Published:Updated:

உதவலாம் வாருங்கள்

உதவலாம் வாருங்கள்
பிரீமியம் ஸ்டோரி
உதவலாம் வாருங்கள்

ஆதிபுரியும் அத்தி மரமும்!

உதவலாம் வாருங்கள்

ஆதிபுரியும் அத்தி மரமும்!

Published:Updated:
உதவலாம் வாருங்கள்
பிரீமியம் ஸ்டோரி
உதவலாம் வாருங்கள்

திருவாரூர் மாவட்டம், திருவாதிரைமங்கலம் கிராமத்தில் புதிதாகக் கோயில் ஒன்று கட்டியுள்ளோம். இந்தக் கோயிலின் ஸ்தல விருட்சமாக செங்காலி மரம் நடவேண்டும் என்று வழிகாட்டல். இந்த மரத்தின் கன்று எங்கு கிடைக்கும், எப்படிப் பெறுவது? விவரம் அறிந்த அன்பர்கள் வழிகாட்டி உதவுங்களேன்.

- வி.ராதாகிருஷ்ணன், மயிலாடுதுறை

சென்னையில் பஞ்ச பூதத் தலங்களும் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் எந்தெந்த கோயில்கள் என்பதில் பெரும் குழப்பம் இருந்து வருகிறது. குறிப்பிட்ட தலங்களுக்குச் செல்வதற்கான விவரங்களைத் தெரிந்தவர்கள் சொன்னால் உதவியாக இருக்கும்.

- கே.மதிவாணன், சென்னை-45

எங்கள் நாட்டியப் பள்ளிக்கு குறவஞ்சிப் பாடல்கள் தேவைப்படுகின்றன. குற்றால குறவஞ்சி, விராலிமலை குறவஞ்சி போன்று வேறு ஏதேனும் இனிமையான குறவஞ்சிப் பாடல்கள் இருந்தால் சொல்லுங்களேன்.

- பா.கௌரி மனோகரி, சேலம்

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் என் பாட்டி ஐதிகப்படி வில்லுண்டி தீர்த்தம் தொடங்கி காசி யாத்திரை சென்று வந்தார்களாம். இப்போது அந்த முறையான பயணத் திட்டம் எங்களுக்கு தெரிய வில்லை. இது தொடர்பான புத்தகம் ஏதும் உள்ளதா, தெரிந்தவர்கள் சொல்லவும்.

- இரா.பழனியப்பன், காரைக்கால்

வீட்டில் சண்டி ஹோமம் செய்யலாமா? செய்யலாம், செய்யக்கூடாது என்று இரண்டுவிதமான கருத்துக் களும் கூறப்படுகின்றன. இதுகுறித்த வழிகாட்டல் கிடைத்தால் உதவியாக இருக்கும்.

- ஆர்.சரண்யா, செங்கல்பட்டு

எங்கள் பெற்றோருக்கு சதாபிஷேகம் நடத்த வுள்ளோம். இப்போது உள்ள சூழலில் திருக்கடையூர் போன்று வெகு தூரம் செல்ல முடியவில்லை. அதனால் சென்னையிலேயே சதாபிஷேகம் செய்ய ஏதேனும் சிறப்பு திருத்தலம் உள்ளதா?

- எம்.எஸ்.சுந்தரம், சென்னை-56

ஆதிபுரியும் அத்தி மரமும்!

`அத்தி மரம் ஸ்தல விருட்சமாக உள்ள தலம் குறித்த விவரம் தேவை.சென்னைக்கு அருகில் அப்படியான கோயில்கள் உள்ளனவா?' என்று சக்தி விகடன் சென்ற இதழில் சென்னை வாசகர் கே.மகேஷ் கேட்டிருந்தார். அவருக்காக... சக்தி விகடன் (8.3.2011) இதழில் ஆலய விருட்சங்கள் தொடரில் இடம்பெற்ற திருவொற்றியூர் கோயில் விவரங்கள் இங்கே...

கார்த்திகை - முருகக்கடவுளுக்கு உகந்த நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களில் பெரும்பாலானோர், பேச்சுத்திறன் மிகுந்தவர்கள். குறைவாகத் தூங்கும் இயல்புடையவர். இவர்களின் அறிவாற்றலும் சாமர்த்தியமும் மற்றவர்களை வியக்கவைக்கும். நல்ல பதவிகளும் அந்தஸ்தும் இவர்களைத் தேடி வரும்.

கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, வெள்ளிக்கிழமை மற்றும் ஏப்ரல் 21 முதல் மே 20-வரையிலான நாட்கள், அதிகம் நன்மை தருபவையாக அமையும். இந்த நட்சத்திரத்துக்கு உகந்த மரம்- அத்தி. இதன் குச்சிகளை எரித்தால் வெளிவரும் புகைக்கு, கார்மேகங்களைக் கவரும் ஆற்றல் உண்டு என்கிறது வானவியல் மூலிகை சாஸ்திரம்.

தத்தாத்ரேய மகரிஷி அத்தி மரத்தில் அமர்ந்திருப்பதாக குரு சரித்திரம் கூறுகிறது. 'அசுர குரு சுக்கிராசார்யரின் மறுபிறவியே அத்தி மரம்’ என்கிறது சாதுர் மாஸ்ய மஹாத்மியம். நரசிம்ம அவதாரம் எடுத்த மஹாவிஷ்ணு ஹிரண்யகசிபுவை அழித்தபிறகு, அத்தி மரப் பட்டையில் நகங்களைப் பதித்துச் சுத்தப்படுத்திக்கொண்டதாக புராணத்தில் ஒரு குறிப்பு உண்டு.

சென்னை திருவொற்றியூர்- அருள் மிகு வடிவுடையம்மன் உடனுறை அருள்மிகு தியாகராஜ ஸ்வாமி ஆலயத்தின் (ஆதிபுரீஸ்வரர் திருக்கோயில்) ஸ்தல விருட்சமும் அத்தி மரமே.

சுந்தரர், திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர் ஆகிய மூவரும் பாடிப்போற்றிய தலம் இது. பட்டினத்தடிகள் முக்திபெற்றதும் இங்குதான். இந்தக் கோயிலில் வடிவுடையம்மனுக்கு முக்கியத்துவம் அதிகம். பிரம்மன் உலகைப் படைக் கும் முன்பே தோன்றிய ஆதி ஊர் இது என்கின்றன புராணங்கள். ஆகவேதான் இங்குள்ள ஈசனுக்கு ஆதிபுரீஸ்வரர் என்று திருப்பெயர்.

லவன் ராஜசூய யாகம் நடத்திய தலம் இது. ஆதிசங்கரர் இங்கு வந்து வழிபட்டுள்ளார். வள்ளலார், கவிச் சக்ரவர்த்தி கம்பர் ஆகியோர் இங்கு தங்கி, வடிவுடையாளை அனுதினமும் வழிபட்டதற்கான சான்றுகள் உள்ளன. 27 நட்சத்திர லிங்கங்கள் இக்கோயிலின் சிறப்பம்சம் ஆகும். சிவப் பரம்பொருள் அமர்ந்த நிலையில் இங்கு நடனம் ஆடுவது விசேஷம்தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism