திருத்தலங்கள்
திருக்கதைகள்
Published:Updated:

ஏழு ஜன்ம பாவங்கள் விலகும்!

ரதசப்தமி
பிரீமியம் ஸ்டோரி
News
ரதசப்தமி

ரத சப்தமி வழிபாடு ஹ. கல்யாணி

அனுதினமும் நாம் நேரில் தரிசித்து வழிபடும் தெய்வம் சூரியதேவன். பெரிய சுடராகப் பிரகாசித்து உலகை வாழ்வைக்கும் சூரியபகவான் ஒருமுறை ஒளிமங்கிப் போனார். இறையருளால் அவர் மீண்டும் ஒளி பெற்ற நாள் ரத சப்தமி. மகாவிஷ்ணு சூரியதேவனுக்கு ஒற்றைச் சக்கரம் கொண்டதும் ஏழு குதிரைகள் பூட்டப்பட்டதுமான ரதத்தைச் சூரியனுக்கு வழங்கியதும் இந்த நாளில்தான்.

ஏழு ஜன்ம பாவங்கள் விலகும்!

தை மாதம் வளர்பிறை சப்தமி அன்றுதான் ‘ரத சப்தமி’ கொண்டாடப் படுகிறது. ரத சப்தமி அன்று அதிகாலையிலேயே சப்தமி திதி இருந்தால், அன்றே விரதம் இருந்து பூஜை செய்ய வேண்டும். ஒரு வேளை சப்தமி திதி - இரண்டு நாள் தொடர்ந்து அதிகாலையில் இருக்கும்படி வந்தால், முதல் நாளிலேயே விரதத்தையும் பூஜையையும் செய்ய வேண்டும்.

இந்த வருடம் 8.2.2022 செவ்வாய்க் கிழமை அன்று ரதசப்தமி வருகிறது. அன்று அதிகாலையில் எழுந்து நீராட வேண்டும். தங்கம், வெள்ளி, தாமிரம் முதலானவற்றால் ஆன ஏதாவது ஒரு பாத்திரத்தில் எண்ணெய் வார்த்து தீபம் ஏற்ற வேண்டும். சூரிய வடிவத்தை வரைந்து (அல்லது பிம்பமாக வைத்து) பூஜை செய்ய வேண்டும். அதன் பிறகு அந்தத் தீபத்தை கங்கை-காவிரி முதலான புண்ணிய நதிகளில் விட வேண்டும். இதன் பிறகு பித்ருக்களுக்கு உண்டான தர்ப்பணம் முதலானவற்றைச் செய்ய வேண்டும். இவ்வாறு முறைப்படி செய்வதன் மூலம் ஏழு ஜன்ம பாவங்களும் விலகிப் போகும்.

ரத சப்தமி அன்று குளிக்கும் முறை: ஏழு எருக்கு இலைகள், ஏழு இலந்தை இலைகள் எடுத்து ஒன்றுசேர்த்து, அவற்றுடன் அட்சதை, மஞ்சள்தூள் சேர்த்துத் தலையில் வைத்தபடி பெண்கள் நீராடுவது மரபு. ஆண்களாக இருந்தால் மேலே சொன்னவாறு எருக்கு, இலந்தை இலைகளுடன் அட்சதை மட்டும் சேர்த்து உச்சந் தலையில் வைத்து நீராடுவது மரபு. பெற்றோர் இல்லாதவர்கள் மேற்சொன்ன இலைகளுடன் பச்சரிசியும் எள்ளும் சேர்த்து வைத்து நீராடவேண்டும்.

மிக அற்புதமான வழிபாடு இது. ஆரோக்கியம், நோய் இல்லாமை, செல்வம், புத்திரப்பேறு, நீண்ட ஆயுள், புண்ணியம், பகைவர்களை வெல்லும் சக்தி, வெற்றி, சொத்து (நிலம்), தானியம் முதலியவற்றைத் தரக் கூடிய விரதம் இது. மனக்கவலை, வியாதி ஆகியவற்றை நீக்கும்.