ஆதெள ராம தபோ வனாதி கமனம் ஹத்வா ம்ருகம் காஞ்சனம்

வைதேஹீ ஹரணம் ஜடாயுமரணம் சுக்ரீவ சம்பாஷணம் வாலீ நிக்ரஹணம்

சமுத்ர தரணம் லங்காபுரி தாஹனம் பஸ்சாத் ராவணகும்பகர்ண ஹனனம் ஏதத்தி  ராமாயணம்

ராமாயண காவியத்தின் மிக முக்கியமான ஒன்பது கட்டங்களைச் சொல்லும் ஏகச்லோகீ ராமாயணம் இது. இந்த வரிகளைத் தினமும் படித்து வாருங்கள்; தினமும் ராமாயண பாராயணம் செய்த பலன் கிடைக்கும்; குடும்பத்தில் சகல வளங்களும் பொங்கிப் பெருகும்!

'ராம' என்ற திருநாமமே சைவ-வைணவ ஒற்றுமைக்கு சிறப்பான அடையாளமாகும். எட்டெழுத்தான ஓம் நமோ நாராயணாய என்பதிலிருந்து `ரா', நமசிவாய என்ற ஐந்தெழுத்திலிருந்து `ம', இணைத்து உருவானதே ராம நாமம். ராமனை வணங்கினால் திருமால், ஈசன் இருவரை வணங்கிய புண்ணியமும் கிட்டும்.

காசி விஸ்வநாதர் கோயிலில் தினமும் மாலை வழிபாட்டின்போது, அதாவது சப்தரிஷி பூஜையின்போது, வில்வ தளங்களில் சந்தனத்தால் ராம நாமம் எழுதி, அவற்றை விஸ்வநாதருக்குச் சமர்ப்பிக்கிறார்கள். இப்படி செய்வதால் காசிக்கு வரும் சகலரின் பாவங்களும் நீங்குகின்றன என்பது ஐதிகம்.

ராமனே புருஷோத்தமன் என்ற புகழைப் பெற்றவர். அணில் தொடங்கி குகன் (ஆண்), ஜடாயு (பறவை), சுக்ரீவன் (வானர அரசன்), சபரி (பெண்), விபீஷணன் (அசுரர் குலம்), அகலிகை (ரிஷி பத்தினி), வருணன் (தேவர்) என சகல குலத்தவரையும் அரவணைத்து அருள் செய்தவர்.

ராம நாமம் ஒன்றே தாரக மந்திரம் எனப்படுகிறது. ராம நாமத்தை மட்டும் எப்படி சொன்னாலும் மோக்ஷத்தை அளித்துவிடுமாம். ரத்னாகரன் என்ற கொள்ளையன், நாரதரின் வழிகாட்டலின்படி, `மரா மரா' என்று ஜபித்தே வால்மீகி ரிஷியானார் என்கிறது புராணம்.

`சஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே' என்கிறது விஷ்ணு புராணம். ராம நாமத்தை ஒருமுறை ஜபிப்பதால் பரம்பொருளின் ஆயிரம் திவ்ய நாமங்களை ஜபிப்பதின் பலன் கிட்டிவிடுகிறதாம். இதை ஈசன் சக்திதேவியிடம் விளக்குவதாக புராணம் கூறுகிறது.

எல்லா மந்திரங்களையும் உச்சரிக்க மனம், உடல் இரண்டும் குறிப்பிட்ட நியதிப்படி தியான நிலையில் இருந்தபடியே உச்சரிக்க வேண்டும். ஆனால் ராம நாமம் மட்டும் எந்த வேலையைச் செய்யும்போதும் சொல்லலாம். அதாவது ராம நாமம் சொல்ல மனம் மட்டுமே போதும் என்கின்றன சாஸ்திரங்கள்.

காஞ்சி ராமகிருஷ்ண யதீந்திரர் எனும் மகான் தியாகய்யரை ஆசிர்வதித்து ``நீ உன் வாழ்நாளில் 96 கோடி முறை ராமநாமத்தை ஜபித்தால், ராமரின் திவ்ய தரிசனத்தையும் திருவடிப் பேறையும் பெறுவாய்'' என்றார். அப்படியே 21 ஆண்டுகளில் ராம நாமாவளி ஜபம் செய்து பலமுறை ஸ்ரீராம தரிசனம் பெற்றார் தியாக பிரம்மம்.

ராமாயணத்தைப் பாராயணம் செய்யும் முன்பு பிரசங்கம் செய்பவர் முன்னே ஒரு ஆசனம் இட்டு அதன் முன்பு கோலமிட்டு, தூபம், தீபம் ஏற்றி வைப்பது வழக்கம். ராமாயண பாராயணத்தை அனுமன் வந்து கேட்பார் என்பதே ஐதிகம்.

ராம நாமம் சொல்லும்போது மனம் அமைதியாகிறது; அதனால் உடல் குளிர்ச்சி அடைகிறது. ரத்த ஓட்டம் சீராகிறது. சுரப்பிகள் சரியாக வேலை செய்கின்றன. அதனால் எண்ண அலைகளில் நேர்மறை சிந்தனைகள் தோன்றி நோய்கள் கட்டுப்படுகின்றன. ஆரோக்கியம் மேம்படுகிறது என்கின்றன ஞானநூல்கள்.

போதேந்திர ஸ்வாமிகள் காஞ்சி காமகோடி பீடத்தின் 59-வது பீடாதிபதி. ராம நாம நூல்களை உலகுக்கு அளித்தவர் இவர். ராம நாமத்தை ஒருமுறை சொல்லி சகல தோஷங்களையும் போக்கிக்கொண்ட ஒரு பெண்மணியிடம் பிக்ஷை வாங்கி ராம நாம மகிமையை உணர்ந்தாராம் இந்த மகாஞானி.

கௌசல்யா திருமகனான ராமருக்கு `ராமன்' என்று திருநாமம் வைத்தார்களே தவிர, `ராம ராம' என்பது ரிஷிகள் தோன்றிய காலம் முதல் உபநிஷத்தில் சொல்லப்பட்ட திருநாமமாக உள்ளது என்பார்கள். `ராமேதி ராமா' என்றால் ஆனந்தத்தை எல்லாம் அளிப்பவர் என்று பொருள்.

ராம நாமத்தால் உயர்ந்த ஞானியர் நிலையை எட்டியவர்கள் பலபேர். ராமானந்தர், கபீர்தாசர், சமர்த்தராமதாசர், தியாகபிரம்மம், பத்ராச்சல ராமதாசர், யோகி ராம்சூரத்குமார் போன்றோர் ஸ்ரீராமநாமத்தால் பேறு பெற்றவர்கள்.