Published:Updated:

துர்வாசர் வழிபட்ட ஈசன்!

ஸ்ரீசோமநாதேஸ்வரர்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்ரீசோமநாதேஸ்வரர்

இந்தக் கோயிலின் சிறப்பம்சம்- பிராகாரத்தின் தென்மேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் பஞ்சலிங்க சந்நிதிகள்.

கிருஷ்ணகிரியிலிருந்து மேற்கே சுமார் 32 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஊர், ராயக்கோட்டை. இங்கு, ஓங்கி உயர்ந்து நிற்கும் சிவதுர்வாச மலையில் துர்வாசர் தவம் செய்த குகை உள்ளது.

அடிக்கடி தம்மை தரிசிக்க வரும் அன்பர்களால் தனது தவத்துக்கு இடையூறு ஏற்படுவதாகக் கருதிய துர்வாசர், குகையின் வாயிலை அடைத்துக் கொண்டு விட்டாராம். இன்றும் இந்தக் குகையில் அவரது அருட்கடாட்சம் நிறைந்திருப்பதாக நம்பிக்கை.

புரட்டாசிச் சனிக் கிழமைகளில் இந்தக் குகை வாயிலில் சிறப்பான வழிபாடுகள் நடைபெறுகின்றன. இதில், புது மணத் தம்பதிகளும் குழந்தை பாக்கியம் வேண்டுவோரும் கலந்து கொண்டால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதிகம். சிவதுர்வாச மலையில் மட்டுமல்ல, இந்த ஊரில் உள்ள ஸ்ரீசோமநாதேஸ்வரர் கோயிலிலும் துர்வாசரை தரிசிக்கலாம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஒரு காலத்தில் இந்தப் பகுதியை, ஜகதேவ ராயர் எனும் சிற்றரசர் ஆட்சி செய்தார். துர்வாச முனிவரின் பெருமையையும் அவர் வழிபட்ட சுயம்பு லிங்கத்தின் மகிமையையும் அறிந்த இந்தமன்னர், இங்கு ஒரு சிவாலயம் அமைக்க விரும்பினார். அப்படி உருவானதே ஸ்ரீகாமாட்சியம்மன் சமேத ஸ்ரீசோமநாதேஸ்வரர் ஆலயம்.

ஸ்ரீசோமநாதேஸ்வரர்
ஸ்ரீசோமநாதேஸ்வரர்

திருக்கோயிலின் உள்ளே கருவறையில் சுயம்புலிங்கமாக காட்சி தருகிறார் ஸ்ரீசோமநாதேஸ்வரர். இந்த இறைவனை துர்வாசர் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குவது போன்றதொரு சிற்பத்தை கருவறையில் காணலாம். இங்கு, துர்வாசருக்கு தனிச் சந்நிதியும் உண்டு. ஸ்ரீகாமாட்சி அம்பாள் நான்கு கரங்களுடன், அழகே உருவாக தரிசனம் தருகிறாள்.

துர்வாசர் வழிபட்ட ஈசன்!

இந்தக் கோயிலின் சிறப்பம்சம்- பிராகாரத்தின் தென்மேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் பஞ்சலிங்க சந்நிதிகள். தனித்தனியே அமைந்திருக்கும் இந்தச் சந்நிதிகளில் பஞ்ச பூதங்களைக் குறிக்கும் வகையில் காட்சி தரும் பஞ்ச லிங்கேஸ்வரர்களை தரிசிக்கலாம்.

ஆலயத்தின் தென்கிழக்குப் பகுதியில் (கிருஷ்ணகிரி நெடுஞ்சாலை) உள்ளது வஜ்ஜிரநாதேஸ்வரர் தீர்த்தம். அர்ஜுனன் உருவாக்கிய தீர்த்தமாம். இதில், மூதாதையர்களுக்கு பிண்டம் வைத்து வழிபட்டால், இறந்த முன்னோர்கள் மோட்சம் அடைவர் என்பது நம்பிக்கை.

- எஸ்.கண்ணன், சென்னை-59