Published:Updated:

புரட்டாசி மாவிளக்கு

புரட்டாசி மாவிளக்கு
பிரீமியம் ஸ்டோரி
புரட்டாசி மாவிளக்கு

புரட்டாசி மாவிளக்கு

புரட்டாசி மாவிளக்கு

புரட்டாசி மாவிளக்கு

Published:Updated:
புரட்டாசி மாவிளக்கு
பிரீமியம் ஸ்டோரி
புரட்டாசி மாவிளக்கு

சூரியன் கன்னி ராசியில் பிரவேசிக்கும் மாதம் புரட்டாசி. இந்த மாதத்தில் பௌர்ணமிக்குப் பிறகு வருகிற பிரதமை முதல் அமாவாசை வரை மஹாளய பட்சம் என்பார்கள். இந்த நாள்கள் பித்ருக்கள் வழிபாடுகள் மற்றும் பித்ரு தேவதைகளுக்கு உரிய புண்ணிய காரியங்களைச் செய்வதற்கு ஏற்ற நாள்கள் என்கின்றன சாஸ்திரங்கள்.

புரட்டாசி மாவிளக்கு
புரட்டாசி மாவிளக்கு


அமாவாசையை அடுத்து வரும் நாள்களில் நவராத்திரி கொண்டாடப் படுகிறது. அந்த ஒன்பது நாள்களும் தாயார் மகாலட்சுமி ஆகிய பெரிய பிராட்டியாருக்கு உகந்த நாள்கள் என்பார்கள் வைணவர்கள். திருமணமாகாத பெண்கள், இந்தப் புரட்டாசி மாத நாள்களில் தினமும் திருமாலை வழிபட்டு வந்தால், விரைவில் நல்ல வரன் அமைந்து கல்யாண வரம் பெறுவார்கள் என்பது உறுதி.

புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் அதிகாலையில் குளித்து, பூஜையறையைத் தூய்மையாக மெழுகிக் கோலமிட்டு, பூ வைத்து, பெருமாளின் திருவுருவத்துக்குப் பொட்டிட்டு, பூக்களால் அலங்கரித்து வைக்க வேண்டும். பிறகு சுத்தமான பச்சரிசியை சன்னமாக இடித்து மாவெடுத்து, அத்துடன் வெல்லம் கலந்துப் பிடித்துவைக்க வேண்டும்.

இதில் திரி-நெய் இட்டு விளக்கேற்றி, மலர், துளசி, அட்சதை கொண்டு பெருமாளை அர்ச்சித்து, அவரின் திருநாமங்களை மனதாரச் சொல்லி வழிபட வேண்டும். அப்படிச் செய்தால் அந்த இடத்தில் சாட்சாத் பெருமாளே எழுந்தருள்வார் என்பது ஐதிகம்.

ஆண்டின் எல்லா நாள்களிலும் திருப்பதியில் இப்படி ஒரு வழிபாட்டினை, பல பெண்கள் கோயிலின் பல இடங்களில் செய்வதைப் பார்க்கலாம். திருமண வரம் பெற இது அற்புதமான வழிபாடு என்று பெரியோர்கள் கூறுவார்கள். புரட்டாசி மாதத்தில் காலை நேரத்தில், வீடுகளில் திருவிளக்கு மாவு கொண்டு பெருமாளை வழிபட்டுவிட்டு, மாலையில் கோயிலுக்குச் சென்று அவரைத் தரிசித்தால், மிகவும் சிறப்பு என்கின்றனர்.

சென்னை, திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி ஆலயத்தில், புரட்டாசி சனிக் கிழமைகளில், நரசிம்மர் திருவீதி உலா நடைபெறுவது விசேஷம். அவ்வேளையில் மாவிளக்கு பூஜை செய்வது சாலச் சிறந்தது என்பார்கள் இப்பகுதி பக்தர்கள்.

புரட்டாசி சனிக்கிழமை மட்டுமன்றி, எல்லா சனிக்கிழமைகளிலும் வெல்லம் கலந்த அரிசி மாவில் நெய்விளக்கிட்டு, நாராயணனை வழிபடுவதால் இல்லத்தில் சகல மங்கலகாரியங்களும் ஸித்திக்கும்; வளங்கள் பெருகும்!

- பா.சௌம்யா, கடலூர்