Published:Updated:

உதவலாம் வாருங்கள்

உதவலாம் வாருங்கள்
பிரீமியம் ஸ்டோரி
உதவலாம் வாருங்கள்

உதவலாம் வாருங்கள்

உதவலாம் வாருங்கள்

உதவலாம் வாருங்கள்

Published:Updated:
உதவலாம் வாருங்கள்
பிரீமியம் ஸ்டோரி
உதவலாம் வாருங்கள்

`சுபிட்சங்கள் அருளும் ஸ்ரீராம புஜங்காஷ்டகம்’

ஸ்ரீராம புஜங்காஷ்டகம்
ஸ்ரீராம புஜங்காஷ்டகம்

`ஸ்ரீராமபுஜங்கா அஷ்டகம் என்றொரு துதிப்பாடல் உண்டு. `பஜே விசேஷ ஸுந்தரம்’ எனத் தொடங்கும். ஸ்ரீராமனின் மகிமைகளைப் போற்றும் இந்தத் துதிப்பாடல் தமிழ் விளக்கத்துடன் தேவை’ என்று சக்தி விகடன் 26.7.22 தேதியிட்ட இதழில் திருநெல்வேலி வாசகி ரூபாவதி கேட்டிருந்தார்.

குறிப்பிட்ட துதிப்பாடலை சென்னை குரோம்பேட்டை வாசகி ஆவுடை நாயகி நகல் எடுத்து அனுப்பியுள்ளார். அந்தப் பாடல் வாசகி ரூபாவதிக்கு அனுப்பப்படுகிறது.

இந்தத் தோத்திரப் பாடல் வியாச மகரிஷியால் ராமனைப் போற்றிப் பாடப் பட்ட துதி என்பர். இதைப் படித்து ராமபிரானை வழிபடும் அன்பர்கள் சகல கீர்த்திகளையும் அடைவர். அளவற்ற செல்வமும் ஐஸ்வர்யமும் உண்டாகும் என்பது பெரியோர் வாக்கு. அற்புதமான ராமபுஜங்க அஷ்டகத்தின் தமிழ் விளக்கம் இங்கே உங்களுக்காக

1. அழகில் மிளிர்பவரும், பாவங்களைப் போக்குபவரும், பக்தர்களின் மனது களிக்கும் விதம் அருள்பவருமாகிய ராமபிரானைப் பூஜிக்கிறேன்.

2. ஜடைக்கூட்டத்தால் அழகுபெற்றவரும், பாவங்களை நாசம் செய்பவரும், பக்தர்களின் பயத்தைப் போக்குபவரும், தனக்கு நிகரில்லாதவரும் ஆகிய ராமனைப் பூஜிக்கிறேன்.

3.ஆத்ம ஸ்வரூபத்தை உபதேசிப்பவரும், கருணைக்கடலும், ஜனன - மரண பயத்தைப் போக்குபவரும், எங்கும் சமமாக இருப்பவரும், மங்கலத்தை அருள்பவரும், தோஷம் இல்லாதவருமாகிய இணையற்ற ராமனைப் பூஜிக்கிறென்.

4. உலகங்களுக்கு இருப்பிடமாய் இருப்பவரும், எப்போதும் உள்ளவரும், அழிவற்றவரும், இணையற்றவருமான ராமபிரானைப் பூஜிக்கிறேன்.

5. உலக சம்பந்தம் அற்றவரும், பாபமற்றவரும், நிர்குணமானவரும், தேஜோரூபியாகத் திகழ்பவருமான ராமனைப் பூஜிக்கிறேன்.

6. சம்சார சமுத்திரத்தைக் கடக்க உதவும் படகு போன்றவரும், எல்லா சரீரங்களிலும் நிறைந்தவரும், கருணைக் கடலும், நற்குணங்களின் இருப்பிடமுமான ராமபிரானைப் பூஜிக்கிறேன்.

7. மகா வாக்கியத்தின் பொருளை வெளிப்படுத்தும் - சிறந்த சொற்களால் கூறப்படும் பரபிரம்மமாகத் திகழ்பவரும் இணையற்றவருமான ராமபிரானைப் பூஜிக்கிறேன்.

8. மங்கலத்தை அருள்பவரும், சுகத்தை அளிப்பவரும், பிறப்பு, இறப்பு மற்றும் அஞ்ஞான பயத்தைப் போக்குபவரும், ஆசார்யராகப் பிரகாசிப்பவருமான இணையற்ற ராமனைப் பூஜிக்கிறேன்.

வீட்டில் விளக்கேற்றி வைத்து, இந்த வரிகளைச் சொல்லி ராமபிரானை அனுதினமும் வழிபட்டாலே போதும்; சகல சுபிட்சங்களும் வந்துசேரும்.

அண்மையில் தஞ்சை பெரியகோயிலை தரிசித்து வந்தோம். அங்கே ஒரு பிள்ளையார். அவரின் பெயர் `வாழைப்பழ பிள்ளையார்’ என்று தகவல் சொன்னார்கள். அதற்கான காரணம் என்ன? விவரம் அறிந்தவர்கள் தகவல் பகிருங்களேன்.

-கே.அருணா, தூத்துக்குடி

சிக்கல் முருகன் கோயிலில் உள்ளது போன்றே வேறு இரண்டு தலங்களில் முருகனின் சிற்பத் திருமேனி அமைந்திருக்கும் என்று அறிந்தேன். அவை என்னென்ன தலங்கள். இங்ஙனம் அமைப்பில் ஒரேமாதிரியான முருகனின் மூன்று சிற்பங்கள் மூன்று கோயில்களில் அமைய காரணம் என்ன? இதுபற்றிய புராணக் கதைகள் உண்டா?

-சி.சங்கர், அம்பாசமுத்திரம்

வழிபாட்டுப் பாடல் ஒன்றில் `ஏகபாததேவியே ரேவதிமாதா போற்றி’ என்று ஒரு வரி இருந்தது. சிவவடிவங்களில் ஏகபாத மூர்த்தி உண்டு என்று அறிந்திருக்கிறேன். அதேபோல் அம்பிகை மூர்த்தங் களிலும் ஏகபாததேவி உண்டா. விவரம் அறிந்தவர்கள் தகவல் பகிருங்களேன்.

-எம்.சுவாமிநாதன், பட்டீஸ்வரம்

குற்றாலத்தில் அருள்மிகு குற்றாலநாதருக்கு தினமும் கஷாயம் சமர்ப்பிப்பது உண்டு என்பார்கள். எப்போதும் குற்றால அருவியின் சாரலிலும் குளிர்ச்சியிலும் உறைந்திருப்பதால், அவருக்குக் மூலிகைக் கஷாயம் தேவை என்பது ஐதீகமாம். அதேபோல், ஏதோ ஓர் ஊரில் சிவலிங்கத்துக்கு வெந்நீர் அபிஷேகம் நடக்குமாமே? அது எந்த ஊர். மேலும் இதுபோன்று வித்தியாசமான வழிபாடுகள் நிகழும் சிவாலயங்கள் குறித்த தகவல்கள் இருந்தால் பகிருங்களேன்.

- பிவேலுமணி, திண்டிவனம்

அர்த்தஜாம பூஜை பூஜை என்பது இரவில் நடக்கும் வழிபாடு. ஆனால் கும்பகோணம் அருகே ஒரு சிவத்தலத்தில் மட்டும் இந்த அர்த்தஜாம பூஜை அதிகாலையில் நடக்குமாம். அந்த ஊரின் பெயர் திருக்கொள்ளம்புதூர் என்ற விவரத்தை துணுக்கு ஒன்றில் படித்தேன். இந்த ஊர் எங்குள்ளது, இப்படியான நடைமுறை அந்த ஆலயத்தில் கடைப்பிடிக்கப்படுவது எதனால்?

- கே,சுகுணா, சென்னை-37

மும்மூர்த்தியரின் அம்சமாகத் திகழும் தத்தாத்ரேயரைப் போற்றும் தோத்திரப் பாடல் தத்தநவரத்ன மாலிகா. தமிழ் விளக்கத்துடன் இந்த தோத்திரப் பாடல் எந்த நூலில் உள்ளது. எவரிடமேனும் இந்தப் பாடல் தமிழ் விளக்கத்துடன் இருந்தால் நகலெடுத்து அனுப்புங்களேன்; என் வழிபாட்டுக்கு உதவியாக இருக்கும்.

- க.இளங்கோ, சேலம்