`பிறரை விட உயர்ந்தவன்’ என்றோ, ‘மாபெரும் ஞானி’ என்றோ தன்னை ஒருபோதும் கருதியதே இல்லை ஸ்ரீரமணர். தன்னை எப்போதும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் எளிமையாகவே வாழ்ந்தார் இந்த மகான்.

ஒருமுறை திருவண்ணாமலை விரூபாக்ஷி குகையில் சிறிய அளவில் ஒரு கட்டடப் பணியை ரமணரே மேற்கொண்டு செய்தார். அப்போது நடந்த வேடிக்கைச் சம்பவம் ஒன்று...

முதன் முறையாக ஸ்ரீரமணரை தரிசிக்க வந்த அன்பர் ஒருவர், ‘ஸ்வாமி எங்கே?’ என அவரிடமே கேட்டார். உடனே ரமணரும், ‘ஸ்வாமியா... இப்பதான் எங்கேயோ போனார்’ என்று கூறிவிட்டு வேலையைத் தொடர்ந்தார்.

வந்தவர், மலையிலிருந்து இறங்க ஆரம்பித்துவிட்டார். பகவானைத் தரிசிக்க முடியவில்லையே என்கிற ஏக்கத்தை, எதிரில் வந்த எச்சம்மா என்ற பக்தையிடம் சொன்னார். ‘வாருங்கள் என்னுடன். ஸ்வாமியைக் காட்டுகிறேன்’ என்று அவரை அழைத்து வந்து பகவான் முன் நிறுத்தினார் அந்த பக்தை.

அன்பர் திகைத்தார்; தான் இங்கே வந்து சென்ற விவரத்தை எச்சம்மாவிடம் சொன்னார். ‘இவரிடம் ஏன் இப்படிச் சொன்னீர்கள்?’ என்று உரிமையுடன் ரமணரிடம் கேட்டார் எச்சம்மா. பகவான் சிரித்தபடி, ‘நான்தான் ஸ்வாமி என்று அட்டையில் எழுதித் தொங்கவிட்டுக் கொள்ள வேண்டுமா என்ன?’ என்றாராம்!

- ஜெயா ராஜாமணி, மதுரை-2