காமாட்சி என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது கரும்பு வில்தான். அம்பிகையின் நான்கு திருக்கரங்களில் கரும்பு வில், புஷ்ப பாணங்கள், பாசம், அங்குசம் இருப்பதை நாம் தரிசித்திருப்போம்.

அம்பிகையின் கரத்தில் இருக்கும் கரும்பு வில் மற்றும் புஷ்ப பாணங்கள், நம்முடைய மனோவிருத்தியையும் இந்திரிய விவகாரங்களையும் அடக்குபவை என்பது காஞ்சி மகா ஸ்வாமிகளின் திருவாக்கு.

காமாட்சியின் கரும்பைப் பற்றிச் சொல்லும்போது, எனக்கும் கரும்புடன் தொடர்பு ஏற்பட்ட ஒரு சம்பவம் மனத் திரையில் காட்சியாக விரிகிறது. அந்தத் தொடர்பிலும் காஞ்சி மஹாஸ்வாமிகளின் அனுக்ரஹம் இருக்கிறது என்பது கூடுதல் விசேஷம்.

நாங்கள் குடும்பத்துடன் ஹைதராபாத்தில் வசித்த போது நடந்த சம்பவம் அது. நான் அடிக்கடி அங்கே ஸ்கந்தகிரி முருகன் கோயிலுக்குச் செல்வது வழக்கம். அப்படி ஒருநாள் நான் கோயிலுக்குச் சென்றபோது நல்ல கூட்டம்.

அன்றைக்கு விசேஷம் எதுவும் இல்லை என்பதால், அவ்வளவு கூட்டத்திற்கான காரணம் எனக்குப் புரியவில்லை.சற்றைக்கெல் லாம், ‘ஹர ஹர சங்கர; ஜய ஜய சங்கர’ என்ற கோஷம் கேட்டது. கோயிலில் குழுமியிருந்த பக்தர்கள், ‘பெரியவா வந்துட்டா, பெரியவா வந்துட்டா’ என்று பக்திப் பரவசத்துடன் பேசிக் கொண்டனர். அப்போதுதான் கூட்டத்துக்கான காரணம் எனக்குப் புரிந்தது. அருகிலிருந்த ஒருவர் மற்றவரிடம், ‘`இந்தக் கோயில்ல காமாட்சி அம்பாளைப் பிரதிஷ்டை செய்யப் போறாளாம். அதுக்குத்தான் ஆலோசனை சொல்லி அனுக்ரஹம் பண்றதுக்காக பெரியவா வந்துருக்கா’’ என்று சொல்லிக் கொண்டிருந் ததையும் என்னால் கேட்க முடிந்தது.

ஆலயத்துக்குள் பிரவேசித்த மஹாஸ்வாமிகள், எல்லோரையும் தம்முடைய கனிவான பார்வையினால் கடாட்சித்துவிட்டு, சந்நிதிக்குச் சென்று தரிசனம் முடித்துக்கொண்டு மண்டபத்துக்கு வந்து அமர்ந்தார். தமக்குச் சற்றுத் தொலைவில் இருந்த ஒருவரை அருகே வருமாறு சைகையால் அழைத்தார். அவரும் அருகில் வந்து தன் கையில் சுருட்டி வைத்திருந்த ஒரு தாளை மஹா ஸ்வாமிகளிடம் தந்தார்.

அதை வாங்கிப் பார்த்த பெரியவா, அந்தத் தாளில் சில இடங்களைக் குறிப்பிட்டுக் காட்டி, அந்த நபரிடம் சைகையினால் ஏதோ கூறிக் கொண்டிருந்தார். அவர்தான் அம்பாளின் விக்கிரகத்தை வடிக்கப்போகும் சிற்பி என்று தெரிந்துகொண்டேன். அன்றைக்கு பெரியவா மௌன விரதமாம்! இப்படி அடிக்கடி மௌன விரதம் இருப்பது அவருடைய வழக்கம்தான். அதனால்தான் சைகையிலேயே விளக்கிக்கொண்டிருந்தார்.

அந்தத் தருணம் பார்த்து திடீரென்று வீசிய பெருங்காற்றில் பெரியவா கையில் வைத்திருந்த தாள் பறந்து வந்து என் தோள் மீது விழுந்துவிட்டது. நான் பரவசத்தில் சிலிர்த்துப் போனேன். இருக்காதா பின்னே... மகானின் திருக்கரங்கள் ஸ்பரிசித்த தாள் அல்லவா அது! அதை மெள்ள எடுத்துப் பார்த்தேன். அந்த ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட இருக்கும் காமாக்ஷி சித்திர வடிவில் சிரித்த முகத்துடன் காட்சி தந்தாள்.

அதற்குள் அருகில் வந்த சிற்பியிடம் நான் அந்தத் தாளைக் கொடுத்தேன். சிற்பியும் பெரியவாளிடம் கொண்டு சென்று கொடுத்தார். அதை வாங்கிக் கொண்ட பெரியவா, அந்தத் தாளில் எதையோ சிற்பியிடம் சுட்டிக் காட்டியவர் என்னையும் காட்டி ஏதோ சைகை செய்தார். திரும்பவும் என்னிடம் வந்த சிற்பி, ‘`கோயிலில் பிரதிஷ்டை செய்யப்போகும் அம்பாளுக்கு வெள்ளியினால் கரும்பு வில் செய்து தரவேண்டியது உங்கள் பொறுப்பு என்று பெரியவா அனுக்ரஹம் செய்திருக்கிறார்’’ என்று கூறினார்.

அதைக் கேட்டதும் எனக்கு ஒருபுறம் அளவற்ற மகிழ்ச்சியாக இருந்தாலும், அதைவிட அதிக தயக்கமும் படபடப்பும் ஏற்பட்டன. காரணம், இது அம்பாள் காரியம்... ஆசார அனுஷ்டானங்களில் எல்லாம் மிகக் கவனமாக இருக்கவேண்டும். எங்கள் குடும்பம் அப்படியல்லவே. அப்படியிருக்க, என்னால் எப்படி இந்தத் தெய்விகப் பணியில் ஈடுபட முடியும்?!

என் தயக்கத்தை சிற்பியிடம் தெரிவித்தேன். நான் சிற்பியிடம் என்ன கூறுகிறேன் என்பது அந்த மகானுக்குத் தெரியாதா என்ன? அவர் என்னைக் கனிவுடன் பார்த்து, சைகையினால் நான்தான் அந்தப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று கூறினார். அப்போதும் என் படபடப்பு அடங்கவில்லை. தயக்கமும் விலகவில்லை. ஆனால் அந்தச் சிற்பி விடவில்லை.

‘பெரியவா சொல்லிட்டா வேற அப்பீலே இல்லை. நீங்கதான் அம்பாளுக்கு வெள்ளியினால் கரும்பு வில் செய்து தரவேண்டும்’ என்று சொல்லிவிட்டு, பெரியவாளிடம் நகர்ந்தார். ஆனாலும், நான் பெரியவாளிடம் சென்று என்னுடைய கருத்தை அதற்கான காரணத்தை மெள்ள முணுமுணுப்பான குரலில் கூறினேன். அதைக் கேட்டு மென்மையாக சிரித்த பெரியவா தொடர்ந்து, காமாட்சி கையில் இருந்த கரும்பைக் காட்டிவிட்டு, பிறகு ஒரு கையால் என்னைக் காட்டி, மற்றொரு கையால் தொட்டில் ஆட்டுவதைப் போல் சைகை செய்தார். மறுபடியும் என்னைச் சுட்டிக் காட்டினார்.

எனக்கு மெய்சிலிர்த்தது. ஆம், அவர் சொல்ல வந்த விஷயம் எனக்குப் புரிந்துவிட்டது.

நான் பிறந்தது ஒரு பொங்கல் தினம்தான். அதைத்தான் கரும்பு, தொட்டில் இவற்றுடன் என்னையும் சுட்டிக்காட்டி உணர்த்தினார். பொங்கல் தினத்தில்தானே கரும்புக்கு முக்கியத் துவம் கிடைக்கும். அந்த வகையில், கரும்புக்கும் எனக்கும் சம்பந்தம் இருக்கிறது என்பதை எனக்கு உணர்த்தியதைப் புரிந்து கொண்டு மெய்சிலிர்த்துப் போனேன். மேலும் அம்பிகையின் சித்திரத்தைக் காட்டி, ‘இது என் கட்டளையல்ல; காமாட்சியின் கட்டளை தெரியுமோ' என்பது போல் சைகைக் காட்டி அருளினார் மஹாபெரியவா.

காமாட்சி என்னைத் தேடி வந்ததையே அவர் அப்படிக் குறிப்பிட்டார். நானும் சம்மதித்துவிட்டேன்.

தொடர்ந்து, தன்னுடைய சுட்டுவிரலையும் நடுவிரலை யும் பின்னிப் பிணைத்துக் காட்டி, கரும்பின் இரண்டு தோகைகள் எப்படி இருக்கவேண்டும் என்பதையும், ஐந்து விரல்களைக் காட்டி அந்தக் கரும்பு ஐந்து கணுக்களுடன் இருக்கவேண்டும் என்பதையும் எனக்கு உணர்த்தினார். மேலும், கரும்பு வில் அம்பாளின் தலைக்கு மேல் இருக்கக்கூடாது என்றும் அதன் உயரத்தையும் குறிப்பால் உணர்த்திவிட்டார்.

எனக்குக் கிடைத்த அரிய தெய்விக வாய்ப்பை எண்ணி எண்ணிச் சிலிர்த்தேன். விரைவில் மஹாபெரியவாளின் அருளால் வெள்ளிக் கரும்பு தயாரானது. அதை எடுத்துச் சென்று கோயிலில் ஒப்படைத்தேன்.

சில மாதங்களில் அம்பாள் விக்கிரகம் தயாராகி பிரதிஷ்டைக்கும் நாள் குறித்தாகிவிட்டது. அன்றைக்குப் பார்த்து நான் முன்கூட்டியே திட்டமிட்டபடி, என் மாமியாரையும் மாமனாரையும் தர்மஸ்தலாவுக்கு அழைத்துச் செல்லவேண்டி இருந்தது.

கோயிலில் அம்பாள் பிரதிஷ்டை செய்யப் படுவதைக் காணக் கொடுத்து வைக்கவில்லையே என்ற ஏக்கம் எனக்கு உள்ளூர இருக்கத்தான் செய்தது.மேலும் நான் இல்லாததைப் பார்த்து பெரியவா என்ன நினைத்துக்கொள்வாரோ என்ற படபடப்பும் இருந்தது.

ஊருக்குத் திரும்பியதும் கோயிலுக்குச் சென்று கையில் வெள்ளிக் கரும்புடன் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த அம்பாளை மனம் குளிர தரிசித்தேன். அப்போது கோயில் நிர்வாகிகள் என்னிடம், பெரியவா என்னைப் பற்றிக் கேட்ட தாகவும், நான் மாமியார் மாமனாரை தர்மஸ்தலா வுக்கு அழைத்துச் சென்றதைப் பற்றிக் கேள்விப்பட்டு, உத்தமமான காரியம் என்று சொல்லி என்னை ஆசீர்வதித்து அனுக்ரஹித்ததாகவும் தெரிவித்தனர். நான் பூரித்துப் போனேன்!

எனக்கு இப்படி ஒரு பெரும் பாக்கியம் எப்படிக் கிடைத்தது என்று நான் பலமுறை யோசித்துப் பார்த்ததுண்டு. அப்படி ஒருமுறை யோசித்தபோது, எங்கள் முன்னோர் பற்றி செவிவழிச் செய்தியாக நான் கேள்விப்பட்ட ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது.

மஹா ஸ்வாமிகள் அடிக்கடி கலவைக்கு விஜயம் செய்வது உண்டு. அங்கு 66 மற்றும் 67-வது ஆசார்யர்களின் அதிஷ்டானங்கள் அமைந்திருக்கின்றன. அப்படி ஒருமுறை அவர் விஜயம் செய்திருந்த போது ஒரு வீட்டின் திண்ணையில் எழுந்தருளினார். அந்தச் சூழலும் இடமும் அவருக்குப் பிடித்துவிடவே, அங்கிருந்தவர்களிடம் அந்த இடம் யாருடையது என்றும் மடத்திற்குத் தர முடியுமா என்றும் விசாரித்துச் சொல்லும்படிக் கூறினார். மகான் கேட்டால் மறுப்பார் உண்டோ?

இடம் முறைப்படி மடத்திடம் ஒப்படைக்கப் பட்டது. பிறகு மகா ஸ்வாமிகள் அங்கு கோபூஜை, கஜபூஜை, அசுவபூஜை போன்ற பூஜைகளைச் செய்து பல மாதங்கள் எழுந்தருளி இருந்தாராம்.

அந்த இடம் எங்கள் முன்னோர் ஒருவருக்குச் சொந்தமானது என்பதுதான் விசேஷம். அதன் மூலம் எனக்குக் கிடைத்த பூர்வபுண்ணியம்தான் மகா ஸ்வாமிகளின் அனுகிரகமும் காமாக்ஷியின் திருவருளும் எனக்குக் கிடைக்கும்படிச் செய்தது.

தொகுப்பு: எஸ்.கண்ணன் கோபாலன்

`காமாட்சி அம்பாளும் கரும்பு வில்லும்'

‘`அம்பாள் கையில் இருக்கும் கரும்பு வில் மனஸ் என்ற தத்துவத்தைக் குறிப்பதாகும். மதுரமான மனம் படைத்த அம்பாள், நம்முடைய மனங்களையெல்லாம் இந்த வில்லைக் காட்டி வசப்படுத்திவிடுகிறாள். அவளுடைய ஐந்து புஷ்ப பாணங்களும் நம் ஐம்புலன் களை ஆகர்ஷித்துச் செயலற்றுப் போகும்படிச் செய்வதற்காக ஏற்பட்டவை.

‘மனோ ரூபேஷு கோதண்டா - பஞ்ச தன்மாத்ர ஸாயகா’ என்று, இதையே லலிதா சஹஸ்ரநாமம் கூறுகிறது. நம்முடைய மனோவிருத்தியும் இந்திரிய விவகாரங்களும் அடங்குவதற்கே பராசக்தியானவள் காமாக்ஷியாகி கரும்பு வில்லும் புஷ்ப பாணமும் தாங்கி வந்திருக்கிறாள்.'

- காஞ்சி மகா ஸ்வாமிகள்