Published:Updated:

'எப்போதும் என்னுடன் பாபா!'

ஶ்ரீசாயிபாபா
பிரீமியம் ஸ்டோரி
News
ஶ்ரீசாயிபாபா

சிறப்புப் போட்டி ஶ்ரீசாயிபாபா திருவருள் - வாசகர் அனுபவம்

என் பெயர் நாராயண சுவாமி. வயது தொண்ணூறு ஆகிறது. பல வருடங்களாக பாபாவை வணங்கி வருகிறேன். மேற்கு மாம்பலத்தில்தான் வீடு. அங்கேயே ஜெய்சங்கர் தெருவில் இருக்கும் பாபாவின் கோயிலுக்கு வியாழன் தோறும் தவறாமல் சென்று வருவது வழக்கம்.

'எப்போதும் என்னுடன் பாபா!'

முதுமையிலும் நான் நிம்மதியான வாழ்வை மேற்கொள்ள பாபாவின் அருளே காரணம். அதற்கு உதாரணமாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஓர் அற்புத நிகழ்வை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

ஒரு நாள் காலை எழுந்ததிலிருந்து வலதுகாலில் வலி. என்னால் ஓர் அடிகூட எடுத்துவைக்க முடியவில்லை. வயோதிகத்தால் இந்த வலி ஏற்படுகிறது என்றும் இதற்கெல்லாம் மருந்து கிடையாது என்றும் சொன்னார்கள். என்னால் நடக்கவே முடியவில்லை. அந்த அளவுக்கு வலி.

மறுநாள் வியாழக்கிழமை என்பதால் பாபா கோயிலுக்குப் போக முடியாது என்பதுவே என் கவலையாக இருந்தது. விரதமும் இருக்கக் கூடாது என்று வீட்டில் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்கள். முதுமையினால் உடல் நலிவது இயற்கைதான். ஆனால் அது என் உயிருக்கு உயிரான பாபாவை தரிசனம் செய்ய முடியாத அளவுக்கு மோசமாகச் செய்கிறதே என்று வருந்தினேன்.

அந்த இரவில் நான் உறங்கவேயில்லை. பாபாவையே தியானம் செய்துகொண்டிருந்தேன். கடைசியில் `பாபாவின் சித்தம் இதுதான் என்றால் அதை ஏற்றுக்கொள்வோம்’ என்று முடிவு செய்தேன். மனம் இயலாமையை ஏற்றுக்கொண்டு விட்டது.

என் சேமிப்பிலிருந்து ஒரு ஆயிரம் ரூபாயை மட்டும் அன்னதானத் துக்குத் தரும்படிச் சொல்லலாம் என்று நினைத்துக் கொண்டேன்.

அதிகாலையில் சிறிது நேரம் கண் அயர்ந்தேன். யாரோ என் கால்களைத் தொட்டதுபோல் இருந்தது. கண் விழித்துப் பார்த்தேன் யாருமே இல்லை. எதிரே சாயியின் படம் மட்டும் இருந்தது.

எனக்குக் கால்வலி இருந்த நினைவெல்லாம் பாபா என் வேண்டுதலை ஏற்று என் வயோதிகத்தின் பிரச்னைகளிலிருந்து விடுதலை கொடுத்திருக்கிறார் என்று புரிந்தது. அன்று வழக்கம்போல சாயி கோயிலுக்குச் சென்றேன். சாயி புன்னகை மாறாமல் தரிசனம் கொடுத்தார். வேண்டிக்கொண்டதுபோலவே அன்னதானத்துக்குத் தந்துவிட்டு மன நிறைவுடன் வந்தேன்.

என் சாயி எப்போதும் என்னோடு இருந்து அருள் செய்கிறார்.

- எஸ். நாராயண சுவாமி, சென்னை -33

ஶ்ரீசாயிபாபா சிறப்புக் கட்டுரைப் போட்டி

வெற்றிபெற்றோர் விவரம்:

நாராயண சுவாமி, சென்னை -33
ஜயலட்சுமி, சென்னை 125
அயன்புரம் - D. சத்தியநாராயணன்
புவனேஸ்வரி,மூலத்தோப்பு
ஆனந்தவல்லி, ஊத்துக்குளி,
ராமசாமி, சிவகாசி
கோபால கிருஷ்ணன், சேலம் 16
வசந்தா, சென்னை - 24
நாராயணன், சென்னை - 5
தேவிபாலன், திண்டுக்கல் - 1
சிவசூரியன், தூத்துக்குடி - 2
சாய். தமிழ், வைத்தீஸ்வரன்கோவில்
வனஜா, திருநெல்வேலி - 11
சரஸ்வதி, மதுரை -16
பாரதி, சென்னை - 34
நளினி, சென்னை - 2
தியாகராஜன், அருப்புக்கோட்டை
முத்துவேல், தர்மபுரி
சித்ரா நாகராஜன், புதுவை - 7
சங்கரி புத்திரன், சென்னை - 17
சுப்புராஜ், பழநி
அண்ணாமலை, பட்டாபிராம்
சாவித்திரி, சென்னை - 91
ராஜேஸ்வரி, சென்னை - 41
கர்ணன், மயிலாடுதுறை
ஶ்ரீதரன், சென்னை - 35
ராமகிருஷ்ணன், சென்னை - 80
ராஜசேகர், சென்னை - 62
சிவகாமி, சென்னை - 41
கீதா முருகானந்தம், கும்பகோணம்
சுகந்தியா, திருவெண்காடு
உஷாராஜகோபாலன், சென்னை
பிரபாகர், சென்னை - 20
கீதா, கும்பகோணம்
மோகன், சென்னை - 86
ராஜகோபாலன், சென்னை
மதுமிதா, சென்னை - 78
லிங்கேஸ்வரன், சென்னை - 69
பாலாஜி கணேஷ், சிதம்பரம்
உமா, சென்னை - 41
தனலட்சுமி, சென்னை - 119
வடிவுக்கரசி, பரமக்குடி
தக்ஷிணாமூர்த்தி, சென்னை - 42
ஜீவா, மதுரை
கிருஷ்ணகுமார், சேலம்
ஹரிஹரன், சென்னை - 18
பானுமதி, காஞ்சிபுரம்
வளர்மதி, சென்னை - 4
சாய்சரண், சென்னை - 24
பிரேமலதா, மதுரை
கங்காதரன், தேனி