Published:Updated:

புண்ணிய புருஷர்கள் - 34: ‘ஏற்றுக தீபம்... போற்றுக தெய்வம்!’

யுவராஜ்
பிரீமியம் ஸ்டோரி
யுவராஜ்

விளக்கொளிக்குத் தன்னைச் சுற்றியுள்ள தேவையற்ற நெகட்டிவ் எனர்ஜியை வீழ்த்தும் சக்தி உண்டு. இதனால் நம்மைச் சுற்றிப் பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கிறது.

புண்ணிய புருஷர்கள் - 34: ‘ஏற்றுக தீபம்... போற்றுக தெய்வம்!’

விளக்கொளிக்குத் தன்னைச் சுற்றியுள்ள தேவையற்ற நெகட்டிவ் எனர்ஜியை வீழ்த்தும் சக்தி உண்டு. இதனால் நம்மைச் சுற்றிப் பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கிறது.

Published:Updated:
யுவராஜ்
பிரீமியம் ஸ்டோரி
யுவராஜ்
தீபமேற்றி இறையை வணங்குவது நம் தொன்றுதொட்ட வழிபாட்டு முறை. பக்தன் ஒருவன் ஆலயத்திலுள்ள இறைவ னுக்கு நேரடியாகச் செய்யும் வழிபாடு, விளக்கேற்றுதலே. விளக்கேற்றினால் இருள் அகல்வதைப்போல, இறைவனுக்கு முன்பு தீப ஒளியேற்றினால் நம் கர்மங்கள் யாவும் விலகி இன்பம் நிறையும் என்பது ஐதிகம்.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதனால்தான் தீபத்தின் பெருமையைப் பல்வேறு புராணங்களும் கதைகளும் சிலாகித்துச் சொல்கின்றன. தீப வழிபாட்டின் மகத்துவத்தை கலிய நாயனாரும் கணம்புல்ல நாயனாரும் தங்களின் திருப்பணிகளால் நமக்கு உணர்த்து கின்றனர். இந்த நாயன்மார்களின் வழியை ஏற்று, விளக்கெரிக்க வழியில்லாத பல ஆலயங்களுக்கு எண்ணெய்யும், கோயில் நந்தவனங்களுக்கு உரமிடுவதற்கு வசதியாக பிண்ணாக்கு போன்றவற்றை விலையில்லாமல் வழங்கி, இறைப்பணி செய்து வருகிறார் இளைஞர் ஒருவர். இதுபற்றி அறிந்ததும் அந்த அன்பரைச் சந்தித்தோம்.

சென்னை-பெங்களூரு சாலையில் காஞ்சி புரம் தாண்டி, ராணிப்பேட்டை மாவட்டம் பெரும்புலிபாக்கம் ஊரில் வசிக்கிறார் யுவராஜ். இந்த அடியார் எண்ணெய்க் கடை வைத்துள்ளார். எள், நிலக்கடலை வாங்கி வந்து செக்கில் ஆட்டி எண்ணெய் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். பிழைப்புக்காக மட்டுமன்றி சிவாலயத் தொண்டுக்காகவும் இந்தத் தொழிலை மேற்கொண்டதாகச் சொல்கிறார், யுவராஜ்.

புண்ணிய புருஷர்கள் - 34: ‘ஏற்றுக தீபம்... போற்றுக தெய்வம்!’

காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள - வருவாய் இல்லாத சில கோயில்களுக்கு இந்தத் தொண்டைச் செய்துவருகிறார். தீபம் ஏற்றும் திருத்தொண்டு பற்றி அவரிடம் பேசினோம்.

“செல்வங்கள் யாவும் தீர்ந்த நிலை யிலும் கணம்புல்லை விற்று எண்ணெய் வாங்கி விளக்கேற்றி வழிபட்டார் கணம்புல்ல நாயனார். ஒருநாள் புல் விற்பனை ஆகாத நிலையில், அந்தப் புல்லையே எரித்து தீபம் ஏற்றினார். தொடர்ந்து ஒருநாள் கணம்புல்லும் போதாமல், ஈசன் கருவறையை இருள் சூழ நேர்ந்த வேளையில், தன் தலை முடியையே எரித்துத் தீபமேற்றி ஒளியேற்றி னார் கணம்புல்லர்.

இந்த அரிய தியாகத்தைத் தெய்வச் சேக்கிழார் பெருமான் வியந்து போற்றுகிறார்.

முன்பு திருவிளக்கு எரிக்கும் முறையாமம் குறையாமல்

மென் புல்லும் விளக்கு எரிக்கப் போதாமை மெய்யான

அன்பு புரிவார் அடுத்த விளக்குத் தம் திருமுடியை

என்புருக மடுத்து எரித்தார் இருவினையின்

தொடக்கு எரித்தார் - என்று பாடுகிறார் அவர்!

திருவொற்றியூர் கலிய நாயனாரின் திருப்பணி எத்தகையது தெரியுமா?

புண்ணிய புருஷர்கள் - 34: ‘ஏற்றுக தீபம்... போற்றுக தெய்வம்!’

அவர் தம்முடைய செல்வங் களை எல்லாம் இழந்த நிலையில், தன் மனைவியை விற்றுத் திருப்பணியைத் தொடர எண்ணினாராம். அது இயலாமல் போகவே, விளக்கில் எண்ணெய்க்கு ஈடாக தமது ரத்தத்தையே நிரப்ப எண்ணி கழுத்தை அறுத்துக்கொண்டாராம்.

இப்படி, எந்நிலையிலும் திருவிளக்கிடும் பணியை நிறுத்தக்கூடாது, ஈசன் கோயில் இருள் சூழ்ந்து பாழ்பட்டுப் போகக்கூடாது என்று செயல்பட்டு, திரு விளக்கீடும் பணியின் உன்னதத்தைத் தங்களின் தியாகத்தால் நிலைநிறுத்தியவர்கள் இந்த நாயன் மார்கள்.

நமசிவாயத் திருப்பதிகத்தில்...

இல்லக விளக்கது இருள் கெடுப்பது

சொல்லக விளக்கது சோதி யுள்ளது

பல்லக விளக்கது பலருங் காண்பது

நல்லக விளக்கது நமசி வாயவே!

- என்று விளக்கின் பெருமைகளை விளக் கிச் சொல்கிறார், ஆளுடைய அரசர்.

விளக்கு, உள்ளும் புறமும் நிறைந்து ஒளிவீசிக் கொண்டிருக்க வேண்டும் ஐயா. அற்புதமான இப்பணியில் அடியேனின் பங்கு அற்பமானது. அதில் ஒரு பெருமையும் இல்லை.

`திருவிளக்கிட்டாரை தெய்வம் அறியும்; நெய் வார்த்து உண்டாரை நெஞ்சு அறியும்' என்பார்கள். ஸ்வாமிக்கு விளக்கிடுவது புண்ணிய காரியம். விளக்கு எரிந்த வீடு வீணாகிப் போகாது; விளக்கேற்றி வழிபட்ட வேண்டுதல் தள்ளிப் போகாது என்றும் அன்பர்கள் சொல்வது உண்டு. இருளை அகற்ற மட்டுமல்ல; இதயக் குழப்பங்களை அகற்றவும் விளக்கொளி பயன்படும்.

விளக்கொளிக்குத் தன்னைச் சுற்றியுள்ள தேவையற்ற நெகட்டிவ் எனர்ஜியை வீழ்த்தும் சக்தி உண்டு. இதனால் நம்மைச் சுற்றிப் பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கிறது. அதனால் நம் சுற்றுப்புறம் தெளிவாகவும் பலத்தோடும் மாறும். நம் ஆதார சக்கரங்களில் மூலாதாரமும் ஸ்வாதிஷ்டானமும் விளக்கு ஏற்றுவதால் வலிமை பெறுகின்றன என்று யோக சாஸ்திரம் கூறுகிறது. விளக்கின் ஒளியில் தியானம் செய்தால் பலன் அதிகரிக்கும். எத்தனை மின்சார விளக்குகள் எரிந்தாலும் ஓர் அகல் விளக்கின் ஒளியில் காணும் தெய்வ வடிவத்தின் அழகு அலாதியானது அல்லவா!

புண்ணிய புருஷர்கள் - 34: ‘ஏற்றுக தீபம்... போற்றுக தெய்வம்!’

விளக்குகூட எரிய வசதியில்லாத நிலையில் ஆலயங்கள் இருக்கக்கூடாது. இந்த நிலை ஊருக்கு நல்லதல்ல. ஊரில் ஆலயம் ஏதும் பாழ்ப்பட்டு கிடந்தால், உடனே ஊர் கூடி சுத்தப்படுத்துங்கள். பெரிதாகத் திருப்பணிகள் செய்ய முடியாவிட்டாலும், தினமும் இரண்டு வேளை கொஞ்சம் பூ சாத்தி விளக்கேற்றி வழிபடுங்கள். நிச்சயம் ஊரும் உங்கள் வீடும் சுபிட்சம் பெறும்.

எனக்கு ஊர் ராணிப்பேட்டை மாவட்டம் அவளூர். பத்தாம் வகுப்பு முடித்து ஐ.டி.ஐ படித்தேன். வேலை எதிலும் மனம் செல்ல வில்லை. எப்போதும் உழவாரப்பணி, ஆலய தரிசனம் என்றே சுற்றி வந்தேன். என் மனைவி ஜெயலட்சுமியும் என்னைப்போலவே சிவப்பணியில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். ஆலய கைங்கர்யத்துக்கு எண்ணெய் வழங்கவென்றே இந்தச் செக்குக் கடையை மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் தொடங் கினேன். எல்லாம் சிவன் கொடுத்தது எனும் போது, எதை யாருக்கு நாம் கொடுக்க முடியும்! 32 வயதாகிறது, 10 ஆண்டுகளாக சிவத்தொண்டு செய்து அடியார் பெருமக்களின் திருப்பாத நிழலில் வாழ்ந்து வருகிறேன். ஈசன் அருளால் எங்களுக்கு ஒரு குறையுமில்லை'' என்றவர் தொடர்ந்தார்.

``ஈசனின் பெருங்கருணைக்குச் சான்றாக ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் உண்டு ஐயா!

எனக்கு ஒரு பெண் பிள்ளை - மூத்தவள், பெயர் உத்ரா. ஒன்றாம் வகுப்பு படிக்கிறாள். இளையவன் தமிழாகரன் இரண்டு வயதாகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உத்ராவுக்கு உடல் நலம் சரியில்லாமல் போய்விட்டது காஞ்சியில் மருத்துவம் பார்த்தும் சரியாகாமல், சென்னை பேபி ஹாஸ்பிடலில் சேர்த்தோம்.

புண்ணிய புருஷர்கள் - 34: ‘ஏற்றுக தீபம்... போற்றுக தெய்வம்!’

காரணம் கண்டுபிடிக்க முடியாத வியாதி என்றார்கள். ரத்த அணுக்களின் அளவு 12,000 மட்டுமே உள்ளது; பிழைப்பது கடினம் என்றார்கள். தவித்துப் போய்விட்டோம். நான் ஈசனை மட்டுமே நம்பினேன். ‘நீ கொடுத்த பிள்ளை. எது நடந்தாலும் உன்னிடமே தஞ்சம் அடைவேன். கைவிட்டுவிடாதே’ என்று மனத்துக்குள் கதறினேன். மூன்றாம் நாள் மருத்துவர்கள் சோதித்துவிட்டு ‘ஒரு பிரச்னை யும் இல்லை, ரத்த அணுக்களின் அளவும் அதிகரித்துள்ளது. இது ஆச்சர்யமான விஷயம்' என்றார்கள். ஆனால் எனக்கு எந்த ஆச்சர்யமும் இல்லை. ஈசனிடம் விட்டுவிட்ட பிறகு எதுதான் நடக்காது... சொல்லுங்கள்!

அன்றிலிருந்து இன்னும் அதிகமாக ஈசனைப் பற்றிக்கொண்டேன். அவன் தன் அருள் கரத்தால் என்னைத் தாங்கிப் பிடிக்கிறான்; அடியார்கள் வடிவில் வழிநடத்துகிறான். இது போதும். என்னால் இயன்ற காரியங்களை ஸ்வாமிக்காகச் செய்கிறேன். அடியார் பணி; ஆண்டவன் பணியே முதலில். மற்றபடி நான் எதையும் கொடுப்பதில்லை, பெறுவதும் இல்லை. சிவம் கொடுக்கிறது; அதுவே எடுத்தும் கொள்கிறது. நீங்களூம் தீபமேற்றி வழிபடுங்கள் உங்கள் வீட்டிலும் மனத்திலும் இன்ப ஒளி சூழத் தொடங்கிவிடும்'' என்றார் யுவராஜ்.

விளக்கின் ஒளியில் தொலைந்தது கிடைக்கும்.அடியார் யுவராஜும் ஒரு விளக்குதான். பக்தியைத் தொலைத்தவருக்கு அவரின் பணி வழிகாட்டும்; வாழ்வில் ஒளி ஏற்றும்!

- அடியார்கள் வருவார்கள்...

மகாலட்சுமி விரதம்!

புண்ணிய புருஷர்கள் - 34: ‘ஏற்றுக தீபம்... போற்றுக தெய்வம்!’

புரட்டாசி மாத வளர் பிறை அஷ்டமி முதல் 16 நாள்கள் மகாலட்சுமிதேவியைப் பிரார்த் தித்து, விரதம் கடைப்பிடிப்பது அற்புதமான வழிபாடு ஆகும். இந்த 16 நாள்களும் தினமும் பக்தியோடு விரதம் இருந்து, கனகதாரா ஸ்தோத்திரம் முதலான திருமகள் துதிப்பாடல்களைப் படித்து திருமகளை வழிபட்டு வந்தால், நம் வறுமைகள் நீங்கும்; வாழ்க்கை வளம் பெறும். தடைகள் நீங்கி வீட்டில் மங்கல காரியங்கள் கூடிவரும்.

- எம்.வளர்மதி, தூத்துக்குடி

வீட்டில் வில்வ மரம்...

புண்ணிய புருஷர்கள் - 34: ‘ஏற்றுக தீபம்... போற்றுக தெய்வம்!’

சார்ங்கதர பத்ததி எனும் ஒரு நூல் உண்டு. அதில் ‘உபவன வினோதம்’ என்ற பகுதியில் நந்தவனத்தை உருவாக்கும் நடைமுறை இடம்பெற்றுள்ளது. ‘வீட்டில் தோட்டம் எங்கு இருக்க வேண்டும், என்னென்ன மரங்களை நடலாம், வளர்க் கும் முறை, பயன்பாடு என்று அனைத்தும் உள்ளன. அவற்றில் வில்வ மரம் குறித்த விவரமும் உண்டு.

தென்னை, மா, பலா, வேம்பு போன்ற மரங்களின் வேர்கள் வீட்டைத் தாக்காத அளவில் எட்ட வளர்ப்பது அவசியம்.

வில்வம், வேப்ப மரம் போன்றவை மற்ற மரங்களை புழு- பூச்சி தாக்காமல் காப்பாற் றும் ஆற்றல் படைத்தவை. ஆகையால் சுகாதாரக் கண்ணோட்டத்தில் அவை இருப்பது நல்லதே. வில்வத்தில் அத்தனை உருப்படிகளும், மருத்துவ குணம் நிறைந்தவை. வீட்டில் அதை வளர்க்கலாம். வில்வம் மகாலட்சுமி கடாட்சத்தையும் பெற்றுத் தரும்.

- கே.சங்கர், சென்னை-44