கிறார்கள் வரலாற்று ஆர்வலர்கள். ஆம், பொன்னியின் செல்வனில் வரும் வந்தியத்தேவன் சிற்பம்தான் இது, இல்லை இல்லை, ஓவியர் மணியம் இங்கு வந்தபோது இந்த சிற்பத்தைக் கண்டு மயங்கி, அதே சாயலில்தான் வந்தியத்தேவனை வரைந்தார் என்கிறார்கள்.
சற்றே வலதுபுறம் திரும்பி, தோளில் இருக்கும் வடத்தை வலது கையில் பிடித்தவாறு ஒயிலாக நின்று இருக்கும் வந்தியத்தேவனை வாய் மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தோம். யாரோ எவரோ தெரியவில்லை. ஆனால் வரலாற்றுக் காவியம் ஒன்றின் கதாநாயகனாக மாறிவிட்டாரே இவர் என்று வியப்புடன் ஆலயத்தை வலம் வந்தோம்.

21 கல்வெட்டுகள் இங்கு உள்ளன. அதில் 18 கல்வெட்டுகள் தமிழ்நாடு தொல்லியல் துறையால் வெளியிடப்பட்டுள்ளன. முதலாம் பராந்தகனின் 3-ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டே இங்கு காலத்தால் பழைமையானது. புள்ளமங்கை கோயிலுக்கு அளிக்கப்பட்ட கொடைகள் அனைத்தும் நிலக் கொடைகளாகவே அளிக்கப்ப்பட்டுள்ளன. ஆதித்த கரிகாலன் கால கல்வெட்டு ஒன்று இக்கோயிலின் காளாபிடாரிக்கு கொடையளித்த விவரத்தைச் சொல்கிறது. ராஜராஜசோழனின் 12-ஆம் ஆட்சி கால கல்வெட்டு ஒன்று சந்திர கிரகணத்தன்று அங்கு சபை கூடியதைக் குறிக்கிறது. ஆலயக் கணக்கைக் காட்டாமல் விட்ட குற்றம், கொலைக்கு தண்டனையாக விளக்கிடுதல் ஆகிய கல்வெட்டுகள் இங்கு முக்கியமானவை. கங்கமன்னன் இரண்டாம் பிருதிவிபதி இந்த கோயிலுக்கு நிலம் கொடையளித்துள்ளான். மேலும் திமிலை என்னும் வாத்தியம் இசைக்கும் கலைஞர்களுக்கு இவ்வூர் சபையார் ஸ்ரீகண்டமங்கலத்து கிழார் என்பவரின் நிலத்தினை கொடையாக கொடுத்துள்ளனர் என்றும் கல்வெட்டு கூறுகின்றது.
சோழர்களின் வரலாற்று அடையாளமாக புள்ளமங்கை விளங்கி வருகிறது. 1000 ஆண்டுகளைக் கடந்தும் மாறாத அழகுடன் விளங்கும் புள்ளமங்கையைக் காண 'சோழர் உலா!' எனும் சரித்திரமும் சமயமும் கலந்த யாத்திரை உங்களை அழைக்கிறது.
முன்பதிவு மற்றும் விவரங்களுக்கு: 97909 90404, 73974 30999