Published:Updated:

சுவாமி சரணம்!

சாஸ்தா தரிசனம்!
பிரீமியம் ஸ்டோரி
News
சாஸ்தா தரிசனம்!

தர்ம சாஸ்தா - ஐயனார் சிறப்புத் தகவல் தொகுப்பு!

`சாஸ்தா' என்றால் ஆளுபவன் என்று பொருள். சுவாமி ஐயப்பன் தர்மத்தை நிலைநாட்டும் தெய்வமாக இருப்பதால், அவரை தர்மசாஸ்தா என்று சிறப்பித்து பூஜிக்கிறோம். மகா சாஸ்தா, மேரு மலையில் ஸ்படிக மயமான சிகரத்தில் வீற்றிருக்கும் பரம்பொருள். அவரே துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனத்துக்காக பல அவதாரங்களை எடுக்கிறார்.

சுவாமி சரணம்!

மகாவிஷ்ணுவின் அவதாரங்கள் எல்லோருக்கும் தெரியும். அதுபோல் மகாசாஸ்தாவுக்கு எட்டு அவதாரங்கள் உண்டு. அவை: ஆதி சாஸ்தா, கால சாஸ்தா, பால சாஸ்தா, சம்மோஹன சாஸ்தா, ஆர்ய சாஸ்தா, விஸ்வ சாஸ்தா, கிராத சாஸ்தா மற்றும் புவன சாஸ்தா.

ஆதி சாஸ்தாவுக்கு பூர்ணா-புஷ்கலா என்ற இரு மனைவியர் உண்டு. அச்சன்கோவில் முதலான தலங்களில் உள்ள திருவடிவம் இதுவே. இந்த ஆதிசாஸ்தாவையே தமிழகத்தில் ஐயனார் என்று அழைத்தார்கள்.

ஐயப்பமார்கள் விரதம் இருக்கும் இந்தப் புண்ணியக் காலத்தில் சாஸ்தாவின் மகிமைகள், ஐயனார் ஆலயங்களின் சிறப்புகள், சபரியின் விசேஷங்கள் ஆகியவற்றை அறிந்து வழிபடுவதால், பன்மடங்கு புண்ணியம் வாய்க்கும். அவ்வகையில் சில அபூர்வத் தகவல்கள் உங்களுக்காக...

சுவாமி சரணம்!

சபரிமலை ரகசியங்கள்!

சிவ - விஷ்ணு சக்திகளின் சங்கமமாக - கர்ப்ப வாசம் புரியாமல் சங்கல்ப மாத்தரத்தில் அவதரித்தவர் மகாசாஸ்தா. மஹிஷி எனும் அரக்கியை அழிக்கும் பொருட்டு, பூவுலகில் மனித அவதாரம் எடுக்கத் தீர்மானித்தார். ஆகாய கங்கை வழியாக பம்பை ஆற்றங்கரையை அடைந்து, அங்கே ஒரு குழந்தையாகத் தோன்றினார். பரமேஸ்வரன் கொடுத்த நவரத்தின மாலையைக் கழுத்தில் அணிந்திருந்த காரணத் தால், மணிகண்டன் என்று அவருக்குத் திருப்பெயர் வாய்த்தது. `மணி' என்பது நவரத்ன மணிகளைக் குறிக்கும்.

வதார நோக்கத்துக்காக பால பிரம்மசார்யாக வாழ்ந்த மணி கண்டன், மஹிஷியை சம்ஹாரம் செய்த பிறகு, கலியுக வரதனாக கோயில்கொள்ளத் தீர்மானித்தார். சாஸ்தாவின் அவதாரமான மணிகண்டனை, மஹா யோகபீடமான சபரி பர்வதத்தில் பரசுராமர் பிரதிஷ்டை செய்தார்.

லக நன்மைக்காக யோகத்திலேயே ஆழ்ந்து தவக்கோலம் பூண்ட மணிகண்டன், `வருடத்தில் ஒருநாள் - மகர ஸங்க்ரமத்தன்று கண் விழித்து பக்தர்களை அனுக்ரஹிப்பேன்’ என்று வாக்களித்தார். அதன்படி மகரவிளக்கு தரிசனம் சபரியில் சிறப்புப் பெற்றது.

பாண்டியர்களின் குருவான அகத்தியரே சபரிமலைக்கான விரத வழிமுறைகளை வகுத்தளித்தார். ஒரு மண்டல காலம் பிரமாசார்யாதி விரதங்களை மேற்கொள்ளும் அன்பர்களே சபரி மலைக்குச் செல்ல தகுதி உடையவர் என்று வகுத்தளித்தார் அவர். பிரமாண்ட புராணத்தின் பூதநாதோபாக்யானம் என்ற கேரள கல்பப் பகுதியில், நமக்குக் கிட்டும் தகவல் இது.

சுவாமி ஐயப்பன் 1800-ம் ஆண்டுவரையிலும் மரத்தாலான விக்கிரக வடிவத்திலேயே இருந்தார். அதனால் அப்போது அவருக்கு நெய்யபிஷேகம் நேரடியாகச் செய்யும் வழக்கம் இல்லை. அதனால் பக்தர்கள் கொண்டு செல்லும் நெய்யை, நெய்த் தோணியில் கொட்டிவிடும் பழக்கம் இருந்தது. இன்றைக்கும் பழைமையான கேரள பக்தர்கள், தாங்கள் கொண்டு வரும் நெய்யை நேரடியாக பகவானுக்கு அபிஷேகிக்கக் கொடுக்காமல், நெய்த் தோணியில் கொட்டிவிடுகிறார்கள். அதிலிருந்தே சிறிது நெய்யைப் பிரசாதமாகக் கொண்டு செல்கிறார்கள்.

தியில் சபரிமலை ஆலயத்தை உருவாக்கியது விஸ்வகர்மா. சபரியில் 1904-ம் ஆண்டு கோயில் புனரமைக்கப்பட்டது. 1950-ம் ஆண்டிலும் பெருநெருப்பால் கோயில் சேதமாகிப் பின்னமானது. நாம் தற்போது வழிபடும் ஐயனின் விக்கிரகம், 1952-ல் பி.டி.ராஜனும் நவாப் ராஜ மாணிக்கம் பிள்ளையும் செய்து கொடுத்ததே.

ன்புலி வாகனன் என்று நாம் ஐயப்பனை அழைத்தாலும், அது புலிப்பாலுக்காக நிகழ்ந்த ஒரு சம்பவம் மட்டுமே. உண்மையில் சபரி மலையில் பகவானின் வாகனம் குதிரைதான். கொடிமரத்தின் மேலே குதிரை உருவமே அமைக்கப் பட்டிருப்பதைக் காணலாம்.

பகவான் சாஸ்தாவுக்குத் தேவர்கள் அபிஷேகம் செய்யும் தீர்த்தமே உரல்குழி தீர்த்தமாக – கும்பளம் தோடு எனும் இடத்தில் உருவாகி வெளி வருகிறது. சபரிமலையின் முக்கிய தீர்த்தம் இது.

செல்வ கடாட்சம் தரும் மண்ணின் மகத்துவம்!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர்–திருநெல்வேலி செல்லும் சாலையில் உள்ளது காயாமொழி. இங்கிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் குதிரைமொழி–தேரிக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு கற்குவேல் ஐயனார் திருக்கோயில்.

சுவாமி சரணம்!

ருகாலத்தில் தேரிக்குடியிருப்பு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியை அதிவீரணசூர பாண்டியன் என்ற மன்னர் ஆட்சி செய்து வந்தார். ஐயனார் மானிட உருவம் எடுத்து வந்து, மன்னரின் அவையில் அமைச்சராகத் திகழ்ந்தார். மன்னரின் கோட்டைக்கு அருகில் சுனை ஒன்று இருந்தது. மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்திசெய்தது இந்தச் சுனையே. சுனையின் கரையில் ஒரு மாமரம் இருந்தது. அந்த மரத்தில் குறிப்பிட்ட ஆண்டுக்கு ஒருமுறை, ஒரு காய் மட்டுமே காய்த்துப் பழமாகும்.

சுனையில் தானாக விழும் அந்த மாம்பழத்தைச் சாப்பிடுபவருக்கு அபூர்வ பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்தப் பகுதியில் வசித்த விதவைப் பெண் ஒருத்தி, ஒருநாள் பொழுது சாய்ந்ததும் தண்ணீர் எடுக்க சுனைக்கு வந்தாள். அந்த நேரம் பார்த்து சுனைக்குள் உதிர்ந்து விழுந்த மாம்பழம் அவளின் குடத்துக்குள் சென்றுவிட்டது. இதை அறியாத அந்தப் பெண்ணும் வீட்டுக்குச் சென்று குடத்தை இறக்கிவைத்தாள்.

மறுநாள் பழத்தைக் காணாததால் ஊரெங்கும் ஆய்வு செய்த காவலாளிகள், விதவைப் பெண் வீட்டில் குடத்திலிருந்து பழத்தைக் கண்டெடுத்தனர். பழம் மன்னனிடம் ஒப்படைக்கப்பட்டது. கோபம் கொண்ட மன்னன் விசாரணை செயாமல் அந்தப் பெண்ணுக்குத் தண்டனை அளித்தார். அவளுக்கு மொட்டையடித்து, கரும்புள்ளி - செம்புள்ளி குத்தி, எருக்கம்பூ மாலை போட்டு, சுண்ணாம்புக் காளவாயில் போட்டு எரிக்கும்படி உத்தரவிட்டார்.

அமைச்சரான ஐயனார் எவ்வளவு எடுத்துக்கூறியும் அவர் கேட்கவில்லை. அந்தப் பெண் ஆவேசம் அடைந்தாள். ‘`நின்று நிலைத்து நீதி கேட்காதவன் சீமையில் தீக்காற்றும் தீ மழையும் பெய்யக்கடவது...’’ என்று சாபமிட்டாள். சாபம் பலித்தது.

ஐயனார் மட்டும் தன் தெய்வ சக்தியினால், அருகிலிருந்த கருக்குவா மரத்தில் ஐக்கியமானார். பிற்காலத்தில் மக்களுக்கு அருள்புரிய திருவுள்ளம் கொண்டு, கருக்குவா மரத்திலிருந்து தோன்றினார். கருக்குவா மரத்திலிருந்து தோன்றியதால், ‘கற்குவேல் கையனார்’ என்ற திருப்பெயர் ஏற்பட்டது. இப்பகுதி கல்வெட்டுகளிலும் பட்டயங்களிலும் ‘கருக்கு வேலைய்யன்’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

கோயிலில் கருவறையில் வலது காலைத் தரையில் ஊன்றி, இடது காலை மடக்கியபடி, கிழக்கு நோக்கி அமர்ந்த நிலையில் காட்சி அளிக்கிறார் ஐயனார். வலது கையில் நீதி நெறியை அறிவிக்கும் தருமச்செண்டு உள்ளது. ஐயனாருக்கு வலப்புறம் பூரணம்மாள், இடப்புறம் பொற்கமலம்மாள் ஆகியோர் காட்சியளிக் கின்றனர். பொற்கமலம்மாளை ‘புஷ்கலையம்மாள்’ எனவும் அழைக்கின்றனர்.

வருடம்தோறும் கார்த்திகை மாதம் ‘கள்ளர் வெட்டுத் திருவிழா’ விசேஷமாக நடைபெறுகிறது. மாதத்தின் கடைசி மூன்று நாள்களில் திருவிழா களைகட்டும். எடுப்பெடுத்தல், மண்ணெடுத்தல் வைபவங்கள் விழாவின் சிறப்பம்சம். இதையொட்டி, தேரிக்காட்டில் கள்ளராகப் பாவித்து இளநீர் வெட்டும் வைபவம் நடக்கும். அப்போது இளநீர் தெறித்து விழுந்த செம்மண்ணைப் பக்தர்கள் போட்டி போட்டுக் கொண்டு எடுத்துச் செல்வார்கள். இதனை ‘மண்ணெடுத்தல்’ என்கின்றனர். இந்த மண்ணை வீடுகளில், கடைகளில், வியாபார நிறுவனங்களில் வைத்தால் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அத்துடன், இந்த மண்ணை பிணி தீர்க்கும் அருமருந்தாகவும் கருதுகிறார்கள்.

இந்த விரத காலத்தில் அனைவரும் ஒருமுறையேனும் குடும்பத்துடன் சென்று கற்குவேல் ஐயனாரை தரிசித்து வர வேண்டும். அவரின் திருவருளால் அனைத்துவித சங்கடங்களும் நீங்கும்; குடும்பத்தில் சந்தோஷம் பொங்கிப் பெருகும்.

- இ.கார்த்திகேயன்,

படம்: எல்.ராஜேந்திரன்

சிங்கமடை ஐயனார்

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் கிராமம் நள்ளி. இந்த கிராமத்தின் எல்லையில் சிங்கமடை பெரிய கண்மாயின் கரையில் உள்ளது சிங்கமடை ஐயனார் கோயில்.

சுவாமி சரணம்!

சுமார் 500 வருடங்களுக்கு முன்பாக ஶ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த அன்பர் பஞ்சம் பிழைக்க வேறு ஊருக்கு நகர்ந்தார். அப்போது, தான் அதுவரை வழிபட்டு வந்த ஐயனார், பேச்சி, கருப்பசாமி ஆகிய தெய்வங்களின் பிடிமண்ணை ஓர் ஓலைப் பெட்டியில் எடுத்துச் சென்றார். அவர் நள்ளி கிராமத்தை நெருங்கியபோது, பெருமழை பொழிந்தது. எங்கும் இருட்டு. அப்போது மின்னல் ஒளியில் கண்மாயின் கரை உடைந்து தண்ணீர் வேகமாக வெளியேறிக்கொண்டிருந்ததைக் கண்டார். பேராபத்தை உணர்ந்தவர், தன்னிடமிருந்த ஓலைப் பெட்டியை அங்கேயே ஓரிடத்தில் வைத்துவிட்டு ஊருக்குள் தகவல் சொல்ல விரைந்தார்.

அவர் ஆட்களுடன் திரும்பியபோது, அங்கே கண்மாயின் கரை அடைக்கப்பட்டு இருந்தது. ஊரார் திகைத்தனர். அப்போது, ஓலைப் பெட்டியிலிருந்து பேரொளியாய் தோன்றிய ஐயனார், ‘‘நான்தான் உங்கள் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்காமல் காப்பாற்றினேன். எனக்கும் என் பரிவார தெய்வங்களுக்கும் இந்த இடத்தில் கோயில் கட்டி வழிபட்டால், வேண்டியதை எல்லாம் தருவேன்’’ என்று கூறி அருளினார்.

இந்தச் செய்தியை வழிப்போக்கரும், கிராம மக்களும் செவல்பட்டி ஜமீன் தாரிடம் தெரிவித்தனர். பின்னர் ஜமீன்தார் ஐயனார் குறிப்பிட்ட இடத்தில் ஆலயம் எழுப்பினார். ஒவ்வொரு மாதமும் ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமையில், இக்கோயிலுக்கு வந்து நீராடி மூன்று முறை பிரதட்சிணம் செய்து வழிபட்டால், சகல மனக் கஷ்டங்களும் தீரும்!

ஐயனுக்குப் பால் பாயசம்!

தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் பழையகாயலிலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ளது அகரம் கிராமம். இங்கு சாந்நித்தியத்துடன் கோயில்கொண்டிருக்கிறார் துரையப்ப சாஸ்தா.

சுவாமி சரணம்!

இந்தக் கிராமம் முழுவதுமே அக்ர ஹாரங்களாக (வேதியர்கள் வசித்த பகுதி) திகழ்ந்ததால், இவ்வூர் ‘அகரம்’ எனப் பெயர்பெற்றதாம். இதன் வேத காலத்துப்பெயர் ‘மணி மஹோதய அக்ரஹாரம்’ என்பதாகும்.

ஒருமுறை, கடலில் சிக்கிக்கொண்ட ஆங்கிலேய துரைமார்களுக்கு, ஜோதியாய் ஒளிர்ந்து வழிகாட்டிய தெய்வம் இவர். துரைமார்கள் நன்றிப் பெருக்குடன் வந்து வழிபட்டார்கள். இதையொட்டி `துரையப்ப சாஸ்தா' என்ற திருப்பெயர் இவருக்கு வந்தது என்கிறார்கள்.

இப்பகுதியில், திருமணம் பேசி முடித்ததும் முதல் பத்திரிகையை சாஸ்தாவிடம் வைத்து வணங்குகின்றனர். குழந்தைப் பாக்கியம் இல்லாத தம்பதியர், இக்கோயிலிலுள்ள கிணற்றில் குளித்துவிட்டுப் புத்தாடை அணிந்து, சாஸ்தா முன்பு சந்தான கோபால ஹோமம் செய்து வழிபடவேண்டும். மேலும் பால், விபூதி, நெய், இளநீர் அபிஷேகம் செய்து வெண்பட்டு வேஷ்டி, வெண்பட்டு துண்டு, ரோஜா மாலை சாற்றி, பால் பாயசம் நிவேதனம் செய்து சாஸ்தாவை மனமுருகி வணங்க வேண்டும். பின்னர், சுவாமிக்கு நிவேதனம் செய்யப்பட்ட பால் பாயசம் தம்பதியருக்குக் கொடுக்கப்படுகிறது. இந்த வழிபாட்டின் மூலம் சாஸ்தாவின் திருவருளால் விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

சுருளி மலை!

தேனி மாவட்டம், கம்பத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள சுருளி மலை என்னும் இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் அருள்புரிகிறார் சுவாமி ஐயப்பன். சிலப்பதிகாரத்தில் ‘தென் கயிலாயம்’ என்று சிறப்பித்துச் சொல்லப்படும் சுருளி தீர்த்தம் பகுதி தேவர்களும், ரிஷிகளும், முனிவர்களும் தவம் புரிந்த புனிதத் தலமாகும்.

சுவாமி சரணம்!

திருச்சியைச் சேர்ந்த சிவஶ்ரீகணபதி சுப்ரமணியம் என்ற பெரியவர் காசிக்கு யாத்திரை சென்று திரும்பும் வழியில், ஆந்திர மாநிலம் பெர்காம்பூரில் இருந்த சிதானந்த ஆசிரமத்தில் சில நாட்கள் தங்கியிருந்தார். அப்போது அங்குள்ளவர்கள் மூலம் சுருளிமலையின் மகிமையை அறிந்தார்.

முற்காலத்தில் பந்தளராஜாவின் வம்சத்தினர் சுருளி தீர்த்தத்தில் நீராடிவிட்டு, கம்பத்தில் உள்ள கம்பராயப் பெருமாள் கோயிலில் தரிசனம் செய்த பிறகே, சபரிமலை ஐயப்பன் கோயிலில் கொடியேற்றம் செய்த தகவலையும் அறிந்தார். சுருளிமலைக்குச் சென்றவர் சபரி மலை போன்று அங்கே ஐயனுக்கு ஓர் ஆலயம் அமைக்க விரும்பினார். அதற்கான பொறுப்பைத் தன் நண்பரின் மகனான மாணிக்கராஜ சாஸ்திரிகளிடம் ஒப்படைத்து விட்டு, யாத்திரையைத் தொடர்ந்தார்.

ஆனால் மாணிக்கராஜ சாஸ்திரிகளாலும் அவருடைய காலத்துக்குள் அந்தத் திருப்பணியை முடிக்க முடியவில்லை. அவருக்குப் பின் வந்தவர்களின் தொடர் முயற்சிகளின் காரணமாக, 1971-ம் ஆண்டு சபரிமலை நம்பூதிரிகளால் தேவ பிரச்னம் பார்க்கப்பட்டு, பதினெட்டு படிகளுடன் கூடிய கோயில் நிர்மாணிக்கப்பட்டதாம்.

இங்கே ஐயனின் ஆலயத்தில் சந்நிதியின் காவலர்களாக வலப்புறம் கடுத்த சாமியும், இடப்புறம் கருப்பண்ண சாமியும் தேவியருடன் காட்சி தருகின்றனர். ராகு கேதுவுடன் சுக்ரனும் இந்தக் கோயிலில் அருள்புரிகின்றார். இதனால், சர்ப்ப தோஷங்களால் பாதிக்கப்படும் அன்பர்கள் இங்கு வந்து ஐயப்பனை வழிபட்டால், தோஷங்கள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

சுவாமி சரணம்!

மகா சாஸ்தா அனுக்கிரஹ கவசம்!

`கலியுகத்தில் உயிர்கள் நன்மைபெற வழி என்ன?' என்று கேட்ட உமையவளுக்கு சாஸ்தாவின் மகிமையைக் கூறி, மஹாசாஸ்தா அனுக்ரஹ கவசம் குறித்து உபதேசித்தாராம் ஈசன்.

ஶ்ரீகுஹ்யரத்ன சிந்தாமணி எனும் ஞானநூலில் இந்த ஸ்தோத்திரம் இடம்பெற்றுள்ளது. சத்ரு பயம், வியாதி, யுத்த பயம், கடன், கெட்ட கனவு முதலான தீவினைகளைக் களைந்து சகல நன்மைகளையும் அருளும் மஹா சாஸ்தா அனுக்ரஹ கவசத்தின் தியானப் பகுதி இங்கே உங்களுக்காக.

தேஜோ மண்டலமத்யகம் த்ரிநயனம்
திவ்யாம்பராலங்க்ருதம்
தேவம் புஷ்பசரேக்ஷுகார்முக
லசன்மாணிக்ய பாத்ராபயம்;
பிப்ரானம் கரபங்கஜை: மதகஜ
ஸ்கந்தாதி ரூடம்விபும்
ஸாஸ்தாரம் சரணம்
பஜாமி ஸததம்
த்ரைலோக்ய ஸம்மோஹனம்


கருத்து: ஒளிக்கூட்டத்தின் நடுவில் இருப்பவரும், மூன்று கண்களை உடையவரும், சிறந்த வஸ்திரத்தால் அலங்கரிக்கப்பட்டவரும், தேவரும், புஷ்ப பாணம், கரும்பாகிய வில், மாணிக்கத்தால் செய்த பாத்திரம், அபய முத்திரை ஆகிய நான்கையும் தாமரை போன்ற கைகளில் தரித்திருப்பவரும், மத யானையின் முதுகின் மேல் அமர்ந்தவரும், மூவுலகங்களையும் மோஹிக்கச் செய்பவருமான சாஸ்தாவைச் சரணடைகிறேன்.

சுவாமி சரணம்!

ஐயனின் விரதம்!

பரிமலையைத் தவிர மற்ற கோயில்களில் சாஸ்தாவை வீராசனத்தில் காணலாம். அதன்படி, சாஸ்தாவின் ஒரு கால் நிலத்திலும், மறு கால் மடித்தபடியும் இருக்கும். மடித்த காலையும் இடுப்பையும் சேர்த்துக் கட்டப்பட்டிருக்கும் பட்டம் வீரப்பட்டம் எனப்படும்.

ஐயப்பனுக்காக நாம் விரதம் இருக்கிறோம் என்று நாம் நினைப்பதே தவறான அபிப்ராயம். மாறாக, ஐயப்பன்தான் நமக்காக சபரிமலையில் தவம் இருக்கிறார். வலக்கரத்தின் ஆட்காட்டி விரலால் பெருவிரலைத் தொட்டுக்கொண்டு ‘சின்முத்திரை’ காட்டுகிறார். ‘சித்’ என்றால் ‘அறிவு’ எனப் பொருள். இந்த வார்த்தையே காலப்போக்கில் மருவி ‘சின்’ என மாறியது.

எது உண்மையான அறிவு என்பதை விளக்குவதுதான், இந்த ‘சின்’ முத்திரையாகும். ‘சின்’ முத்திரையுடன் தியானக் கோலத்தில் உள்ள ஐயனின் தரிசனம், பிறவிப் பயனை அடைந்த சந்தோஷத்தைத் தருகிறது!

ஐயப்பனின் வீர வாள்!

சுவாமி ஐயப்பனின் படை வீடுகளில் ஒன்று அச்சங்கோவில். இங்கே அரசனாகக் காட்சி தருகிறார் ஐயப்பன். கேரளத்தின் எல்லைக்குள் இவ்வூர் அமைந்திருந்தாலும், தென்காசியிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவிலேயே உள்ளது. மண்டல மகோற்ஸவம் இங்கு விசேஷம். ஐயப்பன் பயன்படுத்திய ‘வாள்’ இத்திருத்தலத்தில் வைக்கப் பட்டிருக்கிறது. இத்திருக்கோயில் பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப் பட்டது என்கிறார்கள். சுவாமி சந்நிதியில் மந்திரித்து தரப்படும் தீர்த்தமும் சந்தனமும் விஷக்கடி நீக்கும் அருமருந்தாகப் போற்றப் படுகின்றன.

யாத்திரைக்கு முன்
தேங்காய் உடைக்க வேண்டும்... ஏன்?

பரிமலை யாத்திரையின்போது, கட்டுநிறை முடிந்து யாத்திரை கிளம்புவதற்கு முன் நாம் தேங்காய் உடைத்துவிட்டுக் கிளம்புகிறோம். இது, நமக்காகக் காவல் பொறுப்பை ஏற்கும் ஐயப்பனின் பரிவார தெய்வங் களுக்காக உடைப்பது. அதேபோல், ஐயப்ப பக்தர்கள் ஐயனை அக்னி வடிவத்தில் ஜோதிஸ்வரூபனாகவே காண்கின்றனர். அதற்கான வழிபாடே `கற்பூர ஆழி' ஆகும்.

மண்டல விரதம் எத்தனை நாள்கள்?

ண்டல விரதம் என்பது பண்டைய காலத்தில் 56 நாள்களாகவே கூறப்பட்டது. கார்த்திகை 1-ம் நாள் மாலையிடுவது முதல் மகரவிளக்கு தரிசனம் வரையிலும் ஒரு சபரிமலை யாத்திரையாகக் கொள்ளப்படும்.

ஐயனின் கோயிலில் தீபம் ஏற்றினால்...

சாஸ்தா வழிபாடு தரும் பலன்கள் குறித்து ஞானநூல்கள் விவரிக் கின்றன. சாஸ்தாவுக்கு ஆலயம் அமைப்பவர்களது முன்னேழு தலைமுறையும் பின்னேழு தலைமுறையும் ஐயனின் பதத்தை அடைந்து இன்புறுவர்.

ஐயனின் பூஜைகளுக்கென பசுவும் கன்றும் ஆலயத்துக்கு அளிப்பது, சகல பாவங்களையும் போக்க வல்லது; அவர்கள் கோ லோகத்தை அடைவர்.

சாஸ்தாவின் திருக்கோயிலில் பசுஞ்சாணமிட்டு மெழுகிக் கோலமிடுபவர், இந்திர லோகத்தை அடைவார்கள். ஐயனின் ஆலயத்தில் நல்லெண்ணெய், நெய் தீபம் ஏற்றுவோர் சரீர பீடைகளும், கிரக பீடைகளும் ஒழிந்து நல்வாழ்வு பெறுவர்.

சாஸ்தா வழிபாடு தரும் பலன்கள் குறித்து ஞானநூல்கள் விவரிக் கின்றன. சாஸ்தாவுக்கு ஆலயம் அமைப்பவர்களது முன்னேழு தலைமுறையும் பின்னேழு தலைமுறையும் ஐயனின் பதத்தை அடைந்து இன்புறுவர்.

ஐயனின் பூஜைகளுக்கென பசுவும் கன்றும் ஆலயத்துக்கு அளிப்பது, சகல பாவங்களையும் போக்க வல்லது; அவர்கள் கோ லோகத்தை அடைவர்.

சாஸ்தாவின் திருக்கோயிலில் பசுஞ்சாணமிட்டு மெழுகிக் கோலமிடுபவர், இந்திர லோகத்தை அடைவார்கள். ஐயனின் ஆலயத்தில் நல்லெண்ணெய், நெய் தீபம் ஏற்றுவோர் சரீர பீடைகளும், கிரக பீடைகளும் ஒழிந்து நல்வாழ்வு பெறுவர்.? எரிமேலிக்கு ஏன் முக்கியத்துவம்

ஐயப்பன் உபதேசித்த கீதை!

ணிகண்ட அவதார காலத்தில், பகவான் பூதநாதனால், அவரின் வளர்ப்புத் தந்தையான ராஜசேகர பாண்டியனுக்கு உபதேசம் நிகழ்ந்தது. அந்த உபதேசத் தொகுப்பே `பூதநாத கீதை’.