
இது தொடர் பாக விருபாக்ஷ குகையில் தான் இருந்தபோது நிகழ்ந்த சம்பவத்தை பகவான் ரமணர் கூறியிருக்கிறார்.
`ஐம்புலக் கள்வர் அகத்தினிற் புகும்போது
அகத்தில் நீ இலையோ அருணாசலா!
அருணாசல அக்ஷரமண மாலை எனும் தாம் அருளிய பாடலில்தான் இப்படிப் பாடியிருக்கிறார், ஸ்ரீரமண மகரிஷி. ஆம்! ஐம்புலன்களையும் அவர் கள்வர்களோடு ஒப்பிடுகிறார். புலன்கள் ஆசையைத் தூண்டும் அந்த ஆசையை நிறைவேற்ற முயற்சி செய்ய கூடாது. ஆசையை அடக்கினால்தான் மன சாந்தி கிடைக்கும்.
இது தொடர் பாக விருபாக்ஷ குகையில் தான் இருந்தபோது நிகழ்ந்த சம்பவத்தை பகவான் ரமணர் கூறியிருக்கிறார்.
விருபாக்ஷ குகையில் அவர் தங்கியிருந்தபோது பிக்ஷைக்காக அடியார் ஒருவர் ஊருக்குள் சென்று அனைவருக்கும் உணவு கொண்டு வருவார். அந்த ஆகாரத்தில் சில நேரம் தொட்டுக்கொள்ள எதுவும் இருக்காது. சில நேரம் உணவு அனைவருக்கும் போதுமானதாகவும் இருக்காது.

எனவே, பிக்ஷையாக வந்த உணவை ஒன்றாகக் கலந்து பிசைந்து, வெந்நீர் சேர்த்துக் கஞ்சியாக்கி எல்லாருக்கும் தருவார். இந்தக் கஞ்சியில் உப்புச் சேர்த்தால் சுவையாக இருக்கும். உப்பும் வெளியில் கேட்டுத்தான் வாங்கவேண்டும். அந்தச் சூழலில் ரமணர் கூறினாராம்...
‘‘உப்பு வாங்கினால், பின் ஒருநாள் பருப்பு கேட்கத் தோன்றும். கேட்பதை எல்லாம் மக்கள் கொடுப்பார்கள் என்பது தெரியும். அதன் பின்னர் எது கேட்டாலும் கிடைக்கும் என்பதால், பாயசம் குடிக்கத் தோன்றும். இப்படி இந்த ஆசைக்கு ஒரு முடிவே இல்லாமல் போய் விடும். ஆகையால், எவரிடமும் எதுவும் கேட்காமல் இந்தக் கஞ்சியைக் குடித்துத் திருப்தி அடைவோம்!’’ என்றார் பகவான்.
மேலும் அவர் சொன்ன அறிவுரை:
``நம்முடைய தேவைகளுக்கும் ஆசை களுக்கும் முடிவு என்பதே இல்லை என்பதை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவ்வப்போது ஏற்படும் ஆசைகளுக்கு உடனுக்குடன் முடிவு கட்டிவிட வேண்டும். அவற்றை நிறைவேற்ற முயற்சி செய்ய கூடாது. அப்போதுதான் மன சாந்தி கிடைக்கும்!’’
- ராணிமணாளன், கிருஷ்ணகிரி