Published:Updated:

கும்பகோண பட்டாபிஷேகம்!

ராமாயணம்
பிரீமியம் ஸ்டோரி
ராமாயணம்

ராமாயணம்

கும்பகோண பட்டாபிஷேகம்!

ராமாயணம்

Published:Updated:
ராமாயணம்
பிரீமியம் ஸ்டோரி
ராமாயணம்

தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் சிறப்பிடம் பெறுபவர் தஞ்சை ரகுநாத நாயக்கர். இவர் ராம பக்தியில் மூழ்கித் திளைத்தவர். தினந்தோறும் பண்டிதர்களைக் கொண்டு ராமாயணம் படிக்கச் செய்து மெய்ம்மறந்து கேட்பாராம். பின்னர், அந்தப் பண்டிதர்களுக்குத் தன் கையாலேயே வெற்றிலை மடித்துக் கொடுத்து உபசரிப்பாராம்.

ராமாயணம்
ராமாயணம்

இவரது வாழ்விலும் ராமாயணம் போலவே ஒரு சம்பவம் நிகழ்ந்தது. கூனியின் சூழ்ச்சியால் ராமருக்குத் துன்பம் விளைந்தது போன்றே, விஜயநகரப் பேரரசிலும் ஜக்கராயன் என்பவனால் கலகம் ஏற்பட்டு ராஜ குடும்பத்தினர் பலர் அழிந்தனர். அப்போது, தஞ்சை ரகுநாத நாயக்கன் கலகத்திலி இருந்து விஜயநகர அரச குலத்தோரைக் காக்க முற்பட்டான்.

இந்த நிலையில், விஜயநகரப் பேரரசின் விசுவாசியான யாசம நாயக்கர் என்னும் அமைச்சர், சிறையில் இருந்த விஜயநகரப் பேரரசின் வாரிசான ராமன் எனும் கைக் குழந்தையைக் காப்பாற்றி எடுத்து வந்து வளர்த்து ஆளாக்கினார். பின்னர் முறைப்படி அவனை விஜயநகர சாம்ராஜ்ஜியத் தின் அரியணையில் அமர்த்த முயற்சி எடுத்தார்.

தமது விருப்பத்தை தஞ்சை மன்னரிடம் தெரிவித்தார். அதை ஏற்றுக்கொண்ட ரகுநாத நாயக்கர், ஜக்கராயனை போரில் வென்று விஜய நகர வாரிசான ராமனுக்கு அரியணை கிடைக்கச் செய்தார். வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தப் போர் தஞ்சை மாவட்டம் கல்லணைக்கு அருகிலுள்ள தோகூரில் நிகழ்ந்ததாகத் தகவல் உண்டு. பின்னர், கும்பகோணத்தில் ராமனுக்குப் பட்டாபிஷேகம் நடத்தி, ராமராயன் என்ற பெயரோடு அரியணை ஏற உதவினார் ரகுநாத நாயக்கர்.

ராமராயனுக்குப் பட்டாபிஷேகம் செய்து வைத்த அதே இடத்தில், தான் வணங்கும் ராமபிரானுக்கு பட்டாபிஷேக கோலத்தில் அழகிய ஆலயம் கட்டினார் ரகுநாதன். அதுவே இன்று கும்பகோணத்தில் கம்பீரமாகக் காட்சியளிக்கும் ராமசாமி திருக்கோயிலாகும் என்பர்.

கலையழகுடன் திகழ்கிறது, குடந்தை ராம சாமி கோயில். இங்கே கொடிமரம் அருகில் ஒரு தூணில் ஆஞ்சநேயர் அருள்கிறார். அடுத்துள்ள மண்டப விட்டத்தில் ராகு பகவான் ஆறடி நீளத்தில் ஒரு சர்ப்ப ரூபத்தில், மானை வழிபடுவது போல ஓர் உருவம் அமைந்துள்ளது. அந்த சர்ப்பம் மூன்று வளைவுகள் மற்றும் பத்து துவாரங்களுடன் பக்தர்களுக்கு அருள் வழங்குவதாக ஐதீகம். அதன் கீழ் நின்று ‘ஓம்  ராகவே நம:’ என்று 108 தடவையும், ராகு காயத்ரியை 16 தடவையும் சொல்லிப் பிரார்த்தித்தால், ராகு தோஷங்கள் அனைத்தும் நீங்கி, சகல சௌபாக்கியங்களும் உண்டாகும் என்பது நம்பிக்கை.

-ஆர்.கிருஷ்ணன், சென்னை-26

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism