Published:Updated:

புண்ணிய புருஷர்கள் - 33:`ஐந்தெழுத்தே காக்கும் கவசம்!'

புண்ணிய புருஷர்கள்
பிரீமியம் ஸ்டோரி
புண்ணிய புருஷர்கள்

சிவபக்தி மிகுந்த அவரின் பெயர் பார்த்தசாரதி; அவரின் மனைவி பெயர் தீபா.

புண்ணிய புருஷர்கள் - 33:`ஐந்தெழுத்தே காக்கும் கவசம்!'

சிவபக்தி மிகுந்த அவரின் பெயர் பார்த்தசாரதி; அவரின் மனைவி பெயர் தீபா.

Published:Updated:
புண்ணிய புருஷர்கள்
பிரீமியம் ஸ்டோரி
புண்ணிய புருஷர்கள்

திருமணம்- நம் எல்லோரு டைய வாழ்விலும் ஒரு முக்கிய மான வைபவம். இரு மனங்கள் இணைவது மட்டுமல்லாது, இரு குடும்பங்கள் இணைந்து புதிய உறவுகளை மலரவைக்கும் இனிய விழா அது!

அதனாலேயே வசதி குறைந்த வர்களும்கூட அந்த விழாவை ஊர் மெச்ச நடத்துவதற்கு ஆசைப்படுகிறார்கள். தங்கள் பிள்ளைகளின் மணவாழ்வு, சகலரும் கூடி வாழ்த்திடத் தொடங்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். அதற்காகவே பிரமாண்டமாகத் திருமணத்தை நடத்திவைக்கிறார்கள்.

புண்ணிய புருஷர்கள் - 33:`ஐந்தெழுத்தே காக்கும் கவசம்!'

அப்படித்தான் தங்கள் மகன் கல்யாணத்தை மிக விமர்சையாக நடத்த விரும்பினார்கள் அந்த எளிய பெற்றோர். ஆனால், அவர்களின் மகனோ, சிவனடி யார் புடைசூழ மிக எளிமையாக, தனது திருமணம் நடைபெற வேண்டும் என்று விரும்பினார்.தான் காதலித்துக் கரம்பிடிக்க இருக்கும் பெண்ணை ஒரு சிவா லயத்தில் வைத்துத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

``உழைச்சுக்கிட்டே இருக்கணும். உழைப்பே வறுமை, வியாதி இரண்டையும் விரட்டும் மாமருந்து. அதிலும் சுவாமிக்காக உழைப்பது கூடுதல் சுகம்!''

அதன்படியே அந்தத் திருமணம் கடந்த 24.6.2020 அன்று, காஞ்சிபுரம் மாவட்டம் அவளூர்பேட்டை சிவாலயத் தில் நடைபெற்றது. சைவ ஆகம விதிப்படி அடியார்கள் திருமுறைகள் ஓத, இனிதே திருமணம் நடந்தது. இதில் என்ன விசேஷம் என்கிறீர்களா...

புண்ணிய புருஷர்கள் - 33:`ஐந்தெழுத்தே காக்கும் கவசம்!'

வழக்கமாக திருமணம் நடை பெற என்ன செலவாகுமோ, அந்தப் பணத்தைச் சிவாலயத் திருப் பணிகளுக்குக் கொடுத்து விட்டார் அந்த மணமகன்.

சிவபக்தி மிகுந்த அவரின் பெயர் பார்த்தசாரதி; அவரின் மனைவி பெயர் தீபா.

சிவாலயத் திருப்பணி நடைபெறும் சங்கரன்பாடி கோயிலுக்குக் கருங்கல், செங்கல் வாங்கிக் கொடுத்துள்ளார். இன்னும் அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள சிவாலயங்கள் சிலவற்றுக்கும் திருப்பணிக்காகப் பொருளுதவி செய்துள்ளார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தன் திருமணம் எளிமையாக நடக்க வேண்டும். அதனால் மிச்சப்படுத்தப்படும் தொகையைத் திருப்பணிகளுக்காகக் கொடுக்க வேண்டும் என்ற பார்த்தசாரதியின் உயர்ந்த எண்ணத்தையும் செயல்பாடுகளையும் அறிந்து அவரைத் தொடர்புகொண்டோம்.

புண்ணிய புருஷர்கள் - 33:`ஐந்தெழுத்தே காக்கும் கவசம்!'

``பல இளைஞர்களுக்கு முன்மாதிரியாக நீங்கள் செய்துள்ள இந்த நற்காரியத்தை மனதார வாழ்த்துகிறோம்'' என்றதும் கூச்சத் தில் நெளிகிறார் பார்த்தசாரதி.

``நான் என்ன செய்துவிட்டேன் ஐயா, அடியார் பெருமக்கள் வழிகாட்டினார்கள்; அதன்படிச் செய்தேன் அவ்வளவுதான். ஒரு நாள் நடக்கும் திருமண விழாவுக்கு ஏன் பல லட்சங்கள் செலவு செய்ய வேண்டும். அந்தப் பணத்தைக் கொண்டு, நெடுங்காலம் நிலைத்து நிற்கும் ஆலயங்களைப் புனரமைக்க உதவலாமே என்று தோன்றியது.

ஆகவேதான், எளிமையாய்த் திருமணம் செய்தோம். திருமணத்துக்காக வைத்திருந்த தொகையை ஆலயப் பணிகளுக்குக் கொடுத்தோம். இன்னும் கொஞ்சம் பணம் இருக்கிறது. அதையும் திருப்பணிக்குக் கொடுக்கக் காத்திருக்கிறோம்'' என்றார்.

புண்ணிய புருஷர்கள் - 33:`ஐந்தெழுத்தே காக்கும் கவசம்!'

அவருடைய குடும்பம் குறித்து கேட்டோம்.

``கிராமத்திலேயே பிறந்து வளர்ந்தவன் நான். அதனால் பெரிய ஆசைகள் எதுவும் இல்லை. அப்பா, அம்மா இருவருமே விவசா யக் கூலி வேலை செய்தவர்கள்தான். ஒரே தம்பி; பெயர் ரேணுகோபாலன். அவரும் சிவனடியாரே. தமிழ்ப் பண்ணில் திருமுறை களைக் கற்று வருகிறார்.

சிறு வயது முதலே சிவப்பணியில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். எட்டு ஆண்டு களாக சிவத் தொண்டுதான் வாழ்க்கை என்று இருந்துவிட்டேன். பி.ஏ. தமிழ் இலக்கியம் படித்து வந்தேன். முழுமையாகப் படிக்க முடியாத சூழலால் அதையும் விட்டுவிட்டேன்.

தற்போது தனியார் கம்பெனியில் வாகன ஓட்டுநராகப் பணிபுரிகிறேன். குடும்பத் தேவைகளுக்காக இந்தப் பணி. மற்றபடி, என் விருப்பமெல்லாம் உழவாரம் மட்டுமே. என்னைப்போலவே என் மனைவியாரும் அமைந்துவிட்டதில் பெரிதும் மகிழ்ச்சி. எல்லாம் ஈசனின் கருணை. அடியார் பெரு மக்களின் கருணை...'' என்று நெக்குருகிப் பேசுகிறார் பார்த்தசாரதி.

புது மணத்தம்பதி என்றாலும் உறவினர் வீட்டு விருந்துகள், சுற்றுலாக்கள் என்று பொழுதைக் கழிக்காமல், அடியார்களுடன் சேர்ந்து, ஏகாம்பரநல்லூர் சிவாலயத்தின் சுற்றுச் சுவர் திருப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

புண்ணிய புருஷர்கள் - 33:`ஐந்தெழுத்தே காக்கும் கவசம்!'

``உழைச்சுக்கிட்டே இருக்கணும் ஐயா. உழைப்புதான் வறுமை, வியாதி இரண்டையும் விரட்டும் மருந்து. அதிலும் சுவாமிக்காக உழைப்பதில் கூடுதல் சுகம். கர்ம வினைகள் நீங்கும்; நல்லவர்கள் நட்பு கிடைக்குமே ஐயா!'' என்று வெள்ளந்தியாகச் சிரிக்கும் பார்த்தசாரதிக்கு 23 வயதுதான். ஆனால் பேச்சிலும் செயலிலும் அவ்வளவு பக்குவம்.

`சிவம்' என்றாலே கண்ணில் நீர் வழிய, மிகவும் நெகிழ்ந்து போகிறார்.

``எனக்கு எதுவும் தெரியாது ஐயா. எல்லாமே அடியார்கள் சொல்லிக் கொடுப்பதுதான். `ஐந்தெழுத்துதான் உன்னைக் காக்கும் கவசம்' என்றார்கள். அதையே பிடித்துக்கொண்டோம். இப்போது எங்களுக்கென்று எதுவுமே தேவை இல்லாமல் போய்விட்டது. எங்களுக்கான தேவையை சுவாமி பூர்த்தி செய்வார் என்ற நம்பிக்கை வந்துவிட்டது.

வேலைக்குப் போனால்தான் சாப்பாடு என்ற நிலை இருக்கும். நாங்களோ உழவாரப் பணிக்குச் சென்றுவிடுவோம். ஆனால் பாருங்கள்... எப்படியாவது சுவாமி எங்களுக் குப் படியளந்துவிடுவார். அதேபோல் `லீவு போட்டால் வேலையே போய்விடும்' என்ற சூழலும் ஏற்பட்டிருக்கு. அப்போதும் கோயில் பணிக்குச் செல்லும் வாய்ப்பைக் கொடுத்திருக் கார் சுவாமி. ஆம், அதுபோன்ற தருணங்களில், சுவாமியின் அருளால் தானாக - நானே எதிர்பாராதவிதமாக லீவு கிடைத்திருக்கிறது.

புண்ணிய புருஷர்கள் - 33:`ஐந்தெழுத்தே காக்கும் கவசம்!'

ஆக, எல்லாமே அவர் கொடுப்பதுதான். கொடுத்தா சாப்பிடுவோம்; இல்லையெனில் ஈசன் விட்ட வழின்னு இருந்துடு வோம். `எதையும் யார்கிட்டயும் கேட்கக் கூடாது, அதுதான் அடியார் இலக்கணம்'னு சொல்லிக் கொடுத்திருக்காங்க பெரியவங்க. அதன்படியே நடக்கிறோம்.

தேவைக்கு மேல் அனுபவிக்கக் கூடாது; தேவைக்குப் போக மீதியைக் கடவுள் காரியத்துக்குக் கொடுத்து விடுவது என்பது எங்களின் தீர்மானம். அதேபோல், இயன்றவரையிலும் கடவுள் பணிக்கே உழைக்கணும்னு முடிவு பண்ணியுள்ளோம். பார்க்கலாம்... எல்லாம் சுவாமியோட கருணை அல்லவா... நம்மிடம் என்ன இருக்கு'' என்று சிரிக்கிறார்கள், பார்த்தசாரதி-தீபா தம்பதி.

``நாயன்மார்களும் அடியார் பெருமக்களும் சுவாமிக் காக என்னென்னவோ பண்ணியிருக்காங்க. `வாளால் மகவரிந்து ஊட்டவல்லேன் அல்லன்; நாளாறில் கண்இடந்து அப்பவல்லேன்'-னு பட்டினத்துப் பெருமான் வியந்து பாடிய பெருமக்களின் திருத் தொண்டுகளை எண்ணும்போது, நாமெல்லாம் தூசுக்குச் சமம் ஆவோமா!

அவர்களின் அடியொற்றி, நம் தர்மத்துக்காக ஏதாவது செய்யவேண்டும். ஓர் ஊரில்கூட சிவாலயம் பாழ்பட்டுப் போயிருக்கக் கூடாது. அது நமக்கு அவமானம். இளைஞர்கள் கூடி முயற்சி செய்தால், எதையும் சாதிக்கலாம். இயன்றவர்கள் பொருளுதவி செய்யலாம். மற்றவர்கள் உடலுழைப்பைக் கொடுத்து ஆலயங்களைப் புனரைக்க வேண்டும் ஐயா. ஆகவே, நீங்களும் சொல்லுங்கள்... எந்த ஊரில் சிவப்பணியென்றாலும் எங்களைக் கூப்பிடுங்கள்... ஓடிவந்து விடுகிறோம்" என்று சிரிக்கிறார் பார்த்தசாரதி.

பொன்னால் பலன் பொன்னைப் படைத்தவர்க்கு உண்டு. பொன்னைப் படைத்தவரால் பொன்னுக்குப் பலன் ஏது உண்டு. அடியார் பார்த்தசாரதி ஒரு சொக்கத் தங்கம் என்று புரிந்தது. விலங்கிலிருந்து மனிதனைப் பரிணமிக்கச் செய்தது காலம்; மனிதரில் மகான்களைக் கண்டெடுப்பது ஆன்மிகம். அப்படியே, ஆன்மிகம் ஒரு நல்ல ஆன்மாவைப் பக்குவப்படுத்தியுள்ளது என்று உணர்ந்து, பார்த்தசாரதி தம்பதியை வாழ்த்தி வணங்கி விடைபெற்றோம்.

- அடியார்கள் வருவார்கள்...

ஸ்ரீபுருஷோத்தமர் தரிசனம்

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் ஸ்ரீபுருஷோத்தமர் திருக்கோயிலுக்கு வந்தால், இரண்டு சங்குகள் மற்றும் இரண்டு சக்கரங்களை ஏந்தியபடி அருளாட்சி செய்யும் பெருமாளைத் தரிசிக்கலாம்.

புண்ணிய புருஷர்கள் - 33:`ஐந்தெழுத்தே காக்கும் கவசம்!'

இந்திர விமானத்தின் கீழ் கருவறை கொண்டு சேவை சாதிக்கிறார் ஸ்ரீபுருஷோத்தம பெருமாள். கருடாழ்வார், தன்னுடைய வலது கரத்தில் திருமாலின் திருப்பாதத்தைத் தாங்கி நின்று காட்சி தரும் தலம். எனவே, இங்கேயுள்ள பெருமாளை நித்திய கருட சேவை பெருமாள் என்று போற்றுகின்றனர், பக்தர்கள்.