Published:Updated:

பாபாவை பற்றிக்கொள்ளுங்கள்!

சாயிபாபா
பிரீமியம் ஸ்டோரி
சாயிபாபா

ஷீர்டியில் இருந்துகொண்டு உலகெங்கும் அருளாட்சி செய்யும் சாயிபாபா, ஐந்தாண்டுகளுக்கு முன்பு என் வீட்டுக்கு எதிரே ஸ்ரீலட்சுமிகணபதி ஆலயத்தின் ஒரு சந்நிதியில் எழுந்தருளினார்.

பாபாவை பற்றிக்கொள்ளுங்கள்!

ஷீர்டியில் இருந்துகொண்டு உலகெங்கும் அருளாட்சி செய்யும் சாயிபாபா, ஐந்தாண்டுகளுக்கு முன்பு என் வீட்டுக்கு எதிரே ஸ்ரீலட்சுமிகணபதி ஆலயத்தின் ஒரு சந்நிதியில் எழுந்தருளினார்.

Published:Updated:
சாயிபாபா
பிரீமியம் ஸ்டோரி
சாயிபாபா
`ஷீர்டி ஸ்ரீசாயிபாபா காமதேனுவைப் போல பக்தர்கள் வேண்டி விரும்பிப் பிரார்த்திக்கும் இடதுக்கே சென்று அவர்களது தேவையை நிறைவேற்றித் தருபவர்’ என்று நம்புகிறார்கள் சாயி பக்தர்கள். அது என்றுமே உண்மை என்று சாட்சி சொல்கிறார், சென்னை அம்பத்தூரில் வசிக்கும் வாசகர் கே.வசந்தகுமார்.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அப்படி அவர் வாழ்வில் என்னதான் நடந்தது, சகல ஜீவன்களுக்கும் தாயாக விளங்கி கருணைப் பொழிந்துவரும் பகவான் சாயிநாதர் அவருக்குள் விளைவித்த மாற்றம் என்ன என்பதை அவரே கூறக் கேட்போமா!

“ஷீர்டியில் இருந்துகொண்டு உலகெங்கும் அருளாட்சி செய்யும் சாயிபாபா, ஐந்தாண்டுகளுக்கு முன்பு என் வீட்டுக்கு எதிரே ஸ்ரீலட்சுமிகணபதி ஆலயத்தின் ஒரு சந்நிதியில் எழுந்தருளினார். அவர் மீது மாறாத பக்தி கொண்ட நான், ஒருமுறை வழிபாட்டில் மராத்தியப் பாடல்கள் மட்டுமே அங்கு ஒலிப்பதைக் கண்டேன்.

`எல்லோருக்கும் புரியும்வகையில் அழகுத் தமிழில் பாபாவுக்குப் பாடல்கள் எழுதி அதை ஒலிக்கச் செய்தால் எப்படி இருக்கும்; அவர் கருணையை நெக்குருகி யாரவது எழுதினால் சிறப்பாக இருக்குமே’ என்று எண்ணினேன்.

`அது என்ன யாராவது செய்தால்...நீயே செய்' என்று பாபா உள்ளிருந்து ஆணையிட்டார். திடுக்கிட்டுப் போன நான், ‘நான் பாட்டெழுதி, பாடுவதா’ என்று யோசித்தாலும்... இது பகவான் பாபா விருப்பம். நாம் ஏன் யோசிக்க வேண்டும். அவரைப் பாடவேண்டும் என்றால் பேனா கூட தானே எழுதிக் கொள்ளுமே என்ற எண்ணம் எழ, எழுதத் தொடங்கினேன். பாபாவின் கருணையால் மடை திறந்த வெள்ளமாய் பாடல் வரிகள் வந்து விழுந்தன. பாபாவின் கருணை மழையால் பாடல் ஒன்று தயாரானது. அதற்கு ஓர் இசையமைப்பாளர் இசையமைக்க, நானே பாடி, பாபாவின் அருள் கூறும் பாடல் அழகாக உருவானது. அந்த பாடல் வெளியான பிறகு என் வாழ்வில் வளர்ச்சியை மட்டுமே கண்டேன்.

பாபாவை பற்றிக்கொள்ளுங்கள்!

தினம்தோறும் அந்த பாடல் என் வீட்டெதிரே இருக்கும் ஆலயத்தில் ஒலிக்கும்போதெல்லாம் பாபாவின் கருணையை எண்ணி நெகிழ்ந்து போவேன். சிலர் அந்தப் பாடலைக் கேட்டுவிட்டு, அது மனதுக்கு பெரும் நிம்மதியை அளிப்பதாகக் கூறுவார்கள். எல்லாம் பாபாவின் செயல் என்று எண்ணிக் கொள்வேன். இப்போது அந்த கோயிலின் நிர்வாகிகளுள் ஒருவனாக செயல்பட்டு வருகிறேன். நாளும் மகிழ்ச்சியும் நிம்மதியுமாக என் வாழ்க்கை கடந்து போகிறது. எல்லாமே பாபாவின் கருணை!

2000-ம் ஆண்டில் ஷீர்டிக்குச் சென்று பாபாவை தரிசித்த நான், மீண்டும் விரைவில் அங்கு செல்ல ஆவல் கொண்டுள்ளேன். என் நியாயமான வேண்டுதலை பகவான் பாபா செவிமடுப்பார் என்றே எண்ணுகிறேன். பாபாவைப் பற்றிக் கொண்டால், வாழ்வில் எப்போதும் மகிழ்ச்சியைக் காணலாம் என்பது என் அனுபவ உண்மை” என்று நெகிழ்ந்து போகிறார் வாசகர் கே.வசந்தகுமார்.