Published:Updated:

பெரியபாதையில் தரிசனம் கொடுத்த சாயி!

சாயி
பிரீமியம் ஸ்டோரி
சாயி

சாயி

பெரியபாதையில் தரிசனம் கொடுத்த சாயி!

சாயி

Published:Updated:
சாயி
பிரீமியம் ஸ்டோரி
சாயி

பாபா, என் உயிரோடு கலந்த பெயர். புனேயில் பிறந்ததாலோ என்னவோ ஷீர்டி சாயி மீது எனக்கு ஓர் அதீத ஈர்ப்பு எப்போதும் உண்டு. அதேபோன்று சபரிமலை ஐயப்பன் மீதும் பக்தி அதிகம்.

பாபா கருணை
பாபா கருணை

வருடம் தோறும் பெரிய பாதையில் சென்று ஐயனை தரிசித்து வருவது வழக்கம். அப்படி 2009-ல் பெரியபாதை பயணத்தின்போது பாபா புரிந்த பெருங்கருணையை உங்களோடு பகிர விரும்புகிறேன்.

நான் கொஞ்சம் மெதுவாக நடப்பேன். ஐந்துபேர் மட்டும் தங்களுடைய நடைவேகத்தைக் குறைத்துக் கொண்டு என்னுடன் துணைக்கு வருவார் கள். அன்று பெரியபாதை வழி சென்று கரிமலை உச்சி அடைந்து வட்டோம். அங்கு கிடைத்த கப்ப கஞ்சி குடித்தோம். என்னுடன் வந்தவர்கள், `மதியம் இரண்டரை மணிக்கே கரிமலையிலிருந்து இறங்க ஆரம்பிக்க வேண்டும்' என்றும் `மாலை ஜோதி தரிசனம் காண பெரியானை வட்டம் போகத் தோதாக இருக்கும்' என்றும் சொன்னார்கள்.

நான் கொஞ்சம் அசிரத்தையாக, `என்ன பெரிய ஜோதி தரிசனம். அதான் ஏழு எட்டு முறை பார்த் தாச்சே. நீங்க அஞ்சுபேரும் போங்க. நான் கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டு வருகிறேன்' என்று அதிமேதாவி யாகப் பேசிவிட்டேன். அவர்கள் ஐந்துபேரும் கிளம்பி விட்டார்கள். நான் மாலை நான்கு மணிக்குக் கரிமலை இறங்க ஆரம்பித்தேன். மலைகளினூடே இருக்கும் காட்டுப் பாதை என்பதால் நாலரைமணிக்கே வெளிச்சம் மங்க ஆரம்பித்துவிட்டது.

நான் எதிர்பாத்ததைவிட அதிகமாக இருள் சூழ்ந்தது. கரிமலை கடைசி இறக்கம் வந்து, இடதுப் பக்கம் திரும்பினால் பெரியானை வட்டம் தொடக்கம் வந்துவிடும். நானும் கரிமலை கடைசி இறக்கம் வந்து விட்டேன். அப்போது வலது பாதத்தில் ஒரு முள் குத்திவிட்டது. `ஐயப்பா' என்று கதறத்தான் முடிந்தது. முன்னும் பின்னும் வழியில் யாரும் இல்லை. அந்தக் கணம் என் மனதில் சூழ்ந்த அச்சத்தைச் சொல்லிமுடியாது. ஐயனிடம் இறைஞ்சினேன். சாயியையும் பிரார்த்தித் தேன். `சாயி மன்னித்துவிடு... என்னை வழி நடத்து' என்று மனதுக்குள் வேண்டிக்கொண்டே வலியோடு நடக்கத் தொடங்கினேன்.

அப்போது பின்புறம் ஏதோ அசைவதுபோல் இருந்தது. திருப்பிப் பார்த்தேன். வயதான ஐயப்ப சாமி ஒருவர் வந்துகொண்டிருந்தார். நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அவர் தலையில் பாபாவைப் போலவே கலர் துண்டு ஒன்றைக் கட்டியிருந்தார். பக்கத்தில் வந்தவர், ``என்ன முள் குத்திடுச்சா'' என்று கேட்டு, என் பாதத்தை அங்கிருக்கும் பாறை மேல் வைக்கச்சொல்லி, முள் குத்திய இடத்தைச் சுத்தம் செய்து அவரிடமிருந்த பாண்டேஜ் துணியால் கட்டு போட்டுவிட்டார். பிறகு, ``மெதுவா நடந்து போங்க. ஜோதி பாத்துடலாம். ஆனால் இனிமே `என்ன பெரிய ஜோதி' அப்படீன்னெல்லாம் பேசாதீங்க'' என்றார். நான் அதிர்ந்துபோனேன்.

கரிமலை உச்சியில், உடன் வந்த சாமிகளிடம் பேசியதை இவர் எப்படிக் கேட்டார்... யார் இவர்... என நான் யோசனையில் இருக்கும்போதே அவர் நடக்கத் தொடங்கிவிட்டார். அந்தப் பெரியவரை கரிமலை கடைசி இறக்கத்தில் பார்த்ததோடு சரி. அதன்பின் வழியில் எங்குமே பார்க்க முடியவில்லை.நான் எங்கள் குழு தங்க ஏற்பாடு செய்யப்பட்ட விரியை அடையும்போது மாலை ஆறரை மணி. குருசாமி மட்டும்தான் இருந்தார். மற்றவர்களெல்லாம் பம்பைக் கரைக்கு ஜோதி பார்க்கப் போய் விட்டார்கள்.

நான் விரியில் இருந்தே குருசாமியோடு சேர்ந்து ஜோதி தரிசனம் கண்டேன். தரிசனம் நிறைவுற்றதும் எனக்கு அந்தப் பெரியவரின் நினைவு வந்தது. நிச்சயம் அது நான் வணங்கும் சாயி நாதர்தான் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை. என்னை வழிநடத்திப் பாதுகாத்த சாயிக்கு இன்றும் நான் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

ஷீர்டி சாயி மஹராஜ் கி ஜெய்!

- கே.எஸ்.ராமகிருஷ்ணன், சென்னை-80