Published:Updated:

உதவலாம் வாருங்கள்!

மயிலார் நோன்பு!
பிரீமியம் ஸ்டோரி
மயிலார் நோன்பு!

மயிலார் நோன்பு!

உதவலாம் வாருங்கள்!

மயிலார் நோன்பு!

Published:Updated:
மயிலார் நோன்பு!
பிரீமியம் ஸ்டோரி
மயிலார் நோன்பு!

விதுரரால் உபதேசிக்கப்பட்ட அறநூல் விதுரநீதி. இதுபோன்று போன்று மகாபாரதத்தில் வேறு என்னென்ன நீதிநூல்கள் சொல்லப் பட்டுள்ளன. அவை புத்தகமாகத் தொகுப்பட்டுள்ளனவா? விவரம் அறிந்தவர்கள் தகவல் பகிருங்களேன்.

- சி.ராதாகிருஷ்ணன், துறையூர்

மாசிமகம் கும்பகோணத்தில் விசேஷமாகக் கொண்டாடப்படும். இந்தத் திருநாளும் வைபவமும் கொண்டாடப்படும் வைணவத் தலங்கள் என்னென்ன? அதேபோல் மாசி தீர்த்தமாடல் வைபவம் குறித்த மகிமைகளும் விளக்கங்களும் தேவை.

- கே.பத்மநாபன், கோவை-2

சிவாலயங்களில் பஞ்சபுராணம் படிப்பதை அறிவேன். வீட்டில் அவ்வாறு பாடி வழிபடலாமா? அதன்பொருட்டு பன்னிரு திருமுறை களில் இருந்து எந்தெந்த பாடல்களைப் பாடி வழிபடலாம். வழிகாட்டுங்களேன்.

- தி.ஹரிஹரன், சேலம்

தீர்த்தச் சிறப்புகள் குறித்து தகவல் தொகுத்து வருகிறேன். திருச் செந்தூரில் சமுத்திரக் கரையில் அமைந்துள்ள நாழிக்கிணறு தீர்த்தம் பிரசித்தமானது. சமுத்திரக் கரை தலமான ராமேஸ்வரத்திலும் தீர்த்தக் கிணறுகள் உண்டு. இதுபோன்று வேறு எந்தெந்த தலங்களில் சமுத்திரத்தை ஒட்டிய நன்னீர் தீர்த்தங்கள் உள்ளன. விவரம் அறிந்தவர்கள் தகவல் பகிர்ந்தால் பயனுள்ளதாக இருக்கும்.

- கோவிந்த் ஹரிகரன், சென்னை-44

நாச்சியார்கோவில் கல்கருடன் மகிமையை அறிவோம். அதேபோல் பெருமாள் கோயில் ஒன்றில் ஆலய மதிலின்மீது இருக்கும் கருட பகவானுக்குச் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் என்றொரு தகவல் படித்ததாக ஞாபகம். அது எந்த ஊர் கோயில் என்ற விவரம் தேவை. தகவல் அறிந்தவர்கள் பகிர்ந்து உதவுங்களேன்.

- கா.ராஜேஸ்வரி, தூத்துக்குடி

சகல ஐஸ்வர்யங்களையும் அளிக்கவல்ல அற்புதமான துதிப்பாடல் ராமபுஜங்க அஷ்டகம். `பஜே விசேஷ ஸுந்தரம்...’ எனத் தொடங்கும் இந்தப் பாடலின் சில வரிகள் மட்டுமே நினைவில் உள்ளன. இந்தத் அஷ்டகம் முழுமையாக பொருள் விளக்கத்துடன் தேவை. எவரிடமேனும் இருந்தால் நகலெடுத்து அனுப்பி உதவுங்களேன்.

- கே.வெங்கடேஷ், மதுரை-5

கடந்த இதழில் `மயிலார் நோன்பு குறித்த விவரம் தேவை’ என்று திருச்சி வாசகி பி.மனோகரி கேட்டிருந்தார். 29.1.2010 தேதியிட்ட சக்திவிகடன் இதழில் பூசை ச.அருண வசந்தன் எழுதி வெளியான மயிலார் நோன்பு குறித்த விவரங்கள் இங்கே...

தமிழகத்தில், குறிப்பிட்ட சில சமூகத்தவரால் தை மாதத்தில் கொண்டாடப்படுவது மயிலார் நோன்பு. காணும் பொங்கல் விழா முடிந்த 6-ஆம் நாள் அல்லது 8-ஆம் நாளில், மயிலார் நோன்பு கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், வீட்டின் மையப் பகுதியில், திருவிளக்கேற்றி, பூஜை மாடத்தின் சுவரில் பச்சிலைகளைத் தேய்த்து, அதில் விரித்த தோகையுடன் கொண்ட அழகிய மயிலை ஓவியமாக வரைவர்! அந்த மயிலுக்கு மஞ்சள்- குங்குமமிட்டு அலங்கரிப்பர். மயில் வரையும் போது அதன் மீது குறுக்குவாட்டில் வேலாயுதம் வரைவோரும் உண்டு!

உச்சி (மதியம்) வேளையில்... வடை, கொழுக்கட்டை, சுண்டல் முதலானவற்றை வைத்துப் படையலிடுவர். அப்போது சாதத்தை, ஆறு அல்லது பன்னிரண்டு சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து, மூன்று மயிலிறகுகளை அதில் வைத்து உருட்டி வைப்பர்.

இதையடுத்து தூப-தீபம் காட்டி, பிரார்த்தனை செய்ததும் சாத உருண்டைகளை எடுத்து அப்படியே விழுங்குவர். தீராத நோய் மற்றும் உடல் தளர்ச்சி கொண்டவர்கள், இந்த சாத உருண்டையைச் சாப்பிட்டால் உடனே சிக்கல்கள் யாவும் நீங்கி, வளம் பெறுவர் என்பது நம்பிக்கை. இதனை ‘மயில்புடி’ என்கிறார்கள்.

சில பகுதிகளில் தைப் பொங்கல் திருநாளில், நெசவாளர்கள் தங்களது நெசவுத் தொழிலுக்கு விடுமுறை கொடுக்கின்றனர். மயிலார் நோன்பு விழாவுக்குப் பிறகே தொழிலைத் துவங்குகின்றனர். இந்த நாளில் மொச்சைக் கொட்டையைச் சுண்டல் செய்து, படைத்துச் சாப்பிடுவது வழக்கம். இது குறித்த நாட்டுப்புறப் பாடல் ஒன்றும் உள்ளது. மயிலார் நோன்பை ‘மயில் பண்டிகை’ என்றும் அழைக்கின்றனர்