Published:Updated:

கடமையும் வினைப் பயனும்

ஸ்ரீராமர்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீராமர்

ஸ்ரீராமர்

கடமையும் வினைப் பயனும்

ஸ்ரீராமர்

Published:Updated:
ஸ்ரீராமர்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீராமர்

உலகில் பிறந்த உயிர்கள் அனைத்துக்கும் இரண்டு விஷயங்கள் கட்டாயம் உண்டு. ஒன்று கடமை, மற்றொன்று வினைப்பயன். இவற்றை யாராலும் தவிர்க்க முடியாது. பிறப்பெடுக்கும்போதே அப்பிறப்புக்கு ஏற்ற கடமையும் முன்வினைகளால் ஏற்படும் பலன்களும் தோன்றிவிடுகின்றன. எவராக இருப்பினும் அவற்றை ஏற்றுதான் ஆகவேண்டும்.

ராமாயணம்
ராமாயணம்


ராமாயணத்தில் கும்பகர்ணனும் மகாபாரதத்தில் கர்ணனும் செய்ந்நன்றிக்கு இலக்கணமாகும் பாத்திரங்கள். நன்றிக்காகத் தம் உயிரையே கொடுத்தவர்கள். அதிலும் கும்பகர்ணன் மிகவும் தெளிந்த சிந்தையோடு நியாயம் உரைத்தவன். சொல்லவேண்டிய அறத்தை ராவணனுக்கும், அன்பை விபீடணனுக்கும் சொன்னவன்.

ராமனிடம் வந்துவிடுமாறு கும்பகர்ணனை விபீடணன் அழைத்த போது, அதை மறுத்து ‘ஒருத்தரின் முன்னம் சாதல் உண்டவர்க்கு உரியது அம்மா’ என்று சொன்னான். அத்தோடு நிறுத்தவில்லை, விபீடணன் ஏன் ராமனோடு சென்று பிழைக்கவேண்டும் என்பதற்கும் ஒரு காரணத்தை எடுத்துச் சொன்னான் கும்பகர்ணன். அக்காரணம், மிகவும் முக்கியமானது.

குடும்பத்தில் எவரேனும் இறந்துவிட்டால் அவர்களுக்கு நீர்க் கடன் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம். அவ்வாறு செய்வதன் மூலம் இறந்த நம் பித்ருக்கள் இருள் உலகில் திண்டாடாமலும் தாகம் இன்றியும் வாழ்வார்கள். இல்லையென்றால் அவர்கள் நரகம் புகவேண்டிய சூழல் ஏற்படலாம் என்பது நம்பிக்கை.

கும்பகர்ணன் அசுரனே ஆனபோதும் நற்கதி அடைய வேண்டும் என்று விரும்புகிறான். தான் மட்டுமல்ல தன் அசுர இனமே ராமனின் பாணத்தால் அழியப்போகிறது. அப்போது அவர்களுக்கு நீர்க்கடன் செலுத்த யார் இருக்கிறார்கள் என்று கவலைப்பட்டான்.

எனவே விபீடணனை நோக்கி, ‘நீ ராமனோடு இருந்து நாங்கள் அழிந்தபின் எங்களுக்குச் செய்ய வேண்டிய தர்ப்பணம் முதலான கடமைகளைச் செய்வாயாக’ என்று வேண்டுகிறான்.

ஐய நீ அயோத்தி வேந்தற்கு அடைக்கலம் ஆகி ஆங்கே

உய்கிலை என்னின் மற்று இவ் அரக்கராய் உள்ளோம் எல்லாம்

எய்கணை மாரியாலே இறந்து பாழ்படுவேம் பட்டால்

கையினால் எள் நீர் நல்கிக் கழிப்பாரைக் காட்டாய்

- கம்பராமாயணம்

முன்னோருக்குச் செய்யவேண்டிய கர்மாக்களை முறையாகச் செய்ய வேண்டியது நம் கடன். அமாவாசை முதலிய புண்ணிய காலங்களில் நாம் இரைக்கும் எள்ளும் நீரும் நம் முன்னோருக்கு நற்கதி அளிப்பதோடு நமக்கும் அவர்களின் நல்லாசியைப் பெற்றுத் தரும். இதையே கும்பகர்ணனின் வாயிலாகக் கம்பன் நமக்கு அறிவுறுத்துகிறார்.

- வி.வேல்முருகன், சென்னை-44