“எண்ணிய சகாத்த மெண்ணூற் றேழன் மேற் - சடையன் வாழ்வு

நண்ணிய வெண்ணெய் நல்லூர் தன்னிலே - கம்பநாடன்

பண்ணிய விராம காதை பங்குனி யத்த - நாளில்

கண்ணிய வரங்கர் முன்னே கவியரங் - கேற்றினானே!''

திருநறுங்கொண்டை ஊரில் ஜைனர்களின் கையொப்ப ஏடுகளைப் பெற்றுத் திரும்பும் வழியில், மாமண்டூர் இரும்புக்கொல்லை கருமானின் கையொப்பத்தையும் பெற்றார் கம்பர். தஞ்சையைச் சேர்ந்த அஞ்சனாட்சி, பாடலாகவே சமர்ப்பித்தாள். நிறைவாக, கம்பரின் மகன் அம்பிகாபதி,

``கம்ப நாடனுமை செவி சாற்று பூங்

கொம்ப நாடன் கொழுநனி ராமப்பேர்

பம்ப நாடழைக்குங் கதை பாச்செய்த

கம்ப நாடன் கழறலை யிற்கொள்வாம்'' என்று ஒரு பாடலை எழுதிக்கொடுத்தான். அவை அனைத்தையும் கண்ட திருவரங்கத்தார், ``கம்பரே! நீர்வந்த வேளை பொன் வேளை. எங்கள் பரமாசார்யராகிய ஸ்ரீமன் நாதமுனிகள் ஆலயத்தில் எழுந்தருளியுள்ளார்'' என்றனர்.

அத்துடன், அவரை அழைத்துச்சென்று நாத முனிகளிடம் அறிமுகம் செய்துவைத்தார்கள். ஸ்ரீமன் நாதமுனிகளும் கம்பரை ஆசீர்வதித்து, ராமாயண ஏட்டுக்கட்டுகளைப் பெற்று வாசித்து மகிழ்ந்தார். ``நல்லதொரு முகூர்த்த நாளில், முகூர்த்த வேளையில் இக்காவியம் அரங்கேற்றப்பட நாம் எல்லோரும் உதவ வேண்டும்'' என்றும் கட்டளையிட்டார்.

கம்பர் மிகவும் மகிழ்ந்து கண்ணீர்மல்க அரங்கனின் திருச்சந்நிதிக்குச் சென்று நெஞ்சம்நெகிழ வணங்கி நின்ற வேளையில், அங்குள்ள பட்டர் ஒருவருக்குள் அரங்கன் ஆவிர்பவித்தான்.

``கம்பநாடனே! உன் ராமாயணப் பெரு முயற்சிக்கு என் வாழ்த்தும் பாராட்டும். எனினும் நீ, நம் சடகோபனைப் பாடினால்தான் யாம் பரிபூரணமாகப் பூரிப்போம்'' என்றான்.

சடகோபர்தான் நம்மாழ்வாராய் அறியப் பெற்றவர். முன்பு, மங்கை மன்னன் வேண்டியதன் பொருட்டு, `ஆழ்வானின் பிரபந்தம் முன்னும் வேதம் பின்னுமாய் முழங்கட்டும்' என்று கட்டளையிட்ட அரங்கன், இன்று நம்மாழ்வாரா கிய சடகோபனின் புகழைப் பாடும்படி கம்பரைப் பணித்தார். கம்பர் உள்ளம் நெகிழ்ந்தார்.

``நஞ்சடகோபனைப் பாடினையோவென நம்பெருமாள்

விஞ்சிய வாதரத்தாற் கேட்பக் கம்பர் விரைந்துரைத்த

செஞ்சொலந் தாதிக் கலித்துறை நூறுந் தெரியும் வண்ணம்

நெஞ்சடி யேற்கருள் வேதந் தமிழ் செய்த நின்மலனே!'' என்ற பாடலால் இக்கருத்து தெரியவருகிறது. கம்பரும் அதன்பின் கட்டளைக் கலித்துறையில் `வேதத்தின் முன் செல்க' என்று தொடங்கி `ஆழ்வாரந்தாதி' என்னும் சடகோபரந்தாதியைப் பாடினார்.

தொடர்ந்து ராமாயண அரங்கேற்ற வைபவம் தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்குத் திருவரங்கம் வாழ் அந்தணர்கள், செல்வந்தர்கள், சேவையர் ஸ்மார்த்தர், மாத்வர் என்று சகலரும் திரண்டு வந்துவிட்டனர். விழாக்கோலம் பூண்டது திருவரங்கம்.

கம்பரை ஒரு ரதத்தில் ஏற்றி ஊரை வலம் வரச் செய்து, பின்னர் யானையின்மீது அமரச் செய்து, ஆலயத்துக்கு அழைத்து வந்தார்கள். கோயிலில் ஆயிரங்கால் மண்டபம் நிரம்பி வழிந்தது. பின்னர், ஸ்ரீமன் நாதமுனிகள் கம்பரின் ராமாயணத்தை ஆசீர்வதித்து அரங்கேற்றிட, கம்பரும் பாடல்களைப் பாடி பொருள் கூறலானார். இடையிடையே பலரும் குறுக்கிட்டு, பொருள் விளக்கம் கேட்டார்கள். அவர்களுக்கு விளக்கம் அளித்தவராகத் தொடர்ந்து தன் பாடல்களைப் பாடினார் கம்பர்.

இரணியன் வதைப்படலம் பாடும்போது அதன் பொருள் விளக்கத்தைக் கேட்டு, ஆலய வெளியிலுள்ள மேட்டழகிய சிங்கர் என்று அழைக்கப்படும் நரசிம்மப்பெருமானின் சிலை வடிவம் அசைந்து திருக்கரங்களை நீட்டித் தன் திருமுடியை விலக்கியபடி, வாயைத் திறந்து சிரித்து ஆர்ப்பரித்தது!

சிரிப்பொலியைக் கேட்டவர்களும் சிலையின் அசைவைக் கண்டவர்களும் சிலிர்த்தனர்; கம்பரால் கிடைத்த பாக்கியம் என்று மகிழ்ந்தனர்.

ஸ்ரீமன் நாதமுனிகள் கண்களில் நீர் பெருக, தனக்கும் மக்களுக்கும் கிடைத்த பாக்கியத்தின் பொருட்டு கம்பருக்கு நன்றி கூறியதுடன், ``இந்த ராமாயணத்தில் சிறு திருத்தம் செய்திட வேண்டுகிறேன்'' என்றார்.

அங்கிருந்த அனைவரும் ஸ்ரீமன் நாதமுனி களைத் திகைப்போடு நோக்கினர். `திருத்தம் செய்யுமளவுக்கு அப்படி என்ன பிழை உள்ளது' என்று சிலருக்குள் கேள்வி எழுந்தது. கம்பரிடம் லேசான நடுக்கம். ஏனெனில், `படாதபாடுபட்டு அரங்கேற்றம் ஆகியிருக்கிறது. இந்த நிலையில் ஸ்ரீமன் நாதமுனிகள் திருத்தம் வேண்டும் என்கிறாரே... அது எதுகுறித்தோ...' என்று உள்ளுக்குள் கலங்கினார்.

அப்போது, “அச்சம் வேண்டாம் கம்ப நாட்டாழ்வாரே...'' என்ற ஸ்ரீமன் நாதமுனிகள் தொடர்ந்து, “ஆழ்வாரின் பாடல்கள் அனைத்தும் அற்புதம்... அமிர்தம். ஆனால்...'' என்று இழுத்தார்.

முதலில் கம்பநாட்டாழ்வார் என்றும், பின்னர் ஆழ்வார் என்றும் ஸ்ரீமன் நாதமுனிகள் தன்னை அழைத்ததால் கம்பருக்குள் பூரிப்பு எழுந்தது. அதேநேரம் `ஆனால்...' என்று ஸ்ரீமன் நாத முனிகள் இழுத்ததும், தன் உயிரையே அவர் நாண் கம்பியை இழுப்பதுபோல் இழுப்பதாக உணர்ந்து பதைபதைத்தார்.

“ஆழ்வாரே! இந்த நூல் ராமனின் புகழ் பாடும் திவ்ய சரிதம். அந்த ராமனும் அவதாரப் புருஷன். நாமெல்லாம் தர்மப்படி நடக்க வேண்டும் என்று சொன்னதோடு, அது எப்படி என்று வாழ்ந்துகாட்டிவிட்டும் சென்றவன். மனிதப் பிறப்பெடுத்தபோதிலும் அவர் மனிதன் இல்லை; தெய்வம். அப்படிப்பட்ட தெய்வத்தைப் போற்றிடும் நூலில், நீங்கள் உங்களை ஆதரித்த சடையப்ப வள்ளலை நூறு பாட்டுக்கு ஒரு பாட்டு எனும் வகையில் போற்றியுள்ளீர்களே... இது சரியா?” என்று கேட்டார்.

கம்பர் சற்றுத் தடுமாறினார். மௌனத்தையே பதிலாகத் தந்தார்.

“பதில் சொல்லுங்கள்... ஆழ்வாரே...’'

“ஆழ்வாரா... நானா..?”

“ஆம்... ராமனைத் தமிழால் ஆண்ட நீர் ஆழ்வார் இல்லை என்றால், வேறு யார் ஆழ்வார்?”

“ஆஹா... பெரும் பாக்கியம்...”

“அந்த பாக்யாதிபதியைத்தான் கேட்கிறேன்... பதில் கூறுங்கள்...”

“உங்கள் கேள்வி என்னைப் பலவாறு எண்ணவைக்கிறது. தவறு என்கிறீர்களா, சரி என்கிறீர்களா என்பதே புரியவில்லை.”

“தவறு என்கிறேன்! இறைவனுக்கான துதி நூலில் மனிதத் துதி தவறு. ஆயினும், அது ஓர் அழகிய தவறு. நானொரு வழி சொல்கிறேன். நூறு பாடல்களுக்கு ஒருமுறை நன்றியின் நிமித்தம் வள்ளலைப் புகழ்ந்த நீங்கள், அவரை ஆயிரத்தில் ஒருவன் ஆக்குங்கள். அதாவது, ஆயிரம் பாட்டுக்கு ஒருமுறை பதிவு செய்யுங்கள்'' என்றார்.

கம்பருக்கும் கூட்டத்தாருக்கும் புரிந்தது. ஒன்றைத் திருத்துவதன் மூலம் அதை மேலான இடத்துக்குக் கொண்டுசெல்வது என்பது இதுதான். கம்பர் அவ்வாறே செய்வதாகக் கூறினார். கூட்டம் ஆர்ப்பரித்தது!

அத்துடன் அனைவரும் சேர்ந்து காட்டழகிய சிங்கரின் சந்நிதிக்குச் சென்று, சிலிர்ப்போடு வணங்கி மகிழ்ந்தனர். திருவரங்க வரலாற்றில் அந்நாள் ஒரு பொன்னாள்!

திருவரங்க வரலாற்றுப் பாதையில் விக்ரமச் சோழனான அகளங்கனைத் தொடர்ந்து ஆலயத்தைப் பெரிதும் போஷித்தவன் சுந்தர பாண்டியத் தேவன். அவனுடைய காலம் 1230 முதல் 1284 வரை. அதாவது 34 வருடங்கள்.

இவனுக்குப் பெரிதும் சோதனையைத் தந்தவன் ஹொய்சாள மன்னன் வீரசோமேஸ்வரன். இந்த மன்னனும் திருவரங்கக் கோயிலைத் தன் கண்ணாகக் கருதிப் போற்றியவர்களில் ஒருவன்.

திருவரங்கம் ஆலயத்தில் இன்று காணப்படும் ஹொய்சாள மரபுச் சிற்பங்கள், இவன் பிடியில் கோயில் இருந்த தருணத்தில்தான் உண்டாக்கப்பட்டன.

ஒருமுறை, வீரசோமேஸ்வரனும் அவன் மனைவி உத்தம வல்லபியும் அரங்கனை தரிசிக்க வந்தனர். நடந்து சென்றால்தான் கோயிலின் எழிலை ரசிக்க முடியும் என்று எண்ணிய உத்தம வல்லபி நடக்க ஆரம்பித்தாள்.

கற்கள் பாவிய தரைப்பரப்பில் கால் கொலுசுகள் குலுங்க அவள் நடந்து செல்லவும் வீரசோமேஸ்வரனும் உடன் நடந்தான். விஸ்தாரமான கோயிலும் மண்டபங்களும், அவற்றின் சிற்பங்களும் மனத்தை வசீகரித்தன. அதுவரையிலும் நடைபெற்ற திருப்பணிகள், அதைச் செய்தவர்கள் பற்றி ஸ்ரீகாரியத்திடம் கேட்டுக்கொண்டே வந்தாள். அப்போது ராணிக்கு ஓர் எண்ணம் தோன்றியது.

தானும் தன் கணவனும் தங்களின் பெயர் விளங்கும்படியாக இந்தக் கோயிலுக்கு ஏதாவதொன்றை செய்ய வேண்டும் என்று தீர்மானித்தவள், அதுபற்றி அரசனிடமும் தெரிவித்தாள்.

“அரசர் பெருமானே! நம் ஹொய்சாள வம்சத்தின் பெருமை விளங்கும் வண்ணம் நாமும் அரங்கனுக்கு எதாவது பெரிதாகச் செய்திட வேண்டும்” என்றாள்.

“தேவி! ராமேஸ்வரம் முதல் தஞ்சை வரை பல கோயில்களுக்கு நிவந்தங்களையும் அந்தணர் களுக்குப் பல ஊர்களைத் தானமாகவும் அளித்தவன் நான். இங்கே நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நீயே சொல்” என்றான் வீரசோமேஸ்வரன்.

“அப்படியானால், அரங்கன் பள்ளி கொண்டிருப்பது போலும், அவரின் காலடியில் நாம் இருவரும் நின்று வணங்குவது போலும் சிற்பங்களை வடித்து நிறுவ வேண்டும்'' என்றாள்.

அவள் கூறியதைச் செவிமடுத்த கோயில் ஸ்தானீகர்களும் ஸ்ரீகாரியமும் சற்றே சலனப்பட்டனர். அவர்களின் முகம் கோணுவதைக்கண்ட வீர சோமேஸ்வரன், காரணத்தைக் கேட்டான்.

ஸ்தானீகர்களில் பண்டிதர் ஒருவர் இருந்தார். அவர், “அரசர் பெருமான், நான் இப்போது சொல்லப் போவதைக்கேட்டு என்மேல் கோபம் கொள்ளக் கூடாது” என்று பீடிகையோடு தொடங்கினார்.

“எதுவாயினும் சொல்லுங்கள்” என்று தூண்டிவிட்டான் வீரசோமேஸ்வரன்.

``இந்த ஆலயம் அரங்கப் பெருமானாலேயே உண்டானது. இதை எவ்வளவு வேண்டுமானாலும் விஸ்தரிக்கலாம், மண்டபங்கள் அமைக்கலாம், கற்தூண்கள் எழுப்பலாம், சுற்றுப் பிராகாரம் கூட அமைக்கலாம். ஆனால், அரங்கனைப் போல் பிரிதொரு சொரூபம் இங்கே எங்குமே கூடாது” என்றார்.

“ஏன் அப்படி?”

“அவன் ஒருவனே பரபுருஷன் - அவனே பரமாத்மா. அவன் சயனக்கோலமும் ஒன்றே... அதுவும்கூட பிரம்மனால் உருவாக்கப்பட்டது. இங்கே மானுடர் கைகொண்டு உருவாக்கிய பல சிலா ரூபங்கள் உபசந்நிதிகளாய் உள்ளன. ஆயினும், பிரதானம் அரங்கநாதப் பெருமான் மட்டுமே. அவன் உருவை அப்படியே வார்க்க முற்படுவது, இந்த ஆலயத்தில் கூடாது. நான் என் விருப்பமாக இதைக் கூறவில்லை. சாஸ்திரம் சொல்வதையே சொல்கிறேன்” என்றார்.

வீரசோமேஸ்வரனுக்கும் அது ஏற்புடைய தாகவே இருந்தது. ஆனால், அவன் பத்தினி மறுத்தாள். “நீங்கள் சொல்வதை ஏற்க முடியாது. அவனே பரமாத்மா என்பதில் மாற்றில்லை. ஆனால், அவனது சிலா ரூபம் ஒன்றுதான் இருக்க வேண்டும் என்பது எனக்குச் சரியாகப்படவில்லை'' என்றாள்.

அதனால் அங்கொரு சர்ச்சை உருவாகி விட்டது. வீரசோமேஸ்வரனுக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. இறுதியில் ராணியின் விருப்பப்படி சிலா ரூபம் செய்ய முடிவாகி சிற்பி ஒருவரிடம் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டது. அவரும் கோயிலுக்குள் தான் உருவாக்கப்போகும் பெருமாளின் சந்நிதி அமையப்போகும் இடத்தை ஆலயத்துக்குள் தேடலானார்.

அப்போது கிளி மண்டபம் பக்கமாய் வந்தவர் ஏராளமான கிளிகள் படபடப்பதையும் பார்த்தார். அப்போது இரண்டு கிளிகள் பேசிக்கொள்ள ஆரம்பித்தன. அதில் ஒரு கிளியின் பெயர், மந்தாகினி. இன்னொரு கிளியின் பெயர், சுபாஷினி.

சுபாஷினி கிளி, மந்தாகினியிடம் கூறத் தொடங்கியது. “மந்தாகினி யாக்கா... நான் சொல்வதை நன்றாகக் கேட்டுக்கொள். இவன் ஒரு சிற்பி. நம் அரங்கநாதரைப் போலவே ஒரு சிற்பம் செய்து இங்கே வைக்க நினைக்கிறான்'' என்றது.

“பாவம்... உளிபட்டு இவன் கைதான் காயப்படப்போகிறது” என்றது மந்தாகினி.

‘`காயம்படப்போகிறதா... காரணம்?”

“எம்பெருமான் சிலை வடிக்க எம்பெருமா னிடம் அனுமதி கேட்க வேண்டாமா?”

“ஏன் இவன் கேட்கவில்லையா?”

``எங்கே கேட்டான்? அரசன் சொல்லவும் இடம்பார்க்க வந்து விட்டான். அது மட்டுமல்ல... சிலையில் தன் உருவத்தையும் இவன் பதிவு செய்ய திட்டமிட்டுள்ளான். தினமும் ஆயிரமாயிரம் பேர் வந்துசெல்லும் இந்த ஆலயத்தை இவனும் சரி, அந்த அரசியும் சரி... தங்கள் பெயர் விளங்கப் பயன்படுத்தப் பார்க்கின்றனர்.”

“அதிலென்ன தவறு... இவர்களைப் பார்த்துவிட்டு இன்னும் பலரும் இதுபோல் முன் வருவதோடு இதனால் வரலாறும் உருவாகு மல்லவா?”

“வரலாறு மட்டுமா உருவாகும்... சிலையாகி விட்டால் வழிபடப்படுவார்கள். அப்படி நடந்தால் இவர்களும் பெருமாளுக்கு இணையா கிடுவர். இணையாவதா பெரிது... இவர்களால் எம்பெருமான்போல் அருள முடியுமா?”

- அந்தக் கிளிகளின் பேச்சைக் கேட்ட சிற்பிக்கு மனம் சலனமடைந்தது. அவை சாதாரண கிளிகள் அல்ல. தேவ புருஷர்களோ, இல்லை... ரிஷிகளோ, முனிகளோ சாபத்தால் இப்படி ஆகியிருக்க வேண்டும் என்றும் தோன்றியது.

- தொடரும்