Published:Updated:

எங்கள் வீடு தேடி வந்தார் பாபா

ஸ்ரீசாயி
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீசாயி

ஸ்ரீசாயி சிறப்புக் கட்டுரை போட்டி - வாசகர் அனுபவம்!

எங்கள் வீடு தேடி வந்தார் பாபா

ஸ்ரீசாயி சிறப்புக் கட்டுரை போட்டி - வாசகர் அனுபவம்!

Published:Updated:
ஸ்ரீசாயி
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீசாயி

ஐந்து வருடங்களாக ஐ.டி. துறையில் பணியாற்றி வருகிறேன் நான். என்றபோதும் பல போராட்டங்களுடனான ஏற்ற தாழ்வுகளின் பயணமாகவே என் வாழ்க்கை இருந்தது. நல்ல வாய்ப்புகள் வருவதுபோல இருக்கும். ஆனால் அவற்றைப் பயன்படுத்த இயலாமல் கடந்துபோகும்.

அதனால் எந்த விதத்திலும் வளர்ச்சியை என் வாழ்வில் பார்க்க முடியவில்லை. இப்படியே வாழ்க்கை கடந்துபோய்விடுமோ என்கிற பயம் அதிகரித்தது. வாழ்வில் அடுத்த கட்டத்துக்கு நகரக் கடுமையாக உழைத்தும் என்னால் முன்னேற்றம் காணமுடியவேயில்லை. வாழ்க்கையையே வெறுத்து நின்றபோதுதான் இணையத்தில் ஒருமுறை சாய்பாபாவின் வார்த்தைகளை வாசிக்கும் பாக்கியம் கிடைத்தது.

ஏன் என்று தெரியவில்லை, அந்த வாக் கியங்கள் எனக்குள் பெரும் நம்பிக்கையை விதைத்தன.அன்றி லிருந்து தினமும் பாபாவின் பொன்மொழிகளைப் படிக்க ஆரம்பித் தேன். சாயியின் மீது நம்பிக்கை பிறந்தது. இரவு நேரத்தில் அவரை முழு மனதுடன் பிரார்த்தனை செய்து அன்றைய நாளின் செயல்களை ஒருமுறை அவரிடம் சொல்லிவிட்டுத் தூங்கச் சென்றேன்.

அடுத்த சில வாரங்களில் எதிர்பாராத மாற்றம் தெரிந்தது. எந்த வேலை கிடைத்தால் என் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று கனவு கண்டேனோ அந்த வேலையும், நல்ல வேலைச் சூழலும், நல்ல சம்பளமும் கிடைத்தன. தற்போது அங்குதான் வேலை பார்க்கிறேன். என் வாழ்க்கை இவ்வளவு அமைதியாகவும் ஆனந்தமாகவும் மாறும் என்று நான் நினைத்ததே இல்லை. இதற்கெல்லாம் காரணம் சாயி என் வாழ்க்கையில் வந்ததுதான்.

அடுத்த சில வாரங்களில் பாபா எங்கள் வீட்டிற்கு நாட்காட்டி வடிவில் வந்தார். அதுவும் ஒரு வியாழக்கிழமை அன்று.

ஆம், சக்தி விகடன் வெளியிட்ட நாட்கட்டி என் கைகளுக்குக் கிடைத்தது. சாயி பாபா எங்கள் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்த நாளிலிருந்து வீடு சுபிட்சமாக மாறியது. எவை எல்லாம் இருந்தால் வசதியாக இருக்கும் என்று நினைத்தேனோ அந்தப் பொருள்கள் எல்லாமும்கூட வாங்க முடிந்தது. இன்று என் வாழ்வில் இல்லை என்ற சொல்லே இல்லை.

அதற்குக் காரணம் ஸ்ரீசாயிதான். அவர்தான் எனக்குள் ஒரு பாதுகாப்பு உணர்வைக் கொடுத்து நம்பிக்கையோடு செயல்பட வைத்தார். எப்போதும் அவர் என்னோடு இருக்கிறார் என்கிற நம்பிக்கையே என்னை வெற்றிப்பாதையை நோக்கி நகர்த்தியிருக்கிறது என்று நினைக் கிறேன். என்னோடு இருந்து என்னையும் என் வீட்டையும் சாயி என்றென்றும் ஆசீர்வதிப்பார் என்பதை நான் முழுமையாக நம்புகிறேன். ஓம்  சாய்ராம்.

- ஆர்.ஜெயஸ்ரீ, சென்னை-45

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism